Monday 12 July 2010

ஆஹா ஆக்டபஸ்





                 நடந்து முடிந்த உலகக் கால் பந்து போட்டியில் ஆட்டக்காரர்களைவிடவும் அதிகப் புகழ் பெற்றது Paul என்ற octopus தான்.  எட்டு போட்டிகளின் முடிவுகளை 100% சரியாகக் கணித்தது இந்த ஆக்டபஸ்.  அதுவும் இறுதிப் போட்டி முடிவையும் சரியாகக் கணித்து உலகப் புகழ் பெற்றுவிட்டது. (personally I feel, Netharlands deserved the victory, என்ன செய்ய ஆக்டபஸ் கடவுளுக்கு அது தெரியலையே!!!).  இப்பொழுது ஸ்பெயின் நாட்டு பெரும்புள்ளி ஒருவர் $38,000 கொடுத்தும், அந்நாட்டு பிரதமரும் எப்படியாவது அதைத் தங்கள் நாட்டு உடமையாக்கப் பாடுபடுகிறார்கள்.  இத்தாலியோ அது பிறப்பால் தங்கள் நாட்டுக்குச் சொந்தம் என்கிறது. இன்னும் என்னென்ன காமடி நடக்கும் என்று நினைத்துப் பார்த்தால் சுவையாகத்தான் இருக்கிறது.

             Aliens-யும் dinosaur-ஐயும் படமெடுத்து போரடித்துப் போன ஹாலிவுட் டைரக்டர்கள் ஆக்டப்ஸை வைத்துப் படமெடுக்கலாம்.  இந்த Paul octapus-க்குக் கால்ஷீட் கேட்டு க்யூவில் நிற்கலாம்.  ஆக்டபஸ் குழந்தைகளின் most favorite pet animal ஆகலாம்.  இந்த கிருஸ்மஸில் octopus toyதான் குழந்தைகளின் most wanted பொம்மையாகலாம்.

            நம்ம ஊரில் கிளி ஜோசியக்காரர்களெல்லாம் ஆக்டபஸ் ஜோசியத்திற்கு மாறலாம்.  இப்பவே ஆக்டபஸ் மிகவும் அறிவில் சிறந்தது (இது உண்மையே) அது இது என்று நிறைய கருத்துக்கள் இணையத்தில் உலா வருகின்றன.  கூடிய விரைவில் 'உங்கள் குழந்தைகளின் நினைவாற்றலை வளர்க்க அளியுங்கள் ஆக்டபஸிலிருந்து தயாரிக்கப்பட்ட தைலம், மாத்திரைகள்' என்று விளம்பரங்கள் வரலாம்.  'ஆக்டபஸ் உங்கள் வீட்டு மீன் தொட்டியிலிருந்தால்  வீட்டிற்கே அதிர்ஷ்டம், குழந்தைகளுக்கு அதன் மூச்சு காற்று பட்டால் நினைவாற்றல், புத்திசாலித்தனம் மேம்படும்" என்று ஆக்டபஸை விற்கத் தொடங்குவார்கள்.  யார் கண்டது, ஆக்டபஸ் வைத்து தயாரிக்கப் பட்ட உணவு வகைகளுக்குப் பெரும் டிமாண்ட் தோன்றலாம்!!!. ஆக்டபஸிற்கு ஜோஸ்யம் கற்றுக் கொடுக்கிறேன் என்று டிரைனர்களும் புதிதாகத் தோன்றலாம்.

             கால் பந்தாட்டத்தில் ஆக்டபஸ் ஜோஸ்யம் புகழ் பெற்றதும் நம்ம மக்களும் மீடியாவும் சும்மா இருப்பார்களா? அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் கணிக்க இப்பவே எட்டுக் கால் பூச்சி, ஈ, வண்ணத்துப் பூச்சி என்று பலவற்றைப் பழக்க வேண்டியதுதான்.  கிளி ஜோசியக் காரர்களும் மனம் தளராது விடா முயற்சி செய்யவும்.

             சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, '2012-ல் ஆட்சியைப் பிடிப்போமா' என்று அறிய நிறைய அரசியல் தலைவர்கள் Paul-லின் appointment டிற்காக வைட்டிங்காம்.  சிலர் கட்சிதலைவர்கள் 'தேர்தலில் சீட்டு கேட்கலாமா வேண்டாமா' என்று அறிய ஆவலாக இருக்கிறார்களாம் (எந்தக் கட்சி என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.). பல நடிகர்களும் 'இந்த படம் ஓடுமா இல்லையா' என அறிய ஜெர்மனிக்கே போயிருக்கிறார்களாம்.  நம்ம ப.சிதம்பரம் ஐயாவிடமிருந்துதான் 'தெலுங்கானா, நக்ஸலைட் விவகாரம் என்று பல விஷயங்களுக்கு விடை கேட்டு அதிகக் கேள்விகள் போனதாகத் தகவல்.  எங்க ஊரில் 12-ம் வகுப்பு படிக்கும் சுரேஷுக்கும் பரிட்சையில் பாஸாவோமா என்ற கவலை.  யாரவது அந்த ஆக்டபஸிடம் கேட்டுச் சொல்கிறீர்களா?!!!!!