Thursday 29 April 2010

ஏட்டுச் சுரைக்காய்

               டெல்லி யூனிவெர்சிட்டியில் professor ஒருவர் 1968ம் வருடம் ஆராய்ச்சி செய்ய கனடாவிலிருந்து gamma ccell counter ஒன்றைத் தருவித்திருக்கிறார்.  அவர் ஆராய்ச்சியெல்லாம் முடித்து 1985-ம் ஆண்டு ஓய்வும் பெற்றுவிட்டார்.  பல வருடங்கள் பயனற்று இருந்த அதை ஏதோ பழைய சைக்கிளை காயலான் கடைக்குப் போடுவது போல் போட்டுவிட்டார்கள்.  அதைப் பிரித்து விற்கும் வேலையில் பாவம், படிக்காத பாமரர்கள் பலரும் cobalt-60 என்ற கதிரியக்கம் கொண்ட வேதிப் பொருளின் கதிர்வீச்சிற்குப் பலியாகி உள்ளனர்.
ஒரு scrap market-ல எப்படி radioactive material வந்தது என்று ஆய்வு செய்து இந்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மிகவும் அபாயகரமான கதிர்வீச்சுள்ள பொருளுடன் ஆராய்ச்சி செய்த அந்த professor ஓய்வு பெறுமுன் முறைப்படி அந்த instrument-ஐத் திருப்பி அனுப்பியிருக்கவேண்டும். அல்லது அதைப் பயன்படுத்தக் கூடிய BARC போன்ற நிறுவனங்களுக்குக் கொடுத்திருக்கலாம்.
Department-ல் தேவையற்ற கருவிகளை ஏலம் இடும்போது, மெத்தப் படித்த professors அதைப் பற்றி நன்கு படித்து அறிந்த பின்னரே அவற்றை dispose செய்யத் தீர்மானிக்கவேண்டும்.
மெத்தப் படித்தவர்களின் மெத்தனப் போக்கால் பாமர மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.  

டெல்லி யூனிவர்சிட்டி மட்டுமல்ல, பல பெரிய கல்வி நிறுவனங்களிலும் hazardous chemicals- அலட்சியமாகப் பயன்படுத்துவதும், dispose செய்வதும் நடக்கிறது.  இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவில் கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகளில் garbage disposal-ஐக் கவனமாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலதிக விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் படிக்கவும்

http://timesofindia.indiatimes.com/city/delhi/Radioactive-metal-Chem-dept-head-in-dark-V-C-says-shocking-/articleshow/5870791.cms

http://timesofindia.indiatimes.com/city/delhi/Radioactive-metal-Chem-dept-head-in-dark-V-C-says-shocking-/articleshow/5870791.cms


(அணுவின் கருவில் protons மற்றும் neutrons இருக்கின்றன. protons இடையே இருக்கும் எதிர்விசையால் அணுக்கரு உடைவதற்கு முற்படும்.  அதைத் தடுக்க neutrons பயன்படுகிறது.  when the ratio of neutrons to protons exceeds 1.6 then that element is radioactive.)

அந்த நாள் ஞாபகம் - 2

               அந்த வார இறுதியில் என் மகன் விஜயுடன் வினோதும் வீட்டிற்கு வந்தான்.  பெரும்பாலும் விஜயுடனே நேரத்தைக் கழித்தான்.  நேதனிடம் ஓரிரு வார்த்தைகளையே பேசினான்.  ஆனால் நேதனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்ததாக அவருக்குத் தோன்றியது.  அடுத்த மாதத்தில் இருமுறை வீட்டிற்கு வந்தான்.  கொஞ்சம் கொஞ்சமாக நேதன் மற்றும் அவரின் மனைவியிடம் பேசத்தொடங்கினான். இப்படியாக நேதனுக்கு மிகவுமே நெருக்கமானான்.  இப்பொழுதெல்லாம் வார இறுதியில் விஜயை விட வினோதை அதிகம் எதிர்பார்க்கத் தொடங்கினர் நேதன் தம்பதிகள். கலகல என்றில்லாவிட்டாலும் நிதானமான, தெளிவான அவன் பேச்சு அவர்களை ஈர்த்தது.
          
              அந்த வருடம் விஜயின் பிறந்த நாளுக்கு அவனுக்கு ஒரு காரைப் பரிசளித்தார் நேதன்.  விஜய் திறமையாகக் கார் ஓட்டுவான்.  புதிய காரில் நேதன், அவரின் மனைவி மற்றும் வினோதை நயாகராவிற்கு அழைத்துச் சென்றான் vijay.   நேதன் வினோதையும் டிரைவ் பண்ண சொல்லி வற்புறுத்தினார்.

              "Uncle, சின்ன வயசிலேர்ந்தே எனக்கு கார் என்றால் பயம்.  கார் பொம்மைகூட விரும்பியதில்லையாம்.  அதுவும் remote control car வைத்து யாராவது விளையாடினால் பயத்தால் என் அப்பாவின் மீது ஏறிக்கொள்வேனாம்.  இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை.  காரில் பயணம் செய்யுமளவு தைரியம் வந்திருக்கிறது" என்றான் வினோத்.  " அதுக்கெல்லாம் கவலைப் படாதே.  என் அப்பாவிற்கு வாரத்திற்கு மூன்று நாளாவது காரில் யாரையோ இடித்துவிடுவது போல் கனவு வரும்.  வியர்த்து எழுந்து உட்காருவார்.  ஆனால் டிரைவிங்கில் கில்லாடி.  இதுவரை ஒரு traffic violation கூட பண்ணியது கிடையாது. அதனால நீயும் தைரியமாக driving கத்துக்கோ" என்றான் விஜய். வினோத் மெல்லியதாகப் புன்னகைத்தான்.

             அதற்குப் பின் வினோத் வரும்போதெல்லாம் ட்ரைவிங் பற்றி பேசி, அவனின் பயத்தைப் போக்கி அவனுக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுத்து, லைசன்ஸும் வாங்கச் செய்தார் நேதன்.  வினோதிற்கு நடுவில் ஒருமுறை வைரல் ஜுரம் வந்தபோது தன் வீட்டிலேயே ஒருவாரம் தங்கச் செய்து அவனைப் பார்த்துக் கொண்டார்.  நேதனின் மனைவிகூட "பார்த்துங்க. ஒரு நாள் விஜய்க்குப் பதில் வினோத் பேர்ல சொத்தெல்லாம் எழுதி வைச்சுடப் போறீங்க!!" என்று கேலி செய்தாள்.  'ஏன் வினோதிடம் தனக்கு இந்த ஒட்டுதல்?என்று எண்ணிப் பார்த்தார்; பதில் தெரியவில்லை.  வினோதின் வருகையால் தன் மனதில் ஒரு நிம்மதி ஏற்படுவதும் கடந்த சில மாதங்களாக கார் விபத்து பற்றிய night mare வராமலிருப்பதும் நேதனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

               விஜய் மேற்படிப்புக்காக USA சென்றான்.  வினோதும் கோடைக்கால விடுமுறையில் Sherbrooke university-ல் summer project செய்ய சென்றான்.  இடையில் ஒரு long weekend விடுமுறைக்கு நேதன் family-யுடன் கழிக்க வந்திருந்தான். நேதன் தானே அவனை sherbrooke -க்கு காரில் கூட்டிச் சென்றார்.  வினோதிடம் பல விஷயங்களைப் பேசிக்கொண்டே சென்றதில் 3 மணி நேரப் பயணம் சுவையானதாக இருந்தது நேதனுக்கு.  Sherbrooke ஒரு அழகான நகரம்.  நகரமே யூனிவர்சிட்டியைச் சார்ந்தே இருக்கிறது.  எங்கும் students-தான் அகதிகம் தென்படுவதால் நேதனுக்கே பத்து வயது குறைந்தாற்போல் உணர்ந்தார்.  பச்சை பசேலென்ற புல் வெளியும், french மக்களுக்கே உரிய ரசனையுடன் பூச்செடிகள் நிறைந்த வீடுகளும் நேதனை மிகவும் கவர்ந்தது.  வினோதின் appartment யூனிவர்சிட்டியிலிருந்து பத்து நிமிட நடை தூரத்தில் இருந்தது.  அருகிலேயே safe way (24h shop), cumberland போன்ற பெரிய கடைகளும், பஸ் ஸ்டாப்பும் இருந்தன.  இருவரும் வினோதின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, நகரின் அழகை ரசித்துக் கொண்டே walk போனார்கள்.

             மாலை ஏழு மணியளவில் நேதன் டொரொண்டோவிற்கு திரும்ப கிளம்பினார்.  அப்போதுதான் கார் டிக்கியில் ஒரு bag இருப்பதைப் பார்த்து அதை வினோதுடையதா என்று கேட்டார்.  வினோத் "uncle, என்னுடையதில்லை. aunty ஏதாவது வைச்சிருப்பாங்க. பிரிக்காதீங்க.  கோவப்படப் போறாங்க" என்று சொல்லி டிக்கியை அழுத்தி மூடினான்.

              திரும்பி வரும்போது நேதனுக்கு பயணம் கொஞ்சம் அலுப்பாக இருந்தது. Freeway வந்ததும் 100km/h என்று வேகத்தைக் கூட்டினார்.  ஐந்து நிமிடத்தில் வினோதிடமிருந்து ஃபோன் வந்தது.  " என்ன uncle, freeway-ல போயிண்டிருக்கீங்களா?' என்றான்.  "ஆமாம்.  வேகமாகப் போனால் சீக்கிரம் போலாம்." என்றார் நேதன்.
"வேகமாகவே போங்க.  வேகத்தை 50-க்குக் கீழே குறைக்காதீங்க.  ஏன்னா உங்க காரில் இருக்கும் bomb வெடிக்கும்" என்றான்.
" is this some kind of prank? freeway-ல போகும்போது விளையாடாதே" என்று ஃபோனைக் கட் செய்தார்.
திரும்பவும் வினோதிடமிருந்து ஃபோன். "uncle, உங்கள் கார் டிக்கியில் ஒரு பேக் இருந்தது இல்ல, அதில்தான் பாம் இருக்கு" என்று கொஞ்சம் கடுமையான குரலில் பேசினான்.
" நீ சொல்றதை நான் எப்படி நம்புவது?" என்றார் நேதன் நம்பிக்கையில்லாமல்.
" o.k. பல வருஷங்களுக்கு முன்னால, மதுரைப் பக்கம் ஒரு மனுஷனை காரால் இடித்துக் கொன்னீங்க இல்ல.  அவனோட மறு பிறவிதான் நான்.  இப்ப பாம் விஷயத்தை நம்புவதும் நம்பாததும் உங்க இஷ்டம்" என்றான் வினோத். "but....how...." என்று நேதன் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கையிலேயே அவரின் mobile-ல் charge தீர்ந்துவிட்டது.

              சே!, charger எடுக்கவில்லையே என்று தன்னையே நொந்து கொண்டார் நேதன்.  'கார் விபத்து அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.  டிக்கியில் ஒரு பையை வலுக்கட்டாயமாக வினோத் இருக்க வைத்ததும் உண்மைதான்!!.  ஒருவேளை உண்மையாகத்தான் பாம் வைத்திருக்கிறானோ?  ஐயோ! விஜயும் அகிலாவும் நான் இல்லாமல் தவிப்பார்களே!  இங்கு உறவினர்களே இல்லையே!! விஜயின் படிப்பே இன்னும் முடியவில்லையே! சே, இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருக்கலாமோ?' என்று மனம் புலம்பியது.

             'தெய்வம் நின்று கொல்லும் என்று கேட்டதில்லையா?  நீ செய்த தப்புக்கு தண்டனை.  அதுவும் கொன்னவன் கையாலேயே.  உனக்கு நல்லா வேணும்' என்று இன்னொரு மனசாட்சி. என்ன செய்வது என்று குழம்பியவாறே freeway exit அருகில் வந்துவிட்டார். ''அடுத்து ஸிக்னல் வரும்.  நின்றால் என்னோடு 4-5 innocent மக்களாவது செத்துப் போவார்கள்.  ஒரு மரணத்துக்கே இந்த பிறவி முழுக்க கஷ்டப் பட்டாச்சு.  அடுத்த பிறவிக்கும் சேர்த்து பாவம் செய்ய வேண்டாம்.Freeway யிலிருந்து Exit ஆனவுடன் pullover செய்வோம்.  செத்தாலும் நான் மட்டும்தானே சாவேன்' என்று எண்ணியவாறே pullover செய்யத் தயாரானார்.  அதற்குள் நெஞ்சின் மீது பத்து பேர் குத்தாட்டம் போடுவது போல் ஒரு வலி.  காரை நிறுத்தினாரா, வெளியில் வந்தாரா என்று தெரியவில்லை.  கைகளும் கால்களும் அனிச்சையாக வேலை செய்ய blackout ஆனார் நேதன்.
---------தொடரும்

Monday 26 April 2010

அந்த நாள் ஞாபகம்... (1)

              நல்ல தூக்கத்திலிருந்த நேதன் திடுக்கிட்டு விழித்தார்.  அதே கனவு மறுபடியும்!!. குளிர் காலத்திலும் உடல் முழுதும் வியர்த்துவிட்டிருந்தது.  அருகே அமைதியாகத் தூங்கும் மனைவியைப் பொறாமையோடு பார்த்தார்.  தூக்கம் வராததால், டீ போட்டுக்கொண்டு, ஜன்னல் திரையை விலக்கி பனிப் பொழிவைப் பார்த்தவாறே கடந்த காலத்தை அசைபோடத் தொடங்கினார்.

             எத்தனை வருஷங்கள் ஆகிவிட்டன!.  இருந்தாலும் அந்த நாளை மறக்க முடியவில்லையே!  கனடாவிற்குக் குடிபெயர்வதற்கு முன்தினம் நடந்தது.  அம்மாவைப் பார்க்க மதுரைப் பக்கம் இருக்கும் கிராமத்திற்குச் சென்ற அவர் காரில் வேகமாக சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்.  மனைவியும் மகனும் அவருக்காகச் சென்னையில் காத்திருந்தார்கள்.  மறு நாள் இரவு கனடாவிற்குக் குடிபெயர வேண்டும்.  கொஞ்சம் சீக்கிரம் போனால் சிலமணி நேரமாவது ரெஸ்ட் எடுக்கலாம் என்ற எண்ணத்தில் வேகமாகக் காரை ஓட்டி வந்தார்.  அதிகாலை நேரம்.  கண்களில் கொஞ்சம் தூக்கக் கலக்கம் வேறு.  களைப்பாலும், அவசரத்தாலும் வளைவில் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த மனிதரைக் கவனிக்கவில்லை.  இடித்துவிட்டு பத்தடி போனபின்தான் உறைத்தது.  பின்னால் வந்து பார்த்தால், அந்த மனிதர் (35- 40 வயது இருக்கும்)  'தண்ணீர்! தண்ணீர்!' என்று ஈன ஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தார்.  அடி எதுவும் பட்டது போல் தெரியவில்லை.  என்ன செய்ய என்று திகைத்து நிற்கையிலேயே அடிபட்டவர் மயங்கிவிட்டார்.  ரோட்டில் ஆளரவம் இல்லை.  இவரை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரி போகலாமா?  கேஸ் அது இது என்றாகிவிட்டால், கனடா எப்படி போவது? வெகுதூரத்தில் ஒரு வாகனம் வருவது தெரிந்தது.  'கடவுளே இவரைக் காப்பாற்று.  நான் நாளை கனடா சென்றே ஆகவேண்டும்.  என்னை மன்னித்து விடு' என்று எண்ணியவாறு அந்த வாகனம் வருவதற்கு முன் செல்ல வேண்டும் என்று வேகமாகக் காரைச் செலுத்தினார்.  வீடு வந்து சேரும்வரை மிகப் பதட்டமாக இருந்தது.  அந்த மனிதர் பிழைத்திருப்பாரா?  கடவுளே காப்பாற்று என்று வேண்டிய வண்ணம் இருந்தார். அன்று முழுதும் வீட்டில் calling bell அடிக்கும்போதெல்லாம் திகிலோடு கதவைத் திறந்தார்.  மறு நாள் விமானத்தில் ஏறும் வரை எந்த நேரமும் போலிஸ் வருமோ என்ற பயத்திலேயே கழித்தார்.

              கனடாவிற்கு வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று நல்ல நிலையில் இருக்கிறார்.  ஸ்வாமினாதன் என்ற அவர் பெயர் 'நேதன்' ஆகச் சுருங்கிவிட்டது.  மகனுக்குத் தமிழ் மறந்துவிட்டது.  மனைவிக்குப் புடவை மறந்துவிட்டது. எல்லோரும் கனடா வாசத்தில் மூழ்கிவிட்டாலும் நேதனால் அந்த கார் விபத்தை மறக்க முடியவில்லை. அடிக்கடி கனவில் வந்து அந்த நிகழ்ச்சி அவரை வாட்டியது. அந்த மனிதனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.  அந்த குற்ற உணர்ச்சியை மறைக்க இந்தியாவில் பத்து பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டிருக்கிறார். நிறைய நல்ல காரியங்கள் செய்ய பணம் அனுப்புகிறார்.  எதுவுமே அவரின் குற்ற உணர்ச்சியைக் குறைக்கவில்லை.  நான்கு வயதில் கனடா வந்த மகன் இன்று டொரொண்டோ யூனிவர்ஸிட்டியில் படிக்கிறான்.  காலம்தான் எத்தனை வேகமாக ஓடுகிறது!!  இதுவரைக் கனவைப் பற்றி மனைவி மகனிடம் கூறியிருக்கிறாரே தவிர விபத்தைப் பற்றி யாரிடமும் மூச்சு விடவில்லை.  மனைவியும் மகனும் 'கொலைகாரப் பாவி' என்று தன்னை ஒதுக்கிவிடுவார்களோ என்ற பயம்!!.

               "என்னங்க, தூங்கலையா? வழக்கம்போல் அந்த nightmare-ஆ? ஏன் இப்படியென்று psychoanalyst-ஐப் பாருங்கள் என்றாலும் போக மறுக்கரீங்க." என்ற மனைவியின் குரல் கேட்டு திரும்பினார்.   "ஒண்ணும் கவலப்பட இல்ல. சீக்கிரம் எழுந்ததும் நல்லதுதான்.  இன்னக்கி விஜயை காலஜில் drop பண்ணனுமில்லை. கிளம்பினால் சரியாயிருக்கும்" என்று நேதன் அன்றைய அலுவல்களுக்குத் தயாராகலானார்.

             மகன் விஜயை யூனிவர்சிட்டியில் விட்டுக் கிளம்ப எத்தனித்தார்.  "hi, vijay" என்றபடி வந்த நண்பனை, "அப்பா, இதுதான் வினோத். chem.engineering first year பண்ணறான்." என்று அறிமுகப்படுத்தினான்.  அந்த வினோதின் கண்களில் தன்னைப் பார்த்ததும், ஆச்சரியம், கோவம், வெறுப்பு கடைசியில் ஒரு நிறைவு என்று பல உணர்ச்சிகள் மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்ததைக் கவனித்தவாறே, " hai, I am nathan.  nice to meet u.  come home when u get time" என்று சம்பிரதாயமாகக் கூறியவாறு அலுவலகம் நோக்கிக் காரைச் செலுத்தினார்.

----------தொடரும்

Thursday 22 April 2010

போடு தோப்புகரணம்!







சசிதரூர் & லலித்மோதி :
                                                                    "உன்னாலே நான் கெட்டேன்!!
                                                                     என்னாலே நீ கெட்ட!!"


 IPL க்ரிகெட் ரசிகர்கள் :
                                      
                                                                      "உங்களால நாங்க கெட்டோம்!!"

Tuesday 20 April 2010

ஸ்வாமி மலை

              நான் (ஸ்னேகா) வேலையெல்லாம் முடித்துவிட்டு Lehninger Principles of Biochemistry புத்தகத்தை எடுத்துப் படிக்க உட்கார்ந்தேன்.  படிக்க உட்கார்ந்தேன் என்றவுடன் காலேஜ் ஸ்டூடண்ட் என்று நினைக்காதீங்க. அதெல்லாம் பதினோரு வருஷத்துக்கு முன்னாலேயே முடிச்சாச்சு.  அப்புறம் ஏன் படிக்கிறேன்னு கேக்கறீங்களா?  சொல்றேன்.

             +2-வில் நிறைய மார்க் வாங்கி அண்ணா யுனிவர்சிட்டியில் B.Tech (industrial biotech) படித்தேன்.  படிச்சேன்னா, சும்மா இல்ல; காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், professors, ஏன் principal கூட 'யாரிந்தப் பொண்ணு' என்று வியந்து பார்க்கும்படி படிச்சேன்.  Biotech உலகத்தையே தலைகீழே புரட்டிப் போடவேண்டும் என்ற வெறியில் படித்தேன்.  ஆனால் final year முடிச்சவுடனே கல்யாணம்.

                அவரைப் பார்த்தவுடனே என் கனவெல்லாம் மாறி, நினைவெல்லாம் அவராக ஆனேன்.  அப்புறமென்ன, ஒரு வருஷத்தில் அழகாக ந்ருத்யா பிறந்தாள்.  பின் என் கனவு நினைவு எல்லாம் ந்ருத்யாதான்.  ஒரு வினாடிகூட அவளைப் பற்றி சிந்திக்காமல் இருந்ததில்லை.  அவளை யாரிடமும் விட்டு விட்டு ஒரு மணி நேரம்கூட என்னால் இருக்க முடிந்ததில்லை.  அவளும் school போய் அடுத்து பிறந்த நரேஷும் kindergarten போயாச்சு.   என் கணவர் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே 'பணத்துக்காக இல்ல. நீ படிச்ச படிப்பு வீணாக வேண்டாமே.  நீ வேணா வேலைக்குப் போயேன். பசங்க ஸ்கூல் முடிஞ்சு கொஞ்ச நேரம் day care-ல இருக்கட்டும்' என்று சொன்னார்.  நாந்தான் பசங்களை day care-ல் விடப் பயந்து வேலைக்குப் போக மறுத்தேன்.

              இப்ப ஒரு வருஷத்துக்கு முன்னால linkedIn network-ல சேர்ந்து தொலைச்சேன்.  என் கூடப் படித்தவர்களெல்லாம் career-ல நல்ல முன்னேறியிருக்கறதைப் பார்த்ததும் மனசு அடிச்சுக்க ஆரம்பிச்சுடுத்து. என்ன செய்ய!!. இவ்வளவு நாள் மறந்த கனவு இராப்பகலாக என்னை வாட்ட ஆரம்பித்தது. கணவரிடம் புலம்பித் தீர்த்தேன். அவரும் ' நீ ஒரு முறை வேலைக்குத்தான் போய்ப் பாரேன்.  குழந்தைகளுக்கோ உனக்கோ எந்த விதத்திலாவது இடஞ்சலாயிருந்தால் பிறகு விட்டுவிடலாம். try பண்ணாம இருந்துட்டு, பின்னால வருத்தப்படறதுல பிரயோஜனமில்லை' என்று advice செய்தார்.

               ரொம்ப தயங்கி மெதுவாகப் போனமாதம்தான் வேலைக்கு apply செய்ய ஆரம்பித்தேன். என் அதிர்ஷ்டம் (அல்லது துரதிர்ஷ்டம்!!!) சென்ற வாரம் biomed கம்பெனியிலிருந்து interview letter வந்தது.  இவ்வளவு சீக்கிரம் அதுவும் ஒரு பெரிய கம்பெனியிலிருந்து லெட்டர் வரும் என்று எதிபார்க்கலை.  இன்னும் ரெண்டு நாள்ல interview.  அதான் ஒருவாரமா biochemistry book-ஆ படிச்சுண்டிருக்கேன்.  என்னால நல்லா பண்ண முடியுமா என்று கவலை.  எவ்வளவு முறை புத்தகங்களைப் புரட்டினாலும் திருப்தி வரமாட்டேங்கிறது.

                 என் பொண்ணு ந்ருத்யா நாளைக்கு நடக்கவிருக்கும் maths test-க்குப் படிச்சுட்டு POGOவில் 'சுனைனா' பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய friend phone பண்ணி ஏதோ சந்தேகம் கேட்க வருவதாக சொன்னாள்.  அவள் வந்தபின் ந்ருத்யா அவளுக்கு maths சொல்லிக் கொடுத்தாள்.  போகும்போது ந்ருத்யாவின் தோழி " நீ எப்படி இவ்வளவு கூலா இருக்க.  எனக்கும் உன்ன மாதிரி இருக்கணும்னு ஆசையா இருக்கு" என்றாள். " அதுவா,  நீயும் எங்கம்மா சொன்ன tips எல்லாம் follow பண்ணு. சீக்கிரம் நீயும் என்ன மாதிரி ஆயிடுவே. எப்பவும் புக்கும் கையுமா இருந்தா எங்கம்மாவுக்குப் பிடிக்காது.  படிக்கிற நேரம் முழுக் கவனத்தோட படிக்கணும்.  புரிஞ்சிண்டு படிக்கணும்னு சொல்லுவார். அப்படிப் புரிஞ்சிண்டு படிச்சால் ஆயுசுக்கும் மறக்காது.  அப்படித் தெளிவா படிச்சதால என்னால் நல்லா எழுத முடியும் என்கிற முழு நம்பிக்கையோட இருந்தால் exam fear வராதுன்னு சொல்லுவார்.  சின்ன வயதிலேர்ந்து அதை practice செய்யறேன்.  அதனால் இந்த sixth standard exam எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை.  நீயும் இத try பண்ணிப் பாரு" என்றாள்.  அதைக் கேட்டு என் கணவர் என்னைப் பார்த்து சிரித்தார்.  என்னை சூழ்ந்திருந்த திரை சட்டென்று விலகி நான் தெளிவானேன்.  Lehningher principles-ஐக் கீழே வைத்துவிட்டு நம்பிக்கையுடன் என் மகன் நரேஷுடன் car race விளையாடச் சென்றேன்.

Friday 16 April 2010

Dust storm

                                                                        7.50a.m
                          

                 .
                                                                           8.00 a.m.

                                                           8.15a.m. (after the dust storm and the rain)

these photos are taken during the dust storm today morning.
                                      

இது என்னது?

  


என் மகள் கையில் வைத்திருப்பது என்ன? மூடி போட்ட டீ கப்பா?


இல்லை



இல்லை




அவள் கப்பில் ஊதிய bubble!!!.

Thursday 8 April 2010

படித்ததில் பிடித்தது-2

              சமீபத்தில் படித்த திரு. S.P.அண்ணாமலை அவர்கள் எழுதிய 'பிஸினஸ் வெற்றிக் கதைகள்' என்னை மிகவும் கவர்ந்தது.  விகடனில் தொடர்களாக வந்த கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரம் வெளியிட்ட நூல் இது.
இதயம் நல்லைண்ணெய், அணில் சேமியா, சக்தி மசாலா, லயன் டேட்ஸ், மெடிமிக்ஸ் சோப், professional courriers, Witco, சௌபாக்யா வெட் க்ரைண்டரென்று நமக்கு பரிச்சயமான பல பொருட்களைத் தயாரிக்கும் தொழிலதிபர்களின் வெற்றிக் கதைகள் என்பதால் படிப்பதில் அதிக ஈடுபாடு ஏற்படுகிறது. பேட்டியாக இன்றி ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிறுகதையின் ஸ்வாரசியத்தோடும் விறுவிறுப்போடும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

           இந்த தொழிலதிபர்களில் பெரும்பாலோர் பள்ளிப் படிப்பையே பாதியில் நிறுத்தியவர்கள். ( viking பனியன் தயாரிப்பாளர் 12 வயதிலேயே தொழிற்சாலையில் வேலை செய்தவராம்).  ஆனால் அனைவரும் சொல்வது, ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இளம் பருவத்திலேயே துளிர்விட்டது என்பதுதான்.  ஒவ்வொருவரும் பல தடைகளைத் தாண்டி வென்றிருக்கிறார்கள்.

             இந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்த சில விஷயங்களை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். தொழில் முனைவோருக்கு மட்டுமன்றி அனைவருக்குமே பயன்தரும் வாழ்வியல் தத்துவங்களே இவை:

*** கூச்சம் தவிர்.
*** மனதில் சரியென்று பட்டதைத் தயங்காமல் செய்.
*** தவறை முதல் முறை மன்னிக்கலாம்.  திரும்பவும் மன்னிப்பது தொழிலுக்குச் செய்யும் துரோகம்.
*** ஒரு தொழிலில் இறங்கிவிட்டால் அதுவே ஆக்ஸிஜனாக மாறி உடலின் செல்களில் ஓடினால் வெற்றி தானாகவே நம்மைத் தேடிவரும்.

              ஒவ்வொருவரும் ஆரம்பக் காலங்களில் தங்கள் பொருட்களை விற்க பட்டக் கஷ்டங்களைப் படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. சௌபாக்யா வெட்க்ரைண்டர் தயாரிப்பாளர் ஆரம்பக் காலத்தில் எந்த திருவிழா, exhibition நடந்தாலும் தவறாமல் க்ரைண்டருடன் demo கொடுக்கச் செல்வாராம். சக்தி மசாலாவை ஆரம்பக் காலங்களில் கடைக்காரர்கள் 'பெண்களுக்கு அவர்கள் குடும்ப முறைப்படி மசாலாக்களை சரிவிகிதத்தில் அரைத்து சமைத்தால்தான் திருப்தி.  அதனால் இந்த ரெடிமேட் பொடி விற்பனையாகாது' என்று வாங்க மறுத்தார்களாம் (அப்படி ஒரு காலம் இருந்ததா?!!!!). இலவச இணைப்புகளைப் பல வருடங்களுக்கு முன்பே பயன்படுத்தி வியாபாரத்தை வளர்த்தவர் இதயம் நல்லெண்ணெய் உரிமையாளர்.

              தொழிலதிபர்கள் பலரும் வெற்றிக்கு முக்கியமாகச் சொல்வது விளம்பர யுத்திகளைத்தான். ஒரு முறை முன்னணியில் இருக்கும் ஊட்டச்சத்து பான நிறுவனத்தின் உயரதிகாரியிடம், "உங்கள் பானம்தான் முதலிடத்தில் இருக்கிறதே.  இன்னும் ஏன் நீங்கள் புது புது விளம்பரங்களில் செலவழிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது, 'முதலிடம் என்பது போன மாத விற்பனையை வைத்து சொல்வது.  இந்த மாதமும் இன்னும் வருகிற மாதங்களிலும் அதிகம் விற்றால்தான் முதலிடத்தைத் தக்க வைக்க முடியும்.  அதற்குதான் புது புது விளம்பரங்கள்" என்றாராம்.

               இப்படி பல நல்ல கருத்துக்களைக் கூறும் இந்த புத்தகத்தில் உலகமயமாக்கலால் நலிவுற்ற இந்தியத் தொழிலதிபரின் கருத்துக்கள் வருத்தம் தருவதாக இருக்கின்றது.  கோலிசோடா தயாரிபாளர்களின் வியாபாரத்தை அழிக்கும் நோக்குடன் குறைந்த விலைக்கு கோலா பானங்களை விற்றதோடல்லாமல் அவர்களுக்கு பாட்டில்களைக் கடனுக்குக் கொடுக்கும் தொழிற்சாலையையும் விலைக்கு வாங்கி அவர்களுக்கு பாட்டில்கள் கிடைக்காமல் செய்தார்களாம்.  இருந்தாலும் தானே பாட்டில்களைத் தயார் செய்து வியாபாரத்தைத் தொடர்ந்த 'மாப்பிள்ளை வினாயகர் சோடா' கம்பெனியைப் பெரும் விலைக் கொடுத்து வாங்கவும் முயற்சித்திருக்கிறார்கள்.  அதற்கெல்லாம் அயராமல் பரம்பரைத் தொழிலைச் செய்தே தீருவேன் என்ற மாப்பிள்ளை வினாயகர் சோடா கம்பெனி உரிமையாளரின் உறுதியை வியக்காமல் இருக்கமுடியவில்லை.

அடுத்தமுறை நூலகத்திற்கோ, புத்தகக் கடைக்கோ செல்லும்போது மறக்காமல் இந்த புத்தகப் பிரதியை வாங்கிப் படியுங்கள்.