Thursday 31 December 2009

happy new year

Wish this new year brings you

H ours of happy times with friends and family

A bundant wealth

P rosperity

P lenty of love when you need it the most

Y outhful excitement at life’s simple pleasures


N ights of restful slumber

E verything you need

W onderful world

Y ears and years of good health

E njoyment and mirth

A ngels to watch over you

R embrances of a happy years



(original இல்லை. எங்கோ சுட்டதுதான்)

Wednesday 23 December 2009

வாழிய செந்தமிழ்

                   பன்னீர் சோடா என்ற blog -ல் தமிழ் மொழி பற்றிய இந்த பதிவையும் (டமில் வால்க) அதன் பின்னூட்டங்களையும் படித்ததும் தமிழ் ஒன்றும் கற்றுக்கொள்ள அத்தனை கடினமானது இல்லை என்று சொல்ல தோன்றியது.


                  தமிழ் மொழியில் எழுத்துக்கள் அதிகமாம். ஏறக்குறைய அனைத்து மொழிகளிலுமே உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் உண்டு என்று நினைக்கிறேன். ஒரு ஒப்பீட்டுக்காக ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம். Vowels எனப்படும் a,e,i,o,u உயிரெழுத்துக்கள், ஏனைய எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் எனலாம். தமிழில் இவை தவிர உயிர்மெய் எழுத்துக்கள் 216 இருப்பது தான் பிரச்சினையா?.

                   பிற மொழிகளில் phonetics-ஐ வார்த்தைகள் கற்கும்போது கற்போம். தமிழில் அதற்கு ஒரு படி முன்னதாகவே எழுத்துக்கள் கற்கும்போதே (உயிர்மெய் எழுத்துக்களாக) கற்கிறோம், அவ்வளவுதான். உதாரணத்திற்கு, பி என்னும் உயிர்மெய் எழுத்து ப் மற்றும் இ இணைவதால் வருகிறது. ஆங்கிலத்திலும் பி என்ற ஒலிக்கு p மற்றும் i (vowel) என்ற எழுத்துக்களைப் பயன்படுத்துகிறோம். இந்த உயிர்மெய் எழுத்துக்களால் ஒரு வார்த்தை எழுத பயன்படுத்தும் எழுத்துக்கள் குறைகின்றன (அதாவது ஒவ்வொரு முறை எழுதும்போதும் பயன்படுத்தும் எழுத்துக்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைகின்றது).

உதாரணம் : குறைவு , க்உர்ஐவ்உ



                மற்ற மொழிகளைக் கசடறக் கற்பதில் முதலில் அதிகமாக முனைய வேண்டும். ஒரு ஒப்பீட்டிற்காக ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம். எழுத்துக்கள் குறைவுதான். ஆனால் எழுத்து ஒலிவடிவத்திற்கும் வார்த்தைகளில் பயன்படுத்தும் ஒலிவடிவத்திற்கும் சம்பந்தமே கிடையாது. எழுத்துக்களை a (ஏ), e(இ), i(ஐ), o(ஓ), u(யு) என்று படிக்க கற்றுக்கொண்டு வார்த்தைகளில் வேறு ஒலிவடிவத்தில் பயன்படுத்துவோம்.

உதாரணம் : pat (a- ஒலிவடிவம் அ), pet (e-ஒலிவடிவம் எ), pit( i- ஒலி வடிவம் இ), pot (o-ஒலி வடிவம் ஆ), put (u-ஒலி வடிவம் உ), but (u-ஒலி வடிவம் அ). (என் மகள் U.K.G., படிக்கும்போது "யாரும்மா இப்படி தப்பு தப்பா மாத்தி மாத்தி வைச்சா?" என்று கேட்டாள்).

           இதுவே மூன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்களை உடைய வார்த்தைகளானால் முற்றிலும் வேறான விதிகள்.

உதாரணம்: base(a-ஒலி வடிவம் ஏ), band (a-ஒலி வடிவம் அ), ball(a- ஆ), bend(e- ஒலி வடிவம் எ), beat (e- ஒலி வடிவம் ஈ).



                இப்படி ஒவ்வொரு எழுத்தின் பயன்பாட்டு ஒலியைக் (phonetics) குழப்பாமல் கற்றுக் கொடுக்கவும், குழம்பாமல் கற்கவும் செலுத்தும் முனைப்பில் கால்பங்கு செலுத்தினால் போதும், தமிழில் ந, ன,ண மற்றும், ல,ள, ழ உச்சரிப்பின் வேறுபாட்டை (phonetics) எளிதாகக் கற்கலாம். இந்த எழுத்துக்களில் எதை நீக்குவது என ஆராய்வதைவிட, எதற்கு நீக்குவது எனக் கேட்கலாம்.

மனம் (உள்ளம்), மணம்(வாசனை)

பலம், பழம்

வால், வாள்

அரி, அறி

ஒரு சிறிய (எழுத்து மற்றும் உச்சரிப்பு) மாற்றம் எத்தனை பொருள் ( meaning) வேறுபாட்டை உணர்த்துகிறது.

                         இது போல் ஆங்கில இலக்கண விதிகளையும் ஆராயலாம். தமிழைப் பொறுத்தவரை நான், நீ, அவன் எல்லோரும் சமமே. ஆங்கிலத்தில் நானும், நீயும் சமம், ஆனால் அவன்(ள்) மட்டும் தனிமைப் படுத்தப் படுவார்.

'உதாரணம் : என்னிடம் புத்தகம் இருக்கிறது -- I have a book

உன்னிடம் புத்தகம் இருக்கிறது -- you have a book

அவனி(ளி)டம் புத்தகம் இருக்கிறது --- (s)he has a book.

அதே அந்த மூன்றாவது மனிதன் கும்பலாக (plural) வந்தால் என்னையும் உன்னையும் போல் நடத்துவார்கள்.

அவர்களிடம் புத்தகம் இருக்கிறது -- They have a book.

தமிழில் இந்த பாகுபாடெல்லாம் கிடையாது, எல்லோரும் சமம்.

                 அது மட்டுமா, capital letters, small letters, cursive writing என்று இருக்கும் 26 எழுத்துக்களை விதவிதமாக எழுதவேண்டி வருவதோடு,பெயர் வந்தால் முதலெழுத்து capital letter, வாக்கியத்தின் முதலெழுத்து capital letter என்று எத்தனை விதிகள்!!. தமிழில் இந்த தொந்தரவுகள் இல்லை. எழுத்துக்களை மட்டும் ஒழுங்காகக் கற்றுக் கொண்டால் போதும், கவலையின்றி மொழியில் பூந்து விளையாடலாம்.

                    தமிழில், பால் பாகுபாடு (gender) மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. பொருள்களுக்கு கிடையாது. இந்தி, French, German போன்ற மொழிகளில் மேசை, பேனா போன்ற பொருட்களைக் கூட பால் பாகுபடுத்தி கற்க வேண்டும். பொருட்களின் பாலுக்கேற்ப le telephone, la television (french) என்றோ, der garten, das jhar (german) என்றும் கூற எத்தனை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்.

                           இத்தனை விஷயங்களை அலசிப் பார்க்கும்போது தமிழ் நிச்சயமாக செம்மொழிதான், பயன்பாட்டிற்கு எளிய மொழிதான் (USER FRIENDLY) என்று ஆணித்தரமாகக் கூறுவேன். தமிழில் ஆர்வமும், தமிழை அடுத்த தலைமுறைக்குக் கற்பிக்கும் விருப்பமும் ஒவ்வொரு தமிழனுக்கும் வருமானால், மூன்று தலைமுறை என்ன, நூறு தலைமுறை கடந்தும் தமிழ் வாழும்.

Thursday 17 December 2009

PANDORA'S BOX

                          நல்ல நேரத்தில் திரு.சந்திரசேகர ராவ் அவர்கள் தெலுங்கானா பிரச்சினையைக் கையில் எடுத்து உண்ணாவிரதம் இருந்தார், இப்பொழுது பாதி MLA,MP-கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இந்த state-ஐ இரண்டாகப் பிரி, அந்த state-ஐ மூன்றாகப் பிரி என்று அவரவர்கள் மனம் போனபடி கேட்கிறார்கள்.  Mr. பாவம் பொதுஜனம்தான், ஊருக்குப் போக பஸ் இல்லாமல், வெளியே போக தைரியம் இல்லாமல் வீட்டிலேயே அடைபட்டு கிடக்கிறார். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமோ இல்லையோ, பொது மக்களுக்குத் திண்டாட்டம்தான்.


1. எங்கள் பகுதி முன்னேறவில்லை, அதனால் பிரித்துக் கொடுங்கள் என்பதற்கு பதில், இன்ன இன்ன விஷயங்கள் வேண்டும், இந்த project (IT யோ அல்லது வேறெதுவோ) இங்கே தொடங்கவேண்டும் என்று போராடிப் பெற்று முன்னற்றலாமே?

2. இத்தகைய sensitive-ஆன விஷயத்திற்கு CM-ஐக்கூடக் கலந்து ஆலோசிக்காமல் முடிவு செய்ய விழைந்த அரசியல் பெரிய  தலைகளுக்கு,

'எண்ணித் துணிக கருமம்; துணிந்த பின் எண்ணுவம் என்ப திழுக்கு' என்ற

வள்ளுவர் வாக்கை யாராவது நினைவு படுத்துங்கள்.

3.Canada-வில் ஒரு province- ஆன quebec-கிலும், தனி நாடு கோரிக்கை அவ்வப்போது வலுப்பெறும். Canadian Government மக்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பின்னரே பிரிக்கமுடியாதென்று முடிவு செய்தது. அதுபோல் இங்கேயும் செய்யலாமே!. ( " அப்பாடா, election முடிஞ்சுதுடா என்று பெருமூச்சு விடுமுன் இடைதேர்தல் வருகிறது, இதுல இது வேறயா" என்று தேர்தல் கமிஷன் கடுப்பாவது தெரிகிறது. ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜமப்பா!!!)

Friday 11 December 2009

நவீன நவராத்திரி

                  சொர்க லோகத்தில் lesuirely-யாக லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் பார்வதி மூவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

லக்ஷ்மி: இந்த வருஷ நவராத்திரி கொலுவுக்கு பூலோகத்தில் எல்லாரும் ரெடி ஆகிண்டு இருக்காளே!

சரஸ்வதி: ஆமாம். ---- வீட்டில் கருட சேவை செட் வாங்கியிருக்காங்க. ----- வீட்டில் ப்ரதோஷம் செட் வாங்கியிருக்காங்களாம்.

பார்வதி: ----வீட்டில் கோவில் கடை வீதி model எல்லாம் பண்ணியிருக்காங்களாம்.

லக்ஷ்மி: இப்ப பூலோகத்தில் பக்தி ஜாஸ்தி ஆகிவிட்டதில்லையா?!!

பார்வதி: ஆமாமாம். கொலுவிற்கு அவர்கள் ரெடியாகும் ஜோரைப் பார்த்தால் எனக்கே அங்கு போய் பார்க்க வேண்டும் போல் இருக்கு.

சரஸ்வதி: நல்ல ஐடியா. எனக்கும் பூலோகத்தை சுற்றி வந்து நாளாகி விட்டதால் போகணும் போல் இருக்கு.

                       மூவரும் நவராத்திரிக்கு பூலோக விஜயம் செய்யலாம் என்று முடிவு செய்தனர். இதை பிரம்மா, விஷ்ணு, சிவனிடம் சொல்ல சென்றனர்.
"ஒன்பது நாள் நீங்க இங்க இருக்க மாட்டீங்களா" என்று சந்தோஷத்தோடு விஷ்ணு கேட்டார். உடனே பிரம்மா, " ரொம்ப சந்தோஷப்படாதே. 2012-ல் உலகம் அழியப் போகுதாம். ஏதோ சினிமால்லாம் வந்திருக்காம். ஊரெல்லாம் அதே பேச்சாக இருக்கு. நாம எதுக்கும் தயாரா இருப்போம். நானே எமர்ஜென்சி மீட்டிங் கூட்டலாமென்று நினைத்தேன். இவங்களும் பூலோகம் போறாங்க. நாம அந்த நேரத்தில் இது பற்றி மீட்டிங் போடலாம். " என்றார். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் உலகம் அழியாமல் இருக்க என்ன செய்ய, அழிந்தால் என்ன செய்ய என்று விவாதிக்க முடிவு செய்தனர்.

                 தேவியர் மூவரும் பூலோகம் வந்தனர். நவராத்திரி ஒரு விடுமுறை நாளில் தொடங்கியதால் எல்லோர் வீட்டிலும் மெதுவாக பத்து பத்தரைக்கு எழுந்தனர். சோம்பலோடு காஃபியைக் குடித்துக்கொண்டே டி.வி பார்த்துக் கொண்டு இருந்தனர். ஒரு வீட்டிலாவது பூஜை, நிவேதனம் செய்வதற்கான அறிகுறியே இல்லை. சொர்க லோகத்திலிருந்து பூலோகம் வந்தபடியால் தேவியர் மூவருக்கும் பூலோகவாசிகளைப் போலவே பசிக்கத் தொடங்கியது. "ஆஹா, இந்த  பூலோகவாசிகள் கொலு வைத்த ஆர்பாட்டத்தப் பார்த்து இங்கு வந்து மாட்டிக் கொண்டோமே. என்ன செய்ய" என்று லக்ஷ்மியும் சரஸ்வதியும் சோர்ந்து போனார்கள். "கொஞ்சம் பொருத்துக் கொள்ளுங்கள்" என்று அவர்களை சமாதானப் படுத்தி தனது சக்தியில் இருவருக்கும் கொஞ்சம் கொடுத்து சமாளித்தார் பார்வதி. நல்ல வேளை, யாரோ ஒரு நல்லவர் வீட்டில் மூன்று தேவியரையும் மானசீகமாக அழைத்து சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ததால் மூவருக்கும் பசி ஆறியது.

            மாலை வேளையில் மூன்று தேவியரும் நகரில் எல்லோர் வீட்டிற்கும் விஜயம் செய்வது என்று முடிவு செய்தனர். முதலில் ஒரு வீட்டிற்குச் சென்று வேடிக்கைப் பார்த்தனர்.

              வீட்டுத் தலைவரும், மகனும் டி.வியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பா மகனிடம் " நவராத்திரில இன்னைக்கு என்னடா ஸ்பெஷல்?" என்றார். " ---aunty வீட்டில் சுண்டல், தயிர் வடை, கேசரி. அப்புரம், ---- aunty வீட்டில் சேவை, பாதுஷா, டோக்ளா. பின்னர் ---aunty வீட்டில் சாப்பாடு. நேத்திக்கே அம்மா மெனுவெல்லாம் கேட்டாச்சு" என்றான். "சாப்பாட்டு ராமா" என்று சொல்லிக் கொண்டே வந்த அவரின் மகள் " அப்பா, நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு கலர் டிரஸ் போட்டுக்கணுமாம். இன்னைக்கு எல்லாரும் ஸ்கை ப்ளூ. நாளைக்கு கிரீன். மறு நாள் ஆரஞ் கலர். எனக்கு ஆரஞ் கலரில் டிரஸ் இல்லை. நாளைக்கு வாங்கிண்டு வந்துவிடு" என்றாள். "என்ன இங்க discussion?" என்று கேட்டாள் அவரின் மனைவி ஸ்கைப்ளூ புடவையை சரி செய்தபடியே. "நவராத்திரிக்கு இன்றைய ஸ்பெஷல் என்ன என்று கேட்டேன். உன் மகளும், மகனும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். " இன்னைக்கு நாலு வீட்டில் வெத்தல பாக்கு வாங்க போகணும். அப்புறம் ----- வீட்டில் பஜனை. கடைசியா ---- வீட்டில் கச்சேரி அண்டு டின்னர். சீக்கிரம் கிளம்புங்கள் டயமாச்சு" என்றார்.

"நான் 5 நிமிஷத்தில் ரெடியாகிவிடுவேன். நீ விளக்கு ஏத்துவதற்குள் நான் ரெடியாகி விடுவேன் " என்றார்.

" நம்மாத்தில் புதன் கிழமைதான் எல்லாரையும் கூப்பிட்டிருக்கேன். அன்னைக்கு ஏத்தினால் போதும். நீங்க கிளம்புங்கோ" என்றாள் மனைவி.

இந்த conversation-ஐக் கேட்டு முப்பெருந்தேவியருக்கும் மயக்கம் வராத குறைதான். அதிக எதிர்பார்ப்புடன் பூலோகம் வந்தோமே என்று நொந்து போனார்கள். இவர்களில் புத்திக்கு அதிபதியான் கலைவாணி மற்ற இருவரிடம், " இந்த ஒன்பது நாளில்தான் யாரும் நம்மை நினைக்க மாட்டார்கள் போலும். நாமும் நம் கணவர்களுக்கு உதவியாக disturbance இல்லாமல் 2012 crisis குறித்து தயாராக உதவுவோம்" என்றார்.

Wednesday 2 December 2009

wiiட்டேனா பார்

              என் மகள் புதிதாக ஒரு பொம்மையை வாங்கி தந்தால் ஒரு வாரம் அதை கீழேயே வைக்கமாட்டாள். எனக்கும் அவளுடைய நிலைதான் ஒரு வாரமாக!!.

                  சென்ற வாரம் wii வாங்கினோம். வாங்கியதிலிருந்தே ஒரே விளையாட்டுதான்.  wii ஒரு வகையான video game தான். இதில் நாமும் physical-ஆக involve ஆகி விளையாடலாம். அதன் செயல்முறையை simple-ஆகத் தமிழில் எழுத முடியாமல் தோற்றதால் wikipedia-விலிருந்து copy செய்திருக்கிறேன்.
       

     The game is a collection of five sports simulations, designed to demonstrate the motion-sensing capabilities of the Wii Remote to new players. The five sports included are tennis, baseball, bowling, golf, and boxing. Players use the Wii Remote to mimic actions performed in real life sports, such as swinging a tennis racket.
Tennis விளையாடினால் என்னவோ wimbledon tournament-ல் விளயாடுவது போல் பெருமிதம் வருகிறது.

              தனியாக exercise செய்வது பல நேரங்களில் monotonous ஆக இருப்பதால் சலித்து போகும். wii-ல் எப்பொழுதும் நம்மோடு நான்கைந்து பேர் screen-ல் தோன்றுவதால் ஜனரஞ்சகமாக இருக்கின்றது. 10 நிமிட jogging-ல் நாம் மலை, பீச், bridge எல்லாம் cross செய்வது போன்ற simulations, ஜாகிங் செய்வதை enjoyable exercise ஆக ஆக்குகிறது. நம்மை ஒருவர் முந்த முனையும்போது, 'விடக்கூடாது' என்று வேகமாக ஓட motivate செய்கிறது . யோகா, aerobics சொல்லித் தரவும் ஒரு ஆசிரியர் இருக்கிறார். சில கஷ்டமான யோகா செய்யும்போது யாரும் பார்க்கலையே என்று நைசாக காலை கீழே வைத்தால் "ஏய்! பார்த்துண்டே இருக்கேன்" என்று எச்சரிக்கிறார்.

              கஷ்டப்பட்டு exercise பண்ணி முடித்தால் கடைசியில் 'நீ இன்னைக்கு இவ்வளவு calories குறைத்திருக்கிறாய்' என்று கணக்கு போட்டு சொல்லிவிடுவது மட்டுமில்லாமல், 'ரொம்ப சந்தோஷப் படாதே. அது 4 strawberry அல்லது அரை டம்ளர் பால் குடிப்பதற்கு (மட்டுமே) ஈடானது' என்றும் சொல்லி மனசை உடைக்கும்.

              நிறைய மனிதர்களோடு விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற திருப்தியை தருவதாலும், அவ்வப்பொழுது பாராட்டுக்களை வாரி வழங்குவதாலும் தனிமையில் வாழும் பல senior citizens -க்கு இது ஒரு சிறந்த companion என்பதில் ஐயமில்லை.

Tuesday 24 November 2009

Babbies stressed out

              இரண்டு நாட்களுக்கு முன் ஹிந்து news paper-ல் ஒரு news-ஐப் படித்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். Quaterly exam நன்றாக எழுதாததால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டாள் என்பதுதான் அந்த செய்தி. அடுத்த நாள் இன்னொரு செய்தி. ஒரு சிறுவன் தன் பெற்றோர் டி.வி. பார்க்க விடாததாலும், remote-ஐ கவனக்குறைவால் உடைத்து பயந்ததாலும் வீட்டை விட்டே ஒடிய செய்தி. ( actually i am considering not to read the news paper in detail to avoid getting into this kind of news. மேலோட்டமாக புரட்டுவதே மேல்.!!!)


                 நாங்கள் 8-வதுபடிக்கும்வரை Quaterly exam எல்லாம் ஒரு exam-ஆகவே consider பண்ண மாட்டோம். வழக்கம் போல் விளையாடிவிட்டு, ஏதோ கொஞ்சம் படித்துவிட்டு exam எழுதுவோம். 70 -80% வாங்குவோம். எங்கள் அம்மாவும் ஒன்றும் திட்ட மாட்டார்கள். 10, 12 வகுப்புகளில் தானாகவே பொறுப்பு வந்து படித்தோம். (என் அண்ணன் XII exam போது கூட hockey விளையாடாமல் இருந்தது இல்லை). இதனால் நாங்கள் யாரும் குறைந்து போகவில்லை. எல்லோரும் M.B.A., C.A., B.E., Ph.D., என்று பட்டப்படிப்பு முடித்திருக்கிறோம். என் அம்மாவின் 'take it easy' policy எங்களைப் பொறுப்பு மிக்கவர்களாகவே ஆக்கியது.

                         ஆனால் இன்று இந்த parents கொடுக்கும் தொல்லை தாங்க முடியவில்லை. தங்கள் குழந்தைகளை 4- 5 வயதிலேயே கராத்தே, பாட்டு, டான்ஸ் என்று classes-ல் சேர்ப்பது மட்டுமன்றி எல்லாவற்றிலும், முதன்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குழந்தைப் பருவத்தில் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு நேரமே இல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியைத் தொலைக்கிறார்கள். school- ல் படிப்பது போதாதென்று கட்டாயமாக tution அனுப்புகிறார்கள். நாங்கள் படிக்கும்போது tution போவது கௌரவக் குறைவாக இருந்தது. இப்பொழுதோ 99% வாங்குபவர்கள் கூட tution போகிறார்கள். இத்தனைக் கஷ்டப்பட்டு படித்து 98% வாங்கினாலும் கூட பாராட்டாது, விட்ட அந்த 2% -க்காக குழந்தைகளைத் திட்டி தீர்க்கிறார்கள் பெற்றவர்கள். இதனால் அவர்களின் மன அமைதி (peace)யும் தொலைகிறது. பாக்கியம் ராமசாமி அவர்கள் '+2 தியாகிகள்' என்ற சிறுகதையில் due to the anxiety of the parents what kind of torture the students undergo என்பதை மிக அழகாக நகைச்சுவையுடன் எழுதியிருப்பார்.



                  என் அம்மாவின் குழந்தை பருவத்தில் மிக பெரிய கூட்டுக் குடும்பமாக (பெரியம்மா, பெரியப்பா, cousins) இருந்ததால் அவர்களுக்கு விளையாட, படிக்க வசதியாக இருந்தது மட்டுமல்லாது, விட்டுக்கொடுத்தல், sharing,obedience என்பதெல்லாம் இயல்பாகவே வந்தது. எங்கள் குழந்தை பருவத்தில் atleast விடுமுறையின்போது நாங்கள் cousins எல்லோரும் ஒன்றாய் இருந்ததால் மேற்சொன்ன விஷயங்களைக் கொஞ்சமாவது கற்றுக் கொண்டோம். இன்றைய தலைமுறையிலோ எல்லா குழந்தைகளும் அவர்கள் வீட்டில் ராஜா, ராணி தான். பக்கத்து சமஸ்தானத்தை எட்டிக் கூட பார்ப்பதில்லை. இந்த நிலையில் அவர்களுக்கு எப்படி விட்டுக்கொடுத்தல் போன்ற மேற்சொன்ன விஷயங்கள் வரும்? (அதுவும் ஓரே ஒரு குழந்தை என்றால் கேட்கவே வேண்டாம்!!!).

                        உறவுகளைச் சுருக்கிக் கொண்டதாலும், எதிர்பார்ப்புகளைப் பெருக்கிக் கொண்டதாலும், நமக்கு அந்நியமாக இருந்த stress, anxiety போன்ற வார்த்தைகளை நாம்அன்றாடம் கேட்க, உணர முடிகிறது. இதன் விளைவுகள்தான் முதலில் படித்த செய்திகள்.

                        அமெரிக்காவில் பள்ளிகளில் கூட துப்பாக்கி சூடு நடைபெறுவதைப் படிக்கும்போது முன்பெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். இப்பொழுது இந்தியாவில் நடப்பதைப் படிக்கும் போது, நாம் அமெரிக்காவை எட்டிப் பிடிக்கும் (இந்த விஷயத்தில்) நாள் தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.

Wednesday 18 November 2009

பொம்மலாட்டம்

                         கடந்த வாரம் குவைத்தில் இந்திய கலாசார விழா கொண்டாடப்பட்டது.  அதில் இரு நிகழ்ச்சிகளைக் காணும் வாய்ப்பு கிட்டியது.


                         முதலாவது பொம்மலாட்டம்.  இராஜஸ்தானிலிருந்து வந்த இருவர் மிக அருமையாக பொம்மலாட்டம் நடத்தினர். ஒரு பாட்டுக்கு பொம்மை அழகாக இடுப்பை ஒடித்து ஆடியதும், மண்டியிட்டு இசைக்கு ஏற்ப கால்களை அசைத்து ஆடியதும் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

                              இரண்டாவது shadow puppet show.  கர்னாடகாவில் ஹசன் என்னுமிடத்திலிருந்து வந்திருந்தார்கள். ஆட்டு தோலைப் பதப்படுத்தி அதை very thin sheets ஆக cut செய்திருக்கிறார்கள்.  அதில் மிக அழகாக உருவங்களை வரைந்து அருமையாக வண்ணம் தீட்டியிருக்கிறார்கள். அதில் சின்ன சின்ன துளைகளயும் (must have had lots of patience and devotion to the art) போட்டிருக்கிறார்கள். பெரிய திரைக்குப் பின்னால் powerful light போட்டு இரண்டிற்கும் நடுவில் இந்த உருவங்களை வைத்து puppet போல் ஆட வைக்கிறார்கள். (cinema காட்டுவதைப்போல் தான்). அத்தனை மெல்லிய sheets-ல் எப்படித்தான் கை கால்களை ஆட்டும்படி பண்ணினார்களோ!!! Great work!.








Wednesday 11 November 2009

போதுமடா இந்த(தி) தொல்லை

                         இப்பொழுது Abbacus class-க்கு அனுப்புவது fancy யாக இருப்பது போல், நான் school படிக்கும் காலத்தில் hindi class அனுப்புவது பெருமையான விஷயமாக( parents-க்கு) இருந்தது. என் அம்மாவும் எங்களை அனுப்பினார். முதலில் சொல்லிக் கொடுத்த வாத்தியார் dictation வைத்தே கடுப்படித்தார். அப்பொழுதுதான் hindi alphabets கற்றுக்கொடுத்துகொண்டிருந்தார். Dicatation கொடுக்கும்போது தெளிவாகச் சொல்லாமல் வாய்க்குள்ளேயே பாதியை மென்று விழுங்கிவிடுவார். இவர் என்ன letter சொல்கிறார் என்று புரியாமல் guess பண்ணியே எழுதி பாதிக்கு மேல் தப்பாகிவிடும். அதனால் ஹிந்தி மேலேயே ஒரு வெறுப்பு வந்துவிட்டது.
               

                        என் அம்மாவும் விடாமல் இன்னொரு teacher-கிட்டே சேர்த்துவிட்டார். நானும் அன் அக்காவும் எப்படியோ 3rd level (rashtra bhasha) வரை பாஸ் செய்துவிட்டாலும் 'ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பது ஹிந்தியைப் பொறுத்தவரை உண்மையாகவே இருந்தது. ஒருமுறை படித்துக் கொண்டிருக்கும்போது என் அக்காவிடம்  गिर्जाजा्घर ( church) என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டேன். அவளோ 'கீழே விழுந்து எழுந்து வீட்டுக்குப் போ' என்று விளக்கம் சொன்னாள். என்ன சொல்ல?!!!.


                          என் நண்பர்களின் ஹிந்தி அனுபவம் அதைவிடச் சுவையாக இருக்கும். ஒருமுறை நண்பரோடு நானும் என் கணவரும் டாக்சியில் போய்கொண்டிருந்தோம். வெய்யில் கடுமையாக இருந்ததால் நண்பர் a/c போடுமாறு சொன்னார். டாக்சிக்காரரும் நட்போடு ' गर्मि है?" என்று கேட்டு a/c போடப் போனார். அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் எங்கள் நண்பர் ' घर मे है; तू इदर डाल " என்று கோவமாக பதில் சொன்னார். பின்னர் புரிந்து கொண்டு நாங்கள் மூவரும் வயிறு வலிக்க சிரித்தோம்.

                என் இன்னொரு தோழியும் என்னைப்போல் ஹிந்தி தவிர்ப்பாளர். அவர் பாவம் கல்யாணமாகி டெல்லிக்குப் போய் படாத பாடு பட்டுப்போனார். எப்படியும் ஹிந்தி கற்றுக்கொண்டேயாக வேண்டும் என்ற வெறியோடு தன் வீட்டு வேலைக்காரரோடு பேசி ஹிந்தி பழக ஆரம்பித்தார். பைய பைய வேலைக்கார भैया விடமிருந்து ஹிந்தி ஓரளவு பேசக் கற்றுக்கொண்டார். அவருடைய கெட்ட நேரம், வேலை செய்பவர் வேலையை விட்டுச் சென்றுவிட்டார். புதிதாக ஒரு பெண் வேலையில் சேர்ந்தார். என் தோழி அவரிடமும் भैया என்று ஆரம்பித்தே எப்போதும் பேசியிருக்கிறார். பொறுத்து பொறுத்து பார்த்த புது வேலைக்கார பெண்மணியும் ' அம்மா, என்னை भैया என்று அழைக்காதீர்கள். बहन என்றோ இல்லை பெயர் சொல்லியோ கூப்பிடுங்கள்" என்றாராம். என் தோழி, 'அம்மா , भैया என்று ஆரம்பித்தால்தான் எனக்கு ஹிந்தி பேசவே வருகிறது. நீ கொஞ்சம் adjust பண்ணிக்கொள்" என்றாராம்!!!.

                                ஹிந்தியால் இப்படி நொந்து, போதுமடா இந்த(தி)த் தொல்லை என்று என் மகளைப் பள்ளியில் கூட ஹிந்தி language எடுக்கவிடவில்லை. அவளானால் ஹிந்தி திரைப்படப் பாடல்களைத்தான் ரசிக்கிறாள். 'अन्जान रास्ता' என்று தெளிவாகப் பாடுகிறாள். அவளாவது ஹிந்தியை ரசிக்கட்டும் என்பதால் அவளை hindhi class-க்கு அனுப்ப வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துவிட்டோம்.

Sunday 8 November 2009

(ராம)ஜெயமிருந்தால் பயமில்லை

                            மூன்றாம் சுழி என்ற blogspot-ல் குடுகுடுபாண்டியைப் பற்றி வந்த பதிவைப் படித்ததும் சின்ன வயதில் என்னைப் பயத்தில் ஆழ்த்திய சம்பவம் நினைவிற்கு வந்தது. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் lunch break-ல் நானும் என் தோழியும் classroom-ல் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது என் classmate ஒருத்தி ( அவள் hallucinations-ல் ஆழ்ந்திருந்ததால் haly என்ற பெயர் வைப்போம்.) உள்ளே வந்து bench-ல் படுத்துக்கொண்டாள். இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறைத் தலையை இட வலமாக அசைத்தாள். கொஞ்ச நேரத்தில் தலையைச் சுழற்றி சுழற்றி ஆட்டினாள் (தமிழ் படங்களில் சாமி ஆடுபவர்கள் செய்வார்களே, அதுபோல்.). நான் ரொம்ப பரிவுடன் அவளிடம் சென்று "என்ன ஆச்சு? தலை வலிக்குதா? சாப்பிட்டாயா? இல்லையா? tired-ஆ இருக்கா? " என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தேன். அவள் கடுப்பாகி " முதலில் நீ யார்?" என்று கோவமாகக் கத்தினாள். (அவளைப் பிடித்ததாகச் சொல்லப்படும் பேய் இத்தனைக் கேள்விகளை ஒருசேர அதன் lifetime-ல் கேட்டிருக்காது போலும்). என்னடா இது, என்னைத் தெரியவில்லையா என்று நான் விழித்துக்கொண்டிருந்தேன். என் தோழிக்கு முன்னனுபவம் உண்டு போலும். 'முதலில் வா வெளியே' என்று என்னை இழுத்துக் கொண்டு ஓடினாள். Lunch break முடிந்த பின் எங்கள் அனைவரையும் மரத்தடிக்குக் கூட்டிக்கொண்டு போய் class நடத்தினார்கள். ஒரு மணி நேரம் கழித்து haly மிகவும் tired ஆக வந்தாள். என் தோழி,' சொன்னேன் பார்த்தாயா, அவளுக்குப் பேய் பிடித்திருக்கென்று' என்றாள். நான் அதன் seriousness புரியாமல் மாலையில் haly-யிடம் 'நீ பயப்படாதே. எப்பவும் கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டிரு. எந்த பேயும் கிட்டேயே வராது' அது இது என்று advice பண்ணி தைரியம் கொடுத்து வீடு வரை கொண்டு விட்டு வந்தேன். அன்று என் வீட்டில் யாரிடமும் இதைப்

பற்றி பேசியதாக நினைவில்லை.

                        மறுநாள் மீண்டும் lunch break-ல் haly-க்கு hallucinations ஆரம்பித்துவிட்டது. முன்தினம் நான் தைரியம் சொன்னதால் haly என்னைத் தேடியிருக்கிறாள். என் friends எல்லோரும் என்னைத் தேடி ஓடி வந்து "நேற்று யார் உன்னை அவளுக்குத் தைரியம் சொல்லச்சொன்னது? யார் அவளுடன் வீட்டுக்குப் போக சொன்னது? அவ இப்ப உன்னையே தேடிண்டு இருக்கா!!" என்று சொல்லி என்னைப் பாதுகாப்பாக வேறு building-க்குக் கூட்டிப்போனார்கள். அன்றைய haly-யின் (பேய்)ஆட்டம் முடிந்ததும் அவள் நேராக வீட்டிற்கு அனுப்பப்பட்டாள்.

                        நான் வீடு திரும்பியதும் மெதுவாக என் பாட்டியிடம் போய் (ஒட்டிக்கொள்வது மாதிரி) உட்கார்ந்தேன். மெதுவாக அவரிடம் கதையைச் சொன்னேன். அவர் உடனே விபூதியை அள்ளி நெற்றியில் பூசிவிட்டு "விபூதி இருக்கு இல்லையா. உனக்கு இனிமேல் பயமே வேண்டாம். பேயெல்லாம் ஒன்றும் பண்ணாது" என்றார். பயம் போனதோ இல்லையோ, அந்த விபூதி விஷயத்தை மட்டும் நான் இறுக்கப் பிடித்துக்கொண்டேன்.

                  Night படுக்கும்போது நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டதோடு பத்து விரல்களிலும் மருதாணி போல் விபூதி இட்டுக் கொண்டுதான் (தூங்கும்பொது அழிந்தால் நெற்றியில் மீண்டும் இட்டுக் கொள்ளத்தான் கைவிரல்களில் stock வைத்திருப்பது) படுத்துக் கொள்வேன். Haly-க்கு பேய் பிடித்தபோது என் பெயர் மறந்து என்னை யார் என்று கேட்டாளில்லையா? அதனால் தினமும் காலையில் எழுந்தவுடன் என் பெயர், அம்மா, அக்கா, அண்ணா, பக்கத்து வீட்டு aunty என்று எல்லார் பெயரையும் சொல்லிப்பார்த்துக் கொள்வேன். (வேறெதற்கு, எனக்குப் பேய் பிடிக்கவில்லை என்று உறுதி செய்து கொள்ளத்தான்!!!).  ஒருவாரம் இப்படி பயத்திலேயே கழிந்தது.  ஒருவாரமாக halyயும் school-க்கு வரவில்லை.

                               இதற்குள் எங்களுக்கு half-yearly exam ஆரம்பித்து விட்டது.  Exam hall-க்குள் நுழைந்த நான் என் bench--க்குப் பின்னால் haly உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பிடித்தேன் ஓட்டம். Exam hall-ல் இருந்த teachers எல்லோரும் ஓடி வந்து என்னைப்பிடித்து விசாரித்தார்கள். நான் haly-யைக் காட்டி பயமாக இருப்பதால் நான் வீட்டிற்குப் போகவேண்டும் என்று அழ ஆரம்பித்து விட்டேன். எப்படியோ என்னைத் தேற்றி teacher பக்கத்திலேயே உட்கார்ந்து exam எழுத வைத்தார்கள். பின்னர் என் அக்காவை அழைத்து கதையைக் கூறி என்னைக் கூட்டிப் போகச் சொன்னார்கள்.

                              வீட்டிற்கு வந்ததும் என் அம்மா என்னிடம் ரொம்ப நேரம் தைரியம் சொன்னார்கள். " கடவுள் நம்பிக்கை இருந்தால் வேறெந்த பயமும் இல்லை. எப்பொழுதும் ஸ்ரீராமஜெயம் என்று சொல்லிக்கொண்டு இரு. உன் பயம் தூர விலகும். என்னுடைய மகளாயிருந்தும் நீ பயப்படலாமா?. கடவுளை நம்பு. கவலையை விடு" என்றார். அது என் பயத்தை மந்திரம் போட்டார்போல் விரட்டியது. அன்று முதல் விழித்திருக்கும் போதெல்லாம் ராமஜெயம் சொல்வது வழக்கமாகிவிட்டது. இப்பொழுதும் அது ஒரு involuntary action-ஆக மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

                                     அதற்குப் பிறகு பலமுறை நான் Exam hall-லிருந்து பிடித்த ஓட்டத்தை நினைத்து சிரித்திருக்கிறேன். சிறு வயதில் ஏற்படும் பயங்களும் கவலைகளும் எப்படி அம்மாவின் நம்பிக்கை வார்த்தைகளால் போக்கப்படுகிறது என்ற அந்த பாடத்தை இப்பொழுது என் daughter -ரிடம் practical-ஆக பயன்படுத்துகிறேன்.

Monday 2 November 2009

காணாமல் போன கலாசாரம்

சமீபத்தில் இரண்டு நல்ல தமிழ் படங்களைப் பார்த்தேன்.

முதலில் 'திருதிரு துறுதுறு". (படம் பேரே அதுதானுங்க!). காணாமல் போன ஒரு குழந்தையை எப்படி அதன் பெற்றோரிடம் சேர்க்கிறார்கள் என்பது கதை. கதையை நகைசுவை இழையோட, விறுவிறுப்பு குன்றாமல் சொல்லியிருக்கிறார்கள். தாத்தா, பாட்டி, பேரன் , பேத்தி, என்று அனைவரும் சங்கடப்படாமல் ஒன்றாக உட்கார்ந்து பார்க்கக்கூடிய வகையில் எடுத்த director-க்கு hats off!!!. படத்தை அழகாக எடுத்தவர் ஒரு பெண் (நந்தினி). அவர் மேலும் இது போன்ற தரமான படங்களையே எடுக்க வாழ்த்துக்கள்.



அடுத்தது 'பேராண்மை'. நம் நாட்டில் rocket launch செய்வதைத் தடுக்க வந்த அந்நிய சக்திகளை முறியடிக்கும் NCC மாணவிகள் & trainer கூட்டணி பற்றிய கதை. ஆங்கில படங்களுக்கு நிகராக பின்பாதி எடுக்கப்பட்டிருக்கிறது. (ஆமாம், இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஆங்கில படங்களுக்கு நிகராக என்றே சொல்லிகொண்டிருப்போம்? எப்பொழுது அவர்களை விஞ்சப்போகிறோம்?). Genetically engineered விதைகளைப் பற்றிய வசனங்கள் 'அட!' போட வைக்கின்றன. ஆனால் கடமை, கண்ணியம் , கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டிய NCC மாணவிகள் பற்றிய படத்திலேயே கண்ணியம் குறைந்த காட்சிகளை வைத்த, அதுவும் பெண்களை வைத்தே பேச வைத்த directorன் நெஞ்சழுத்தம் கோவப்பட வைத்தது. தமிழ் படங்களில் சமீப காலமாகக் காணாமல் போன கலாசாரம், கண்ணியம் இவற்றை யாரவது கண்டு பிடித்துக் கொடுப்பார்களா?

Friday 30 October 2009

தீபாவளி பிரச்சினை!!!

இந்த வருடம் தீபாவளிக்கு ஏதாவது specielஆகச் செய்து அசத்தலாம் என்று net-ல் தேடிப்பார்த்தேன்.


அல்வா? நமக்குக் கொடுக்கத்தானே வரும், கிண்ட வராதே என்று reject செய்தேன். குலோப்ஜாமூன்? குடும்ப பாட்டு போல் எங்கள் குடும்ப பஷணம் அது. என் சகோதர, சகோதரி குடும்பங்களில் தீபாவளி தோறும் செய்யப்படும் ஒன்று. அதனால் அதையும் reject செய்தேன். புதிதாக ஏதாவது என்று மேலும் தேடினேன். கண்ணில் பட்டது 'மோஹந்தால்'. செய்முறையைப் பார்த்தேன். கடலை மாவை வறுத்து, condensed milk மற்றும் நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருந்து, கடைசியில் நெய் தடவிய plate-ல் கொட்டி துண்டம் போடவும் என்று இருந்தது. ஆஹா, easy யாக இருக்கே , இதையே செய்வோம் என்று முடிவு செய்தேன். (இவ்வளவு easy யா, இதில் ஏதோ வில்லங்கம் இருக்குமோ என்று யோசித்திருக்க வேண்டாமோ?). கடலை மாவையும் மற்ற பொருட்களையும் சேர்த்து கிளறினேன், கிளறினேன், கிளறிக்கொண்டே இருந்தேன். It looked like a never ending process. அது ஒரு மாதிரி கோந்து போலவே இருந்தது. ஒரு level-க்குப் பின்னர், இதுதான் சரியான பதம் என்று நானே மனசைத் தேற்றிக்கொண்டு, plate-ல் கொட்டினேன். அதைத் துண்டங்களாக்குவது அதைவிட பெரிய கஷ்டமான வேலையாக இருந்தது. கத்தியால் லேசாகக் கோடு போட்டால், கத்தியை எடுத்தவுடனே ஒன்றாகச் சேர்ந்தது. கொஞ்சம் அழுத்தி வெட்டினால், மொத்தமாகக் கத்தியுடனே ஒட்டிக்கொண்டு வந்தது (இது கோந்துதான், சந்தேகமே இல்லை!!!!). சரி, ஆறினால் சரியாகி விடும் என்று ஒன்று, இரண்டு மணி நேரம் wait பண்ணியும் சரியாகததால், overnight இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். காலையில் எல்லோருக்கும் முன்னால் எழுந்து மெதுவாகப் பூனை போல் வந்து திறந்து பார்த்தேன். ம் ஹூம், ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒரு வேளை, 'மோஹன் தான்' வந்து அதைத் தட்டிலிருந்து எடுக்க வேண்டுமோ?!!. எனக்கு அறிந்தவர், தெரிந்தவர்களில் மோஹன் என்று யாரும் இல்லாததால் அதைச் சத்தம் போடாமல் dustbinனில் கொட்டினேன். கடையில் போய் காஜூ கட்லி, ஜாங்கிரி என்று வாங்கினேன்.


என் அம்மா தீபாவளியன்று காலையில் போன் செய்தார்.

அம்மா: "தீபாவளிக்கு என்ன பண்ணினே?"

நான்: "காஜூ கட்லி, ஜாங்கிரியெல்லாம்....."

அம்மா: (சந்தோஷமாக)"very good"

நான்: "பண்ணியிருந்ததை வாங்கி வந்துட்டேன்!"

அம்மா: (சுரத்தில்லாமல்)"ஓஹோ".

 
கடைசியில் என் அக்காவிடம் மட்டும், மோஹந்தால் மேட்டரைச் சொன்னேன். அவள் கூலாக, குலோப் ஜாமூன் பண்ணியிருக்க வேண்டியதுதானே என்றாள்!!!!

Thursday 29 October 2009

NOT SO NOBLE?!!!!!!

நான், எனது என்று பெருமை கொள்வது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. 'என்னோட அப்பவோட, அக்காவோட,நாத்தனாரோட'-----என்று ஓட ஓட உறவுகளின் சாதனைகளையும் தற்பெருமையடிப்பதில் தனி திருப்தி. அப்படியிருக்க நம் நாட்டில் பிறந்த (கவனிக்க, only பிறந்த) ஒருவர் நோபல் பரிசு வாங்கினால் விடுவோமா? தமிழர்களெல்லோரும் சந்தோஷத்தில் திளைத்து பெருமிதத்தில் மிதந்தோம். வலைஞர் பலரும் அவருக்கு email மேல் email அனுப்பி அவருடைய inbox யே fill பண்ணிவிட்டோம். அவர் பாவம், காலையில் mail open பண்ணி படித்து முடிக்கவே 2-3 மணி நேரமாகி கடுப்பாகிப் போனார்.(கீழே அவரின் பேட்டியைப் படிக்கவும்).


எனக்கு சில விஷயங்கள் புரியவில்லை.

(1). என்னைப் போன்ற மிக சாதாரணமானவர்களே முக்கியமானவற்றிற்கு ஒரு email idயும், சாதரண மேட்டர்களுக்கு (net ல் பல websitesல் register செய்வது போன்ற விஷயங்களுக்கு) தனி mail idயும் வைத்திருக்கும்போது, அவர் range-க்கு ஒரு நாலு mail id யாவது வைத்திருக்க வேண்டாமா?

(2). அவருக்கு இந்த வேலைகளைப் (mail-களைப்) பார்க்க personal assistant கிடையாதா?

(3). நம் மக்களும் free யாக முடியுமே என்று email அனுப்பி மகிழ்ச்சியை முடித்துக்கொள்ளாமல் அவரவர் சந்தோஷத்திற்கும், சம்பளத்திற்கும் ஏற்றவாறு ஒரு greeting card-யோ, பூங்கொத்தையோ அனுப்பியிருக்கலாம். இரு நாட்டு ailing postal department ம் கொஞ்சம் பிழைத்திருக்கும்!!!!.



அவருடைய பேட்டி உங்களுக்காக:



Nobel laureate Venkatraman Ramakrishnan has expressed disenchantment with people from India "bothering" him "clogging" up his email box and dubbed as "strange" their sudden urge to reach out to him.

"All sorts of people from India have been writing to me, clogging up my email box. It takes me an hour or two to just remove their mails," he said. He said the deluge of emails had buried important communications from colleagues or from journals concerning papers we have in press.

"Do these people have no consideration? It is OK to take pride in the event, but why bother me?" the 57-year-old Indian-American scientist wondered in an email interview.

"There are also people who have never bothered to be in touch with me for decades who suddenly feel the urge to connect. I find this strange," said Ramakrishnan, who shared this year's Nobel Prize for Chemistry with two others.

Monday 26 October 2009

தூர்தர்ஷனும் துர் தர்ஷனும்

தூர்தர்ஷனுக்கு 50 வயதாகிறதாம். வாழ்த்துக்கள். நினைத்துப் பார்க்கிறேன். அப்பொழுதுதான் எங்களுக்கு டிவி அறிமுகமான நேரம். ஒலிபரப்பு தொடங்கும் நேரத்திற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பே டிவியின் முன் அமர்ந்து லோகோவையே பார்த்துக்கொண்டு தீம் ம்யூசிக்கைக் கேட்டுக்கொண்டு ஆவலுடன் காத்திருப்போம். வெள்ளிக்கிழமையென்றால் ஒலியும் ஒளியும், ஞாயிறு என்றால் மலரும் நினைவுகள் என்று பட்டியலிட்டுப் பார்த்திருப்போம். ஆனால் போகப்போக சிந்திக்க ஒரு நொடி (தலைவர் பெயர் நேவில் ஆரம்பித்து ருவிமுடியும், நடுவில் ஒன்றும் கிடையாது. அவர் யார் என்ற ரேஞ்சுக்குக் கேள்விகளைக் கேட்டு சாகடித்து), செவ்வாய் சாபமாக நாடகங்கள் என்று வாட்டி எடுத்தார்கள். சன் டிவி போன்ற சேனல்கள் வந்து அபயக்கரம் நீட்டி காப்பாற்றினார்கள்.

ஆனால் விதி வலியது. முடிவே இல்லாத மகாமக சீரியல்களாலும், தமிழைக் கொல்லும் தொகுப்பாளினிகளாலும், பார்க்கவும் கேட்கவும் கூசும் ரியாலிடி ஷோக்களாலும் நொந்து நூலாகிப்போன
மக்கள் தூர்தர்ஷனுக்கு இன்னுமொரு சான்ஸ் கொடுப்பதற்கு ரெடி. துர் தர்ஷனிலிருந்து மக்களைக் காப்பாற்றி கிடைத்த சான்ஸைத் தக்கவைத்துக்கொள்ள தூர்தர்ஷன் ரெடியா?

இதனால் நான் சொல்வது யாதெனில்.......

என்னுடைய குடும்பத்தில் எல்லோருக்கும் எழுத்தார்வம், தமிழ்ப் பற்று உண்டு. என் பாட்டி (அப்பாவின் அம்மா) பேசினாலும் ஏசினாலும் கவிதை நடையில் கலக்குவார் (ஆதியிலே அலமேலு, பாதியிலே பாகீரதி..... என்று). என் அப்பாவும் கதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய கதைகள் இரண்டை அவரின் தமிழ் நடைக்காகவும் முத்து முத்தான கையெழுத்திற்காகவும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். என் அண்ணா இருவரும் சிறுவயதிலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர்கள். என் சகோதரிகளும் கதை, கவிதை எழுதுவார்கள். இவர்களைப் பற்றி அறிந்ததாலும் அவர்களின் ஞானம் எனக்கும் உண்டு என்ற அஞானத்தினாலும் என் கணவர் என்னை எழுதச்சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருப்பார். அவர் தொடர்ந்து ஊக்குவித்ததாலும், தார்குச்சி போட்டுக்கொண்டே இருந்ததாலும் (சலித்துப்போய் குச்சியால் போட்டு விடுவாரோ என்ற பயத்தாலும்) இந்த ப்ளாக் எழுத ஆரம்பித்தேன். அதனால் இந்த ப்ளாக் படித்து திட்ட நினைப்பவர்கள் முதலில் மேற்சொன்ன அனைவரையும் திட்டிவிட்டு கடைசியாக என்னைத் திட்டவும்.

பிள்ளையார் சுழி

இணையத்தில் நிறைய தமிழ் பதிவுகளைப் படிக்க படிக்க எனக்கும் ஒன்றை ஆரம்பிக்க எண்ணம் வந்தது. பொழுது போக வேண்டாமா?. சிறு வயதிலிருந்தே எதையும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் பழக்கம் உள்ளதால் முதலில் விநாயகரைப் பற்றி ஏதாவது எழுத நினைக்கிறேன். இந்த பழக்கம் என்னுடைய பாட்டி மற்றும் அம்மாவிடமிருந்து வந்திருக்க வேண்டும். பிள்ளையாரை வேண்டிக்கொண்டால் எல்லாமே கிடைக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. என்னுடைய நண்பர் மற்றும் உறவினர் அனைவரும் இதை அறிவர்.
எனக்கு இந்த ஜெயன்ட் வீலில் ஏறுவது என்றாலே ரொம்ப பயம். ஒரு முறை சிலரின் கட்டாயத்தின் பேரில் ஏறினேன். என் மன்னியும் என்னுடன் வந்தார். மேலே போனவுடன் பயத்தில் முருகா முருகா என்று கத்தத் தொடங்கினேன். என் மன்னி உடனே "எப்போதும் பிள்ளையாரைத் தானே கூப்பிடுவீர்கள். இப்பொழுது என்ன முருகனைக் கூப்பிடுகிறீர் கள்?" என்றார். ஐயையோ, இது என்னடா குழப்பம்!! கோவத்தில் இரண்டு பேருமே காப்பாற்றாமல் விட்டுவிடுவார்களோ என்று பயந்து, "பிள்ளையாரே, முருகா... " என்று மாறி மாறி கத்தி கதறி அலறி அழுது ஒரு வழியாகக் கீழே இறங்கினேன்.
எனக்குத் தெரிந்த ஒருவர் என்னைவிட ஒரு படி அதிக பக்தி உடையவர். காமெரா வாங்கினால் முதலில் பிள்ளையாரைப் படம் பிடிப்பார் (பிள்ளையார் போட்டோவைச் சொன்னேன்.). விடியோ காமெராவிலும் அப்படியே. அவர் செல்ஃபோன் வாங்கியபோது என்ன செய்தார் என்று நான் யோசிப்பது உண்டு.எது எப்படியோ, இந்த ப்ளாக் எழுதும் என்னையும், முக்கியமாக படிக்கும் உங்களையும் பிள்ளையார் காப்பாராக!!!!!