Tuesday, 24 November 2009

Babbies stressed out

              இரண்டு நாட்களுக்கு முன் ஹிந்து news paper-ல் ஒரு news-ஐப் படித்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். Quaterly exam நன்றாக எழுதாததால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டாள் என்பதுதான் அந்த செய்தி. அடுத்த நாள் இன்னொரு செய்தி. ஒரு சிறுவன் தன் பெற்றோர் டி.வி. பார்க்க விடாததாலும், remote-ஐ கவனக்குறைவால் உடைத்து பயந்ததாலும் வீட்டை விட்டே ஒடிய செய்தி. ( actually i am considering not to read the news paper in detail to avoid getting into this kind of news. மேலோட்டமாக புரட்டுவதே மேல்.!!!)


                 நாங்கள் 8-வதுபடிக்கும்வரை Quaterly exam எல்லாம் ஒரு exam-ஆகவே consider பண்ண மாட்டோம். வழக்கம் போல் விளையாடிவிட்டு, ஏதோ கொஞ்சம் படித்துவிட்டு exam எழுதுவோம். 70 -80% வாங்குவோம். எங்கள் அம்மாவும் ஒன்றும் திட்ட மாட்டார்கள். 10, 12 வகுப்புகளில் தானாகவே பொறுப்பு வந்து படித்தோம். (என் அண்ணன் XII exam போது கூட hockey விளையாடாமல் இருந்தது இல்லை). இதனால் நாங்கள் யாரும் குறைந்து போகவில்லை. எல்லோரும் M.B.A., C.A., B.E., Ph.D., என்று பட்டப்படிப்பு முடித்திருக்கிறோம். என் அம்மாவின் 'take it easy' policy எங்களைப் பொறுப்பு மிக்கவர்களாகவே ஆக்கியது.

                         ஆனால் இன்று இந்த parents கொடுக்கும் தொல்லை தாங்க முடியவில்லை. தங்கள் குழந்தைகளை 4- 5 வயதிலேயே கராத்தே, பாட்டு, டான்ஸ் என்று classes-ல் சேர்ப்பது மட்டுமன்றி எல்லாவற்றிலும், முதன்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குழந்தைப் பருவத்தில் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு நேரமே இல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியைத் தொலைக்கிறார்கள். school- ல் படிப்பது போதாதென்று கட்டாயமாக tution அனுப்புகிறார்கள். நாங்கள் படிக்கும்போது tution போவது கௌரவக் குறைவாக இருந்தது. இப்பொழுதோ 99% வாங்குபவர்கள் கூட tution போகிறார்கள். இத்தனைக் கஷ்டப்பட்டு படித்து 98% வாங்கினாலும் கூட பாராட்டாது, விட்ட அந்த 2% -க்காக குழந்தைகளைத் திட்டி தீர்க்கிறார்கள் பெற்றவர்கள். இதனால் அவர்களின் மன அமைதி (peace)யும் தொலைகிறது. பாக்கியம் ராமசாமி அவர்கள் '+2 தியாகிகள்' என்ற சிறுகதையில் due to the anxiety of the parents what kind of torture the students undergo என்பதை மிக அழகாக நகைச்சுவையுடன் எழுதியிருப்பார்.



                  என் அம்மாவின் குழந்தை பருவத்தில் மிக பெரிய கூட்டுக் குடும்பமாக (பெரியம்மா, பெரியப்பா, cousins) இருந்ததால் அவர்களுக்கு விளையாட, படிக்க வசதியாக இருந்தது மட்டுமல்லாது, விட்டுக்கொடுத்தல், sharing,obedience என்பதெல்லாம் இயல்பாகவே வந்தது. எங்கள் குழந்தை பருவத்தில் atleast விடுமுறையின்போது நாங்கள் cousins எல்லோரும் ஒன்றாய் இருந்ததால் மேற்சொன்ன விஷயங்களைக் கொஞ்சமாவது கற்றுக் கொண்டோம். இன்றைய தலைமுறையிலோ எல்லா குழந்தைகளும் அவர்கள் வீட்டில் ராஜா, ராணி தான். பக்கத்து சமஸ்தானத்தை எட்டிக் கூட பார்ப்பதில்லை. இந்த நிலையில் அவர்களுக்கு எப்படி விட்டுக்கொடுத்தல் போன்ற மேற்சொன்ன விஷயங்கள் வரும்? (அதுவும் ஓரே ஒரு குழந்தை என்றால் கேட்கவே வேண்டாம்!!!).

                        உறவுகளைச் சுருக்கிக் கொண்டதாலும், எதிர்பார்ப்புகளைப் பெருக்கிக் கொண்டதாலும், நமக்கு அந்நியமாக இருந்த stress, anxiety போன்ற வார்த்தைகளை நாம்அன்றாடம் கேட்க, உணர முடிகிறது. இதன் விளைவுகள்தான் முதலில் படித்த செய்திகள்.

                        அமெரிக்காவில் பள்ளிகளில் கூட துப்பாக்கி சூடு நடைபெறுவதைப் படிக்கும்போது முன்பெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். இப்பொழுது இந்தியாவில் நடப்பதைப் படிக்கும் போது, நாம் அமெரிக்காவை எட்டிப் பிடிக்கும் (இந்த விஷயத்தில்) நாள் தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.

Wednesday, 18 November 2009

பொம்மலாட்டம்

                         கடந்த வாரம் குவைத்தில் இந்திய கலாசார விழா கொண்டாடப்பட்டது.  அதில் இரு நிகழ்ச்சிகளைக் காணும் வாய்ப்பு கிட்டியது.


                         முதலாவது பொம்மலாட்டம்.  இராஜஸ்தானிலிருந்து வந்த இருவர் மிக அருமையாக பொம்மலாட்டம் நடத்தினர். ஒரு பாட்டுக்கு பொம்மை அழகாக இடுப்பை ஒடித்து ஆடியதும், மண்டியிட்டு இசைக்கு ஏற்ப கால்களை அசைத்து ஆடியதும் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

                              இரண்டாவது shadow puppet show.  கர்னாடகாவில் ஹசன் என்னுமிடத்திலிருந்து வந்திருந்தார்கள். ஆட்டு தோலைப் பதப்படுத்தி அதை very thin sheets ஆக cut செய்திருக்கிறார்கள்.  அதில் மிக அழகாக உருவங்களை வரைந்து அருமையாக வண்ணம் தீட்டியிருக்கிறார்கள். அதில் சின்ன சின்ன துளைகளயும் (must have had lots of patience and devotion to the art) போட்டிருக்கிறார்கள். பெரிய திரைக்குப் பின்னால் powerful light போட்டு இரண்டிற்கும் நடுவில் இந்த உருவங்களை வைத்து puppet போல் ஆட வைக்கிறார்கள். (cinema காட்டுவதைப்போல் தான்). அத்தனை மெல்லிய sheets-ல் எப்படித்தான் கை கால்களை ஆட்டும்படி பண்ணினார்களோ!!! Great work!.








Wednesday, 11 November 2009

போதுமடா இந்த(தி) தொல்லை

                         இப்பொழுது Abbacus class-க்கு அனுப்புவது fancy யாக இருப்பது போல், நான் school படிக்கும் காலத்தில் hindi class அனுப்புவது பெருமையான விஷயமாக( parents-க்கு) இருந்தது. என் அம்மாவும் எங்களை அனுப்பினார். முதலில் சொல்லிக் கொடுத்த வாத்தியார் dictation வைத்தே கடுப்படித்தார். அப்பொழுதுதான் hindi alphabets கற்றுக்கொடுத்துகொண்டிருந்தார். Dicatation கொடுக்கும்போது தெளிவாகச் சொல்லாமல் வாய்க்குள்ளேயே பாதியை மென்று விழுங்கிவிடுவார். இவர் என்ன letter சொல்கிறார் என்று புரியாமல் guess பண்ணியே எழுதி பாதிக்கு மேல் தப்பாகிவிடும். அதனால் ஹிந்தி மேலேயே ஒரு வெறுப்பு வந்துவிட்டது.
               

                        என் அம்மாவும் விடாமல் இன்னொரு teacher-கிட்டே சேர்த்துவிட்டார். நானும் அன் அக்காவும் எப்படியோ 3rd level (rashtra bhasha) வரை பாஸ் செய்துவிட்டாலும் 'ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பது ஹிந்தியைப் பொறுத்தவரை உண்மையாகவே இருந்தது. ஒருமுறை படித்துக் கொண்டிருக்கும்போது என் அக்காவிடம்  गिर्जाजा्घर ( church) என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டேன். அவளோ 'கீழே விழுந்து எழுந்து வீட்டுக்குப் போ' என்று விளக்கம் சொன்னாள். என்ன சொல்ல?!!!.


                          என் நண்பர்களின் ஹிந்தி அனுபவம் அதைவிடச் சுவையாக இருக்கும். ஒருமுறை நண்பரோடு நானும் என் கணவரும் டாக்சியில் போய்கொண்டிருந்தோம். வெய்யில் கடுமையாக இருந்ததால் நண்பர் a/c போடுமாறு சொன்னார். டாக்சிக்காரரும் நட்போடு ' गर्मि है?" என்று கேட்டு a/c போடப் போனார். அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் எங்கள் நண்பர் ' घर मे है; तू इदर डाल " என்று கோவமாக பதில் சொன்னார். பின்னர் புரிந்து கொண்டு நாங்கள் மூவரும் வயிறு வலிக்க சிரித்தோம்.

                என் இன்னொரு தோழியும் என்னைப்போல் ஹிந்தி தவிர்ப்பாளர். அவர் பாவம் கல்யாணமாகி டெல்லிக்குப் போய் படாத பாடு பட்டுப்போனார். எப்படியும் ஹிந்தி கற்றுக்கொண்டேயாக வேண்டும் என்ற வெறியோடு தன் வீட்டு வேலைக்காரரோடு பேசி ஹிந்தி பழக ஆரம்பித்தார். பைய பைய வேலைக்கார भैया விடமிருந்து ஹிந்தி ஓரளவு பேசக் கற்றுக்கொண்டார். அவருடைய கெட்ட நேரம், வேலை செய்பவர் வேலையை விட்டுச் சென்றுவிட்டார். புதிதாக ஒரு பெண் வேலையில் சேர்ந்தார். என் தோழி அவரிடமும் भैया என்று ஆரம்பித்தே எப்போதும் பேசியிருக்கிறார். பொறுத்து பொறுத்து பார்த்த புது வேலைக்கார பெண்மணியும் ' அம்மா, என்னை भैया என்று அழைக்காதீர்கள். बहन என்றோ இல்லை பெயர் சொல்லியோ கூப்பிடுங்கள்" என்றாராம். என் தோழி, 'அம்மா , भैया என்று ஆரம்பித்தால்தான் எனக்கு ஹிந்தி பேசவே வருகிறது. நீ கொஞ்சம் adjust பண்ணிக்கொள்" என்றாராம்!!!.

                                ஹிந்தியால் இப்படி நொந்து, போதுமடா இந்த(தி)த் தொல்லை என்று என் மகளைப் பள்ளியில் கூட ஹிந்தி language எடுக்கவிடவில்லை. அவளானால் ஹிந்தி திரைப்படப் பாடல்களைத்தான் ரசிக்கிறாள். 'अन्जान रास्ता' என்று தெளிவாகப் பாடுகிறாள். அவளாவது ஹிந்தியை ரசிக்கட்டும் என்பதால் அவளை hindhi class-க்கு அனுப்ப வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துவிட்டோம்.

Sunday, 8 November 2009

(ராம)ஜெயமிருந்தால் பயமில்லை

                            மூன்றாம் சுழி என்ற blogspot-ல் குடுகுடுபாண்டியைப் பற்றி வந்த பதிவைப் படித்ததும் சின்ன வயதில் என்னைப் பயத்தில் ஆழ்த்திய சம்பவம் நினைவிற்கு வந்தது. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் lunch break-ல் நானும் என் தோழியும் classroom-ல் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது என் classmate ஒருத்தி ( அவள் hallucinations-ல் ஆழ்ந்திருந்ததால் haly என்ற பெயர் வைப்போம்.) உள்ளே வந்து bench-ல் படுத்துக்கொண்டாள். இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறைத் தலையை இட வலமாக அசைத்தாள். கொஞ்ச நேரத்தில் தலையைச் சுழற்றி சுழற்றி ஆட்டினாள் (தமிழ் படங்களில் சாமி ஆடுபவர்கள் செய்வார்களே, அதுபோல்.). நான் ரொம்ப பரிவுடன் அவளிடம் சென்று "என்ன ஆச்சு? தலை வலிக்குதா? சாப்பிட்டாயா? இல்லையா? tired-ஆ இருக்கா? " என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தேன். அவள் கடுப்பாகி " முதலில் நீ யார்?" என்று கோவமாகக் கத்தினாள். (அவளைப் பிடித்ததாகச் சொல்லப்படும் பேய் இத்தனைக் கேள்விகளை ஒருசேர அதன் lifetime-ல் கேட்டிருக்காது போலும்). என்னடா இது, என்னைத் தெரியவில்லையா என்று நான் விழித்துக்கொண்டிருந்தேன். என் தோழிக்கு முன்னனுபவம் உண்டு போலும். 'முதலில் வா வெளியே' என்று என்னை இழுத்துக் கொண்டு ஓடினாள். Lunch break முடிந்த பின் எங்கள் அனைவரையும் மரத்தடிக்குக் கூட்டிக்கொண்டு போய் class நடத்தினார்கள். ஒரு மணி நேரம் கழித்து haly மிகவும் tired ஆக வந்தாள். என் தோழி,' சொன்னேன் பார்த்தாயா, அவளுக்குப் பேய் பிடித்திருக்கென்று' என்றாள். நான் அதன் seriousness புரியாமல் மாலையில் haly-யிடம் 'நீ பயப்படாதே. எப்பவும் கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டிரு. எந்த பேயும் கிட்டேயே வராது' அது இது என்று advice பண்ணி தைரியம் கொடுத்து வீடு வரை கொண்டு விட்டு வந்தேன். அன்று என் வீட்டில் யாரிடமும் இதைப்

பற்றி பேசியதாக நினைவில்லை.

                        மறுநாள் மீண்டும் lunch break-ல் haly-க்கு hallucinations ஆரம்பித்துவிட்டது. முன்தினம் நான் தைரியம் சொன்னதால் haly என்னைத் தேடியிருக்கிறாள். என் friends எல்லோரும் என்னைத் தேடி ஓடி வந்து "நேற்று யார் உன்னை அவளுக்குத் தைரியம் சொல்லச்சொன்னது? யார் அவளுடன் வீட்டுக்குப் போக சொன்னது? அவ இப்ப உன்னையே தேடிண்டு இருக்கா!!" என்று சொல்லி என்னைப் பாதுகாப்பாக வேறு building-க்குக் கூட்டிப்போனார்கள். அன்றைய haly-யின் (பேய்)ஆட்டம் முடிந்ததும் அவள் நேராக வீட்டிற்கு அனுப்பப்பட்டாள்.

                        நான் வீடு திரும்பியதும் மெதுவாக என் பாட்டியிடம் போய் (ஒட்டிக்கொள்வது மாதிரி) உட்கார்ந்தேன். மெதுவாக அவரிடம் கதையைச் சொன்னேன். அவர் உடனே விபூதியை அள்ளி நெற்றியில் பூசிவிட்டு "விபூதி இருக்கு இல்லையா. உனக்கு இனிமேல் பயமே வேண்டாம். பேயெல்லாம் ஒன்றும் பண்ணாது" என்றார். பயம் போனதோ இல்லையோ, அந்த விபூதி விஷயத்தை மட்டும் நான் இறுக்கப் பிடித்துக்கொண்டேன்.

                  Night படுக்கும்போது நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டதோடு பத்து விரல்களிலும் மருதாணி போல் விபூதி இட்டுக் கொண்டுதான் (தூங்கும்பொது அழிந்தால் நெற்றியில் மீண்டும் இட்டுக் கொள்ளத்தான் கைவிரல்களில் stock வைத்திருப்பது) படுத்துக் கொள்வேன். Haly-க்கு பேய் பிடித்தபோது என் பெயர் மறந்து என்னை யார் என்று கேட்டாளில்லையா? அதனால் தினமும் காலையில் எழுந்தவுடன் என் பெயர், அம்மா, அக்கா, அண்ணா, பக்கத்து வீட்டு aunty என்று எல்லார் பெயரையும் சொல்லிப்பார்த்துக் கொள்வேன். (வேறெதற்கு, எனக்குப் பேய் பிடிக்கவில்லை என்று உறுதி செய்து கொள்ளத்தான்!!!).  ஒருவாரம் இப்படி பயத்திலேயே கழிந்தது.  ஒருவாரமாக halyயும் school-க்கு வரவில்லை.

                               இதற்குள் எங்களுக்கு half-yearly exam ஆரம்பித்து விட்டது.  Exam hall-க்குள் நுழைந்த நான் என் bench--க்குப் பின்னால் haly உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பிடித்தேன் ஓட்டம். Exam hall-ல் இருந்த teachers எல்லோரும் ஓடி வந்து என்னைப்பிடித்து விசாரித்தார்கள். நான் haly-யைக் காட்டி பயமாக இருப்பதால் நான் வீட்டிற்குப் போகவேண்டும் என்று அழ ஆரம்பித்து விட்டேன். எப்படியோ என்னைத் தேற்றி teacher பக்கத்திலேயே உட்கார்ந்து exam எழுத வைத்தார்கள். பின்னர் என் அக்காவை அழைத்து கதையைக் கூறி என்னைக் கூட்டிப் போகச் சொன்னார்கள்.

                              வீட்டிற்கு வந்ததும் என் அம்மா என்னிடம் ரொம்ப நேரம் தைரியம் சொன்னார்கள். " கடவுள் நம்பிக்கை இருந்தால் வேறெந்த பயமும் இல்லை. எப்பொழுதும் ஸ்ரீராமஜெயம் என்று சொல்லிக்கொண்டு இரு. உன் பயம் தூர விலகும். என்னுடைய மகளாயிருந்தும் நீ பயப்படலாமா?. கடவுளை நம்பு. கவலையை விடு" என்றார். அது என் பயத்தை மந்திரம் போட்டார்போல் விரட்டியது. அன்று முதல் விழித்திருக்கும் போதெல்லாம் ராமஜெயம் சொல்வது வழக்கமாகிவிட்டது. இப்பொழுதும் அது ஒரு involuntary action-ஆக மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

                                     அதற்குப் பிறகு பலமுறை நான் Exam hall-லிருந்து பிடித்த ஓட்டத்தை நினைத்து சிரித்திருக்கிறேன். சிறு வயதில் ஏற்படும் பயங்களும் கவலைகளும் எப்படி அம்மாவின் நம்பிக்கை வார்த்தைகளால் போக்கப்படுகிறது என்ற அந்த பாடத்தை இப்பொழுது என் daughter -ரிடம் practical-ஆக பயன்படுத்துகிறேன்.

Monday, 2 November 2009

காணாமல் போன கலாசாரம்

சமீபத்தில் இரண்டு நல்ல தமிழ் படங்களைப் பார்த்தேன்.

முதலில் 'திருதிரு துறுதுறு". (படம் பேரே அதுதானுங்க!). காணாமல் போன ஒரு குழந்தையை எப்படி அதன் பெற்றோரிடம் சேர்க்கிறார்கள் என்பது கதை. கதையை நகைசுவை இழையோட, விறுவிறுப்பு குன்றாமல் சொல்லியிருக்கிறார்கள். தாத்தா, பாட்டி, பேரன் , பேத்தி, என்று அனைவரும் சங்கடப்படாமல் ஒன்றாக உட்கார்ந்து பார்க்கக்கூடிய வகையில் எடுத்த director-க்கு hats off!!!. படத்தை அழகாக எடுத்தவர் ஒரு பெண் (நந்தினி). அவர் மேலும் இது போன்ற தரமான படங்களையே எடுக்க வாழ்த்துக்கள்.



அடுத்தது 'பேராண்மை'. நம் நாட்டில் rocket launch செய்வதைத் தடுக்க வந்த அந்நிய சக்திகளை முறியடிக்கும் NCC மாணவிகள் & trainer கூட்டணி பற்றிய கதை. ஆங்கில படங்களுக்கு நிகராக பின்பாதி எடுக்கப்பட்டிருக்கிறது. (ஆமாம், இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஆங்கில படங்களுக்கு நிகராக என்றே சொல்லிகொண்டிருப்போம்? எப்பொழுது அவர்களை விஞ்சப்போகிறோம்?). Genetically engineered விதைகளைப் பற்றிய வசனங்கள் 'அட!' போட வைக்கின்றன. ஆனால் கடமை, கண்ணியம் , கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டிய NCC மாணவிகள் பற்றிய படத்திலேயே கண்ணியம் குறைந்த காட்சிகளை வைத்த, அதுவும் பெண்களை வைத்தே பேச வைத்த directorன் நெஞ்சழுத்தம் கோவப்பட வைத்தது. தமிழ் படங்களில் சமீப காலமாகக் காணாமல் போன கலாசாரம், கண்ணியம் இவற்றை யாரவது கண்டு பிடித்துக் கொடுப்பார்களா?