Monday, 2 November 2009

காணாமல் போன கலாசாரம்

சமீபத்தில் இரண்டு நல்ல தமிழ் படங்களைப் பார்த்தேன்.

முதலில் 'திருதிரு துறுதுறு". (படம் பேரே அதுதானுங்க!). காணாமல் போன ஒரு குழந்தையை எப்படி அதன் பெற்றோரிடம் சேர்க்கிறார்கள் என்பது கதை. கதையை நகைசுவை இழையோட, விறுவிறுப்பு குன்றாமல் சொல்லியிருக்கிறார்கள். தாத்தா, பாட்டி, பேரன் , பேத்தி, என்று அனைவரும் சங்கடப்படாமல் ஒன்றாக உட்கார்ந்து பார்க்கக்கூடிய வகையில் எடுத்த director-க்கு hats off!!!. படத்தை அழகாக எடுத்தவர் ஒரு பெண் (நந்தினி). அவர் மேலும் இது போன்ற தரமான படங்களையே எடுக்க வாழ்த்துக்கள்.



அடுத்தது 'பேராண்மை'. நம் நாட்டில் rocket launch செய்வதைத் தடுக்க வந்த அந்நிய சக்திகளை முறியடிக்கும் NCC மாணவிகள் & trainer கூட்டணி பற்றிய கதை. ஆங்கில படங்களுக்கு நிகராக பின்பாதி எடுக்கப்பட்டிருக்கிறது. (ஆமாம், இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஆங்கில படங்களுக்கு நிகராக என்றே சொல்லிகொண்டிருப்போம்? எப்பொழுது அவர்களை விஞ்சப்போகிறோம்?). Genetically engineered விதைகளைப் பற்றிய வசனங்கள் 'அட!' போட வைக்கின்றன. ஆனால் கடமை, கண்ணியம் , கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டிய NCC மாணவிகள் பற்றிய படத்திலேயே கண்ணியம் குறைந்த காட்சிகளை வைத்த, அதுவும் பெண்களை வைத்தே பேச வைத்த directorன் நெஞ்சழுத்தம் கோவப்பட வைத்தது. தமிழ் படங்களில் சமீப காலமாகக் காணாமல் போன கலாசாரம், கண்ணியம் இவற்றை யாரவது கண்டு பிடித்துக் கொடுப்பார்களா?

5 comments:

Anonymous said...

dear geedhu,

kalacharatha kanum, adtha kanum ethakanum yeru solikkonde antha karaviya nama vidama parpadhaladhan kanama poona ovonrum pudaidhu pudhaidhu kandu pidikkave mudiyadha aazhathil poivitadhu. pakaradha neenga niruthina edukaradha avargal niruthuvargal.

anbulla ladha

geetha santhanam said...

நீ சொல்வது சரிதான். ஆனால் இதை எப்படி நிறுத்துவது? (இப்படியெல்லாம் படம் எடுக்கறாங்களே முதல்லே அவங்களை நிறுத்த சொல்லு அப்புறம் நான் நிறுத்தறேன் என்று நாயகன் பாணியில் புலம்ப வேண்டியதுதான்.)--கீது

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

கலாசாரம்
குடிக்கலாமென்று போனால்
கலா கண்ணுக்குத் தெரியாதென்று சொல்லிவிட்டார்கள்
பாழும் பூமி வாசிகள்

Anu said...

"திருதிரு துருதுரு"வா? எங்க ஊருக்கு அந்தப் படம் வர்றதுக்குள்ளே "லொடலொட குடுகுடு"ன்னு ஆகிடுமே!