Sunday 8 November 2009

(ராம)ஜெயமிருந்தால் பயமில்லை

                            மூன்றாம் சுழி என்ற blogspot-ல் குடுகுடுபாண்டியைப் பற்றி வந்த பதிவைப் படித்ததும் சின்ன வயதில் என்னைப் பயத்தில் ஆழ்த்திய சம்பவம் நினைவிற்கு வந்தது. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் lunch break-ல் நானும் என் தோழியும் classroom-ல் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது என் classmate ஒருத்தி ( அவள் hallucinations-ல் ஆழ்ந்திருந்ததால் haly என்ற பெயர் வைப்போம்.) உள்ளே வந்து bench-ல் படுத்துக்கொண்டாள். இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறைத் தலையை இட வலமாக அசைத்தாள். கொஞ்ச நேரத்தில் தலையைச் சுழற்றி சுழற்றி ஆட்டினாள் (தமிழ் படங்களில் சாமி ஆடுபவர்கள் செய்வார்களே, அதுபோல்.). நான் ரொம்ப பரிவுடன் அவளிடம் சென்று "என்ன ஆச்சு? தலை வலிக்குதா? சாப்பிட்டாயா? இல்லையா? tired-ஆ இருக்கா? " என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தேன். அவள் கடுப்பாகி " முதலில் நீ யார்?" என்று கோவமாகக் கத்தினாள். (அவளைப் பிடித்ததாகச் சொல்லப்படும் பேய் இத்தனைக் கேள்விகளை ஒருசேர அதன் lifetime-ல் கேட்டிருக்காது போலும்). என்னடா இது, என்னைத் தெரியவில்லையா என்று நான் விழித்துக்கொண்டிருந்தேன். என் தோழிக்கு முன்னனுபவம் உண்டு போலும். 'முதலில் வா வெளியே' என்று என்னை இழுத்துக் கொண்டு ஓடினாள். Lunch break முடிந்த பின் எங்கள் அனைவரையும் மரத்தடிக்குக் கூட்டிக்கொண்டு போய் class நடத்தினார்கள். ஒரு மணி நேரம் கழித்து haly மிகவும் tired ஆக வந்தாள். என் தோழி,' சொன்னேன் பார்த்தாயா, அவளுக்குப் பேய் பிடித்திருக்கென்று' என்றாள். நான் அதன் seriousness புரியாமல் மாலையில் haly-யிடம் 'நீ பயப்படாதே. எப்பவும் கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டிரு. எந்த பேயும் கிட்டேயே வராது' அது இது என்று advice பண்ணி தைரியம் கொடுத்து வீடு வரை கொண்டு விட்டு வந்தேன். அன்று என் வீட்டில் யாரிடமும் இதைப்

பற்றி பேசியதாக நினைவில்லை.

                        மறுநாள் மீண்டும் lunch break-ல் haly-க்கு hallucinations ஆரம்பித்துவிட்டது. முன்தினம் நான் தைரியம் சொன்னதால் haly என்னைத் தேடியிருக்கிறாள். என் friends எல்லோரும் என்னைத் தேடி ஓடி வந்து "நேற்று யார் உன்னை அவளுக்குத் தைரியம் சொல்லச்சொன்னது? யார் அவளுடன் வீட்டுக்குப் போக சொன்னது? அவ இப்ப உன்னையே தேடிண்டு இருக்கா!!" என்று சொல்லி என்னைப் பாதுகாப்பாக வேறு building-க்குக் கூட்டிப்போனார்கள். அன்றைய haly-யின் (பேய்)ஆட்டம் முடிந்ததும் அவள் நேராக வீட்டிற்கு அனுப்பப்பட்டாள்.

                        நான் வீடு திரும்பியதும் மெதுவாக என் பாட்டியிடம் போய் (ஒட்டிக்கொள்வது மாதிரி) உட்கார்ந்தேன். மெதுவாக அவரிடம் கதையைச் சொன்னேன். அவர் உடனே விபூதியை அள்ளி நெற்றியில் பூசிவிட்டு "விபூதி இருக்கு இல்லையா. உனக்கு இனிமேல் பயமே வேண்டாம். பேயெல்லாம் ஒன்றும் பண்ணாது" என்றார். பயம் போனதோ இல்லையோ, அந்த விபூதி விஷயத்தை மட்டும் நான் இறுக்கப் பிடித்துக்கொண்டேன்.

                  Night படுக்கும்போது நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டதோடு பத்து விரல்களிலும் மருதாணி போல் விபூதி இட்டுக் கொண்டுதான் (தூங்கும்பொது அழிந்தால் நெற்றியில் மீண்டும் இட்டுக் கொள்ளத்தான் கைவிரல்களில் stock வைத்திருப்பது) படுத்துக் கொள்வேன். Haly-க்கு பேய் பிடித்தபோது என் பெயர் மறந்து என்னை யார் என்று கேட்டாளில்லையா? அதனால் தினமும் காலையில் எழுந்தவுடன் என் பெயர், அம்மா, அக்கா, அண்ணா, பக்கத்து வீட்டு aunty என்று எல்லார் பெயரையும் சொல்லிப்பார்த்துக் கொள்வேன். (வேறெதற்கு, எனக்குப் பேய் பிடிக்கவில்லை என்று உறுதி செய்து கொள்ளத்தான்!!!).  ஒருவாரம் இப்படி பயத்திலேயே கழிந்தது.  ஒருவாரமாக halyயும் school-க்கு வரவில்லை.

                               இதற்குள் எங்களுக்கு half-yearly exam ஆரம்பித்து விட்டது.  Exam hall-க்குள் நுழைந்த நான் என் bench--க்குப் பின்னால் haly உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பிடித்தேன் ஓட்டம். Exam hall-ல் இருந்த teachers எல்லோரும் ஓடி வந்து என்னைப்பிடித்து விசாரித்தார்கள். நான் haly-யைக் காட்டி பயமாக இருப்பதால் நான் வீட்டிற்குப் போகவேண்டும் என்று அழ ஆரம்பித்து விட்டேன். எப்படியோ என்னைத் தேற்றி teacher பக்கத்திலேயே உட்கார்ந்து exam எழுத வைத்தார்கள். பின்னர் என் அக்காவை அழைத்து கதையைக் கூறி என்னைக் கூட்டிப் போகச் சொன்னார்கள்.

                              வீட்டிற்கு வந்ததும் என் அம்மா என்னிடம் ரொம்ப நேரம் தைரியம் சொன்னார்கள். " கடவுள் நம்பிக்கை இருந்தால் வேறெந்த பயமும் இல்லை. எப்பொழுதும் ஸ்ரீராமஜெயம் என்று சொல்லிக்கொண்டு இரு. உன் பயம் தூர விலகும். என்னுடைய மகளாயிருந்தும் நீ பயப்படலாமா?. கடவுளை நம்பு. கவலையை விடு" என்றார். அது என் பயத்தை மந்திரம் போட்டார்போல் விரட்டியது. அன்று முதல் விழித்திருக்கும் போதெல்லாம் ராமஜெயம் சொல்வது வழக்கமாகிவிட்டது. இப்பொழுதும் அது ஒரு involuntary action-ஆக மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

                                     அதற்குப் பிறகு பலமுறை நான் Exam hall-லிருந்து பிடித்த ஓட்டத்தை நினைத்து சிரித்திருக்கிறேன். சிறு வயதில் ஏற்படும் பயங்களும் கவலைகளும் எப்படி அம்மாவின் நம்பிக்கை வார்த்தைகளால் போக்கப்படுகிறது என்ற அந்த பாடத்தை இப்பொழுது என் daughter -ரிடம் practical-ஆக பயன்படுத்துகிறேன்.

3 comments:

Anonymous said...

அன்புள்ள கீது,
எனக்கு தெரிந்து நீ உன் மகளை முதலில் இதற்கெல்லாம் பயப்படனும் ! அப்புறம்தான் ஸ்ரீராமஜெயம் சொல்லி பயத்தை போக்கி கொள்ள வேண்டும் என்றுதான் பழக்கி இருக்கிறாய் ! நே சொன்னது அதனும் உண்மை. ராம நாமம் பயத்தை போக்கடிக்கும்

அன்புள்ள லதா

vaibhavi enpadhai entha transitite romba mosamaga thamizh paduthugiradu. nee try panni paar !

geetha santhanam said...

களவும் கற்று மற என்பது போல் பயமும் பெற்று (பட்டு) மற. ----கீது

Anu said...

அந்த "ஹாலி" பொண்ணு அதோட பிலாகுல என்ன எழுதிச்சோ?
"எங்க கிளாசில கீதான்னு ஒரு பொண்ணு, ரொம்ப பயந்தாங்குளி. நாங்கள்லாம் அவளை "பீதி"ன்னுதான் கூப்பிடுவோம். ஒரு நாள் நான் அவளை பயமுறுத்த என்ன செஞ்சேன் தெரியுமோ?...." ...."