Wednesday 11 November 2009

போதுமடா இந்த(தி) தொல்லை

                         இப்பொழுது Abbacus class-க்கு அனுப்புவது fancy யாக இருப்பது போல், நான் school படிக்கும் காலத்தில் hindi class அனுப்புவது பெருமையான விஷயமாக( parents-க்கு) இருந்தது. என் அம்மாவும் எங்களை அனுப்பினார். முதலில் சொல்லிக் கொடுத்த வாத்தியார் dictation வைத்தே கடுப்படித்தார். அப்பொழுதுதான் hindi alphabets கற்றுக்கொடுத்துகொண்டிருந்தார். Dicatation கொடுக்கும்போது தெளிவாகச் சொல்லாமல் வாய்க்குள்ளேயே பாதியை மென்று விழுங்கிவிடுவார். இவர் என்ன letter சொல்கிறார் என்று புரியாமல் guess பண்ணியே எழுதி பாதிக்கு மேல் தப்பாகிவிடும். அதனால் ஹிந்தி மேலேயே ஒரு வெறுப்பு வந்துவிட்டது.
               

                        என் அம்மாவும் விடாமல் இன்னொரு teacher-கிட்டே சேர்த்துவிட்டார். நானும் அன் அக்காவும் எப்படியோ 3rd level (rashtra bhasha) வரை பாஸ் செய்துவிட்டாலும் 'ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பது ஹிந்தியைப் பொறுத்தவரை உண்மையாகவே இருந்தது. ஒருமுறை படித்துக் கொண்டிருக்கும்போது என் அக்காவிடம்  गिर्जाजा्घर ( church) என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டேன். அவளோ 'கீழே விழுந்து எழுந்து வீட்டுக்குப் போ' என்று விளக்கம் சொன்னாள். என்ன சொல்ல?!!!.


                          என் நண்பர்களின் ஹிந்தி அனுபவம் அதைவிடச் சுவையாக இருக்கும். ஒருமுறை நண்பரோடு நானும் என் கணவரும் டாக்சியில் போய்கொண்டிருந்தோம். வெய்யில் கடுமையாக இருந்ததால் நண்பர் a/c போடுமாறு சொன்னார். டாக்சிக்காரரும் நட்போடு ' गर्मि है?" என்று கேட்டு a/c போடப் போனார். அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் எங்கள் நண்பர் ' घर मे है; तू इदर डाल " என்று கோவமாக பதில் சொன்னார். பின்னர் புரிந்து கொண்டு நாங்கள் மூவரும் வயிறு வலிக்க சிரித்தோம்.

                என் இன்னொரு தோழியும் என்னைப்போல் ஹிந்தி தவிர்ப்பாளர். அவர் பாவம் கல்யாணமாகி டெல்லிக்குப் போய் படாத பாடு பட்டுப்போனார். எப்படியும் ஹிந்தி கற்றுக்கொண்டேயாக வேண்டும் என்ற வெறியோடு தன் வீட்டு வேலைக்காரரோடு பேசி ஹிந்தி பழக ஆரம்பித்தார். பைய பைய வேலைக்கார भैया விடமிருந்து ஹிந்தி ஓரளவு பேசக் கற்றுக்கொண்டார். அவருடைய கெட்ட நேரம், வேலை செய்பவர் வேலையை விட்டுச் சென்றுவிட்டார். புதிதாக ஒரு பெண் வேலையில் சேர்ந்தார். என் தோழி அவரிடமும் भैया என்று ஆரம்பித்தே எப்போதும் பேசியிருக்கிறார். பொறுத்து பொறுத்து பார்த்த புது வேலைக்கார பெண்மணியும் ' அம்மா, என்னை भैया என்று அழைக்காதீர்கள். बहन என்றோ இல்லை பெயர் சொல்லியோ கூப்பிடுங்கள்" என்றாராம். என் தோழி, 'அம்மா , भैया என்று ஆரம்பித்தால்தான் எனக்கு ஹிந்தி பேசவே வருகிறது. நீ கொஞ்சம் adjust பண்ணிக்கொள்" என்றாராம்!!!.

                                ஹிந்தியால் இப்படி நொந்து, போதுமடா இந்த(தி)த் தொல்லை என்று என் மகளைப் பள்ளியில் கூட ஹிந்தி language எடுக்கவிடவில்லை. அவளானால் ஹிந்தி திரைப்படப் பாடல்களைத்தான் ரசிக்கிறாள். 'अन्जान रास्ता' என்று தெளிவாகப் பாடுகிறாள். அவளாவது ஹிந்தியை ரசிக்கட்டும் என்பதால் அவளை hindhi class-க்கு அனுப்ப வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துவிட்டோம்.

2 comments:

Anonymous said...

கீது

நாம் படித்த ஹிந்தி பாட்டு எல்லாமே காமடி தான். நீ எழுதியதை படிக்கும் போது எனக்கு பாட்டு வாத்தியார் நியாபகம் வருகிறது

லதா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல நகைச்சுவை! .. மற்ற .பதிவுகளையும் ரசித்தேன்:)