Tuesday 25 May 2010

YES WE CAN

              எனக்குச் சொந்த ஊர் பல்லாவரத்தை அடுத்து உள்ள பம்மல்.  நாங்கள் அந்த ஊருக்கு குடிபெயர்ந்த புதிதில் (1975 என்று நினைக்கிறேன்) அதிக வீடுகள் கிடையாது.  கொல்லைக் கதவைத் திறந்து வைத்தால் காற்று உண்மையிலேயே பிய்த்துக் கொண்டு போகும் ( கொல்லைக் கதவே இப்பல்லாம் அரிதாகி விட்டது இந்த அடுக்குமாடி உலகில்!!!  என் மகள் என் அம்மா வீட்டிற்கு போனபோது 'ஐய்! பாட்டி வீட்டிற்கு ரெண்டு வாசல்' என்று ஆச்சர்யப்பட்டுப் போனாள்). கொசுவெல்லாம் கொஞ்சம் கூடக் கிடையாது. கிணற்று தண்ணீர் அவ்வளவு நன்றாக இருக்கும்.  பின்னர் அங்கு முளைத்த தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் தண்ணீர் குடிப்பதற்கு லாயக்கற்றதாக ஆனது. நிறைய வீடுகளும் வர காற்றுகூட கஷ்டப்பட்டுதான் வந்தது. திருடனைப் பற்றிக்கூட கவலைப்படாமல் கதவைத் திறந்து வைத்து நாங்கள் காற்றை அனுபவித்த காலம் போய் இந்த கொசுவிற்காகக் கதவு ஜன்னல் எல்லாம் மூட வேண்டியதாகிவிட்டது.

               இரு வருடங்களுக்கு முன் திரும்பவும் சொந்த ஊருக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. சிவன் கோவில் பக்கம் உள்ள குளத்தை ஆழப்படுத்தியது மட்டுமில்லாமல் ஒரு சிறுவர் பூங்கா, ஏரியைச் சுற்றி வாக்கிங் போக அழகான ஒரு பாதை என்று பம்மல் அழகாக மிளிர்ந்தது.  எல்லாம் exnora-வின் கைவண்ணம். வேளச்சேரி, பள்ளிக்கரணை பக்கமெல்லாம் குப்பையை மலையாகக் குவித்து வைப்பது மட்டுமிலாமல், அதை எரித்து அதனால் வரும் கொடுமையான நாற்றம் நம்மை 'எப்படித்தான் மக்கள் அங்கு குடியிருக்கிறார்களோ' என்று எண்ண வைக்கிறது.  பம்மலில் குப்பைகள் இல்லாமல் இருப்பதும் exnora-வின் கைவண்ணமே.

              சமீபத்தில் ஆனந்தவிகடனில் பம்மல் exnora-வைச் சேர்ந்த இந்திர குமார் அவர்களின் பேட்டி படித்ததும் மிகவும் வியப்பாக இருந்தது.  நமது வீட்டிலேயே மொட்டைமாடியில் தண்ணீர் சேகரிக்கும் வழி, காய்கறி பயிரிடும் யோசனைகளைப் படித்ததும் 'இத்தனை சிறிய இடத்தில் இவ்வளவு செய்யலாமா' என்று ஆச்சரியமாக இருந்தது.  வெட்டிவேர், தேற்றான் கொட்டைகள் (இது எப்படி இருக்கும்?) எல்லாம் இவ்வளவு powerful-ஆ?  இவர் சொல்லும் யோசனைகளைப் பின்பற்றினால் தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சமே இருக்காதே?!!!



19 comments:

எல் கே said...

பின்பற்றினால் தானே ??

அமுதா கிருஷ்ணா said...

படிக்கவே நல்லாயிருக்கு..

வடுவூர் குமார் said...

பெற்றோர் இருக்கும் வீட்டு மொட்டை மாடிக்கு (வெய்யில் சூடு இற‌ங்காம‌ல் இருக்க‌) நானும் என்னென்ன‌வோ யோசித்து பார்க்கிறேன்,ந‌ட‌க்க‌மாட்டேன் என்கிற‌து.ஊருக்கு போன‌தும் இந்த‌ மாதிரி ஏதாவ‌து தான் முய‌ற்சிக்க‌னும்.

geetha santhanam said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி LK, வடுவூர் குமார் & அமுதா க்ருஷ்ணா.--கீதா

ஸ்ரீராம். said...

நல்ல யோசனைதான்...LK யும் அமுதா கிருஷ்ணா வும் சொல்லியிருப்பதை போல படிக்க நல்லாயிருக்கு.

meenakshi said...

நல்ல பதிவு! Exnora ரொம்ப வருஷமா செய்யற இந்த சேவை மகத்தானது. நாங்க குடியிருந்த தெருவிலும் இதை அமல் செய்ய பலமுறை முயன்று, கடைசி வரைக்கும் முடியாமலே போச்சு.

சொந்த வீடு வைத்து கொண்டிருக்கும் பல பேர் வீடுகளில இந்த மொட்டை மாடி தோட்டம் செழிப்பா வளந்துண்டு வரது. என் தோழியின் வீட்டில் இதை பார்த்து மிகவும் அதிசயத்து போனேன். ஆனா இது பல பேர் குடியிருக்கும் வீடுகளில முடியறதில்லை, அவர்கள் மொட்டை மாடியில வேறு பலதுக்கும் உபயோகப் படுத்தறதால. இந்திரகுமாரின் அருமையான பேட்டியை படித்தபின் இதை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவலும், ஆசையும் தோன்றது. இதை கூடிய மட்டும் எல்லோரும், விரைவில் நிச்சயமாக முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

சாய்ராம் கோபாலன் said...

Wow. Brilliant one Geethu.

Last I remember visiting you guys in Pammal is when I came after either 10th or 12th Standard public exam !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பதிவு ..நன்றி..

geetha santhanam said...

நன்றி மீனாக்ஷி, முத்துலெட்சுமி & சாய்ராம்.
சாய்ராம், இந்த முறை வாய்ப்பு கிடைத்தால் போய் பார். நிச்சயம் ஒரு மாற்றம் தெரியும். ஆனால் இன்னமும் அந்த குண்டும் குழியுமான ரோடுதான்.--கீதா

அப்பாதுரை said...

பம்மலில் இத்தனை சீர்திருத்தம் என்றால் ஆச்சரியம் தான்.

அப்பாதுரை said...

தோல் பதனிகள் எத்தனையோ வருடங்களாக இருந்து வந்திருக்கின்றன. அந்தப் பக்கம் போனாலே கம கம என்று தோல் மணக்கும். க்ருஷ்ணா நகர், கோகுலம் காலனியை விட்டால் எல்ஐசி காலனி என்றிருந்த காலம் போய், பம்மல் வளர வளர தோல் கம்பெனியை குற்றம் சொல்லத் தொடங்கி விட்டார்கள். பம்மல் தண்ணீர் என்றைக்குமே சகிக்காது. அறுபதுகளிலும் சரி. எண்பதுகளிலும் சரி.

geetha santhanam said...

துரை, நாம் குடிபோன புதிதில் தண்ணீர் மிகவும் நன்றாக இருக்கும். பின்னர்தான் கெட்டுப் போனது. ---கீதா

எல் கே said...

உங்களை என் தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்
http://lksthoughts.blogspot.com/2010/05/iii_28.html

geetha santhanam said...

நன்றிகள் பல LK.--கீதா

Kousalya Raj said...

பிற ஊர்களிலும் இதை பின் பற்றினால் நல்லா இருக்கும்... ம்.. .ம்... நல்ல பதிவு, பணி தொடர வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள்

geetha santhanam said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கௌசல்யா மற்றும் பனித்துளி சங்கர் (எங்கள் ப்ளாகில் உங்கள் பின்னூடங்களில் வரும் 'மீண்டும் வருவான் பனித்துளி' என்ற உங்கள் sigature sentence' ஐ ரசிப்பேன்). --கீதா

அண்ணாமலையான் said...

நல்ல யோசனை,.,.,,

geetha santhanam said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அண்ணாமலையான் அவர்களே.---கீதா