Friday, 11 June 2010

அபிராமி அந்தாதி

              அபிராம பட்டர் என்றழைக்கப்படும் திரு.சுப்பிரமணிய அய்யர் அவர்கள் திருக்கடவூரில் எழுந்தருளியிருக்கும் அன்னை அபிராமியின் அழகையும் அருளையும் பற்றி அனைவரும் மிகச் சுலபமாகப் புரிந்து கொள்ளும் வகையில் பக்தியோடு புனைந்தது அபிராமி அந்தாதி. நான் பள்ளி செல்லும் காலத்திலிருந்து காலையில் விழிக்கும்போதே கேட்டுப் பழகியது 'உதிக்கின்ற செங்கதிர்....' என்று பூபாள ராகத்தில் என் அம்மாவின் இழைந்த குரலில் ஒலிக்கும் அபிராமி அந்தாதி.  எங்கள் அம்மா பாடுவதைக் கேட்டே எங்கள் அனைவருக்கும் அறிமுகமாகி , மறக்க முடியா வண்ணம் நெஞ்சில் பதிந்து போன ஒன்று.   அந்தப் பாடல்களை மேலும் எளிமையான முறையில் விளக்கி எழுதும் பணியை திரு.அப்பாதுரை அவர்கள் துவங்கியிருக்கிறார்.

              திரு. அப்பாதுரை அவர்கள் பதிவுலக அன்பர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.  அவரின் தமிழறிவும் எழுதும் நடையும் அவரின் மூன்றாம் சுழி (http://moonramsuzhi.blogspot.com) வலைப்பூவைப் படிக்கும் அனைவரும் ரசிக்கும் ஒன்று. அவர் அபிராமி அந்தாதி பற்றி எழுதும் http://kadavur.blogspot.com என்ற வலைப்பூவிலிருந்து மாதிரிக்கு ஒரு முத்து:

அபிராமி பட்டர் என்று அழைக்கப்பட்ட சுப்ரமணிய அய்யர் அந்தாதி, பாடுவானேன்? பத்து நூறு செய்யுள் பாடியிருக்கலாமே? அல்லது லலிதா சக்ஸ்ரநாமம் போல் அபிராமி சகஸ்ரநாமம் சொல்லியிருக்கலாமே? அந்தாதி பாடுவானேன்? (லலிதா சக்ஸ்ரநாமத்திலிருந்து கொஞ்சம் எடுத்து அந்தாதியில் சேர்த்திருக்கிறார் - விளக்கம் எழுதும் பொழுது, நினைவிருந்தால் அதையும் எழுதுகிறேன்). சரி, அந்தாதி பாடிய காரணம்? 

அபிராமி அந்தாதியின் பின்னணியில் இருக்கும் கதை பலருக்கும் தெரியும். "இன்றைக்கு என்ன திதி?" என்று அரசன் கேட்ட போது, அமாவாசைக்குப் பதிலாகப் பௌர்ணமி என்று சொல்லிவிட்டார் சுப்ரமணிய அய்யர். 'இதென்ன கூத்து?! இந்த அய்யரை நம்பி மக்கள் தங்கள் கர்மாக்களை எப்படிச் செய்ய முடியும்? திதி கூடத் தெரியவில்லையே?' என்று எரிச்சலடைந்த அரசன், "அய்யரே, இன்றிரவு நிலவு தோன்றாவிட்டால் உனக்கு மரண தண்டனை" என்று ஆணையிட்டுக் கிளம்பிவிட்டார். அய்யர் என்னத்தைக் கண்டார்? அபிராமியைத் தான் கண்டார். அமாவாசையும் ஒன்று தான் பௌர்ணமியும் ஒன்று தான். அதாவது, ஆதியும் அந்தமும் ஒன்று தான். எல்லாமே அபிராமி தான். ஆதியும் அந்தமும் ஒன்றிலொன்று அடக்கம் என்று அவர் எண்ணியதாலும், அது ஆதி அந்தமில்லாத அபிராமிக்குள் அடக்கம் என்று நம்பியதாலும் அந்தாதி பாடினார். 

                அவர் அபிராமி அந்தாதி பற்றி எழுதும் இந்த வலைப் பூவில் என் அம்மாவின் குரலில் பாடல்களைக் கேட்டு பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். தமிழ்,ஆன்மீகம் மற்றும் இசையில் ஈடுபாடுடைய அனைவருக்கும் இந்த வலைப்பூ பிடித்ததாக இருக்கும் என்பது என் கருத்து.

14 comments:

LK said...

அருமை. கண்டிப்பாக கேக்கிறேன்

ஸ்ரீராம். said...

நேற்றே பார்த்து, படித்து, பதிவிறக்கிக் கேட்டு விட்டேன்...அப்பாதுரை எழுத்துக்களைப் படிக்க ஆர்வமாக இருக்கிறேன். அவர் கண்டோபனிஷத் எழுதுவதையும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...

அப்பாதுரை said...

அடுத்தவர் (நிஜமாகவே கோவிலில் எழுதிக் கொடுத்தவர்) பாட்டை எடுத்து எழுதுவதில் வித்தையொன்றுமில்லை. அபிராமி பட்டர் பாடல்களில் நயமும் சுவையும் இருப்பதால் அப்பாதுரை பிளாக்கும் பிழைக்கும். அறிமுகத்துக்கு நன்றி.

geetha santhanam said...

நன்றி ஸ்ரீராம், LK. தொடர்ந்து அந்த ப்ளாக்கைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
துரை, ஸ்ரீராம் வைத்திருக்கும் request-ஐயும் நினைவில் வைக்கவும். ---கீதா

shanthi said...

geethu will defanitely go thro', have informed sriram also.

sreasy said...

thanks Geethu.

Durai has done a wonderful job.

it is amazing to realise how these songs have remained at the back of our minds that they sound so familiar and fresh!

hats off to Amma.

Sriram

sreasy said...

thanks Geethu.

Durai has done a wonderful job.

it is amazing to realize how these songs have remained at the back of our minds that they sound so familiar and fresh even today!

hats off to Amma.

Sriram

geetha santhanam said...

thanks sriram and shanthi.
yes, hats off to amma.---geedhu

சி. கருணாகரசு said...

அபிராமி அந்தாதியின் பின்னணியில் இருக்கும் கதை இப்போதுதான் தெரிந்துக்கொண்டேன்.
பகிர்வுக்கு நன்றி.

சாய்ராம் கோபாலன் said...

Durai, Geethu, Sriram

I am not sure whether your mom should be happy about you all or you guys should be. My feeling is that all of you are so gifted in some sense or the other. I am proud that I have known you all and at time feel jealous.

Durai,

You should not have Kadavul Nambikkai, nothing wrong in that as SHE is your GOD so why are you looking outside ?

geetha santhanam said...

நன்றி கருணாகரசு. திருக்கடவூர் ப்ளாக் மூலம் மேலும் பல நல்ல தகவல் உங்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி சாய்ராம். ---கீதா

அப்பாதுரை said...

You said it, Sairam.

அப்பாவி தங்கமணி said...

எனக்கும் இது ஸ்கூல்ல கொஞ்சம் செய்யுள் பகுதில படிச்ச ஞாபகம் இருக்கு. ஒரு பாடலின் அந்தம் (முடிவு வார்த்தை) அடுத்த பாடலின் ஆதியாக (முதல் வார்த்தை) வருவதால் இதற்கு அந்தாதின்னு தமிழாசிரியர் சொன்ன விளக்கமும் கூட அப்படியே இருக்கு மனசுல
(அந்த கதை பழைய சினிமால பாத்த ஞாபகம் இருக்கு)
பகிர்வுக்கு நன்றிங்க கீதா

Anonymous said...

அபிராமி அந்தாதி பாடியவர் அபிராம பட்டர் என்பதுதான் அனைவரும் அறிந்த செய்தி..
அபிராம பட்டருக்குள் சுப்பிரமணிய அய்யர் நுழைந்த வரலாறுக்கு தரவு ஏதாவது இருக்கிறதா?
நன்றி.