நம் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி பித்து இருப்பது தெரியும். அதுவும் அதில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் வாய்ப்பு கிடைத்தால் போதும் அவர்கள் தன்னை மறந்துவிடுகிறார்கள். உலகம் முழுதும் பெரும்பான்மை மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் என்ன பேசுகிறோம் என்று வரையரையில்லாமல் பேசுகிறார்கள். கோபிநாத் அவர்கள் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் தன் தாயைப் பற்றி குற்றப் பத்திரிகை வாசித்தது கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அம்மாவைப் பற்றி புரிந்து கொள்ளாதது ஒரு குறை; அவர்களின் அன்பை உணராததும் குறை; ஆனால் அதெல்லாம்விட பலர் முன்னிலையில் அம்மாவைப் பற்றி குறை கூறுவது என்னைப் பொறுத்தவரை பெரிய குற்றம் எனலாம்.
தொலைக்காட்சி, கணிணி போன்ற இயந்திரங்களுடன் manual கொடுப்பதுபோல் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் வருபவர்களுக்கு ஒரு code of conduct கொடுத்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது.
அது போல் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கும் code of conduct கொடுத்தால்கூட பரவாயில்லை. 'மாமா வீபுதி குங்குமம் கொடுங்க' என்று கை நிறைய வாங்கிக் கொண்டு ஒரு சொட்டு இட்டுக் கொண்டு மீதியைச் சுவற்றில் கொட்டி கோவிலின் சுவற்றை அழுக்காக்குவது குற்றம் என்று சட்டமே போடலாம் என்று தோன்றும். நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் (ஷீரடியில் உதி வைத்திருப்பது போல்) ஒரு விரல் மட்டும் செல்லும் அளவு துளை போட்ட மூடியால் விபூதி இருக்கும் ட்ரேயை மூடி வைத்திருப்பதால் இங்கு அந்த மாதிரி அழுக்கு செய்யாமலிருக்கிறார்கள். இதை எல்லா கோவிலிலும் நடைமுறைப்படுத்தலாம். (அப்படியே ஒரு கொசுறு தகவல். நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவிலுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு ஐயர் கடையில் காபி கிடைக்கிறது. ஒன்லி காபி மட்டும்தான் விற்கிறார். சூப்பரான காபி.)
வேளச்சேரியருகே மெயின் ரோடுக்கருகிலேயே ஒரு அம்மன் கோவிலில் போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் மக்கள் கும்பலாகக் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். இரவு வீடு திரும்பி வரும் நேரத்தில் பார்த்தால் மக்கள் கூழைக் காய்ச்சி முடித்துவிட்டு அந்தக் கோயில் வாசல் முழுவதும் பிளாஸ்டிக் பேப்பர் பைகளை அப்படியே குப்பையாகப் போட்டுவிட்டுப் போயிருந்தார்கள். சுத்தம் சோறு போடும் என்பார்கள். இவர்கள் சோறு சாப்பிட்டு குப்பையைப் போடுகிறார்கள்!!
கோவில் பற்றி பேசும்போது இந்த கோடை விடுமுறையில் கோவிந்தபுரம் பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகம் பார்த்த நினைவு வருகிறது. ஒரு வாரம் நடந்த அந்த விழாவில் பல விஷயங்கள் கவனத்தைக் கவர்ந்தன. (1) ஒரு வாரத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் வந்து போன போதிலும் ஒரு இடத்திலும் குப்பையே காணப்படவில்லை. (2) மெயின் ரோடிலேயே இருந்த போதிலும் பெரிய அளவில் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படவில்லை. (3). போலீஸ், மருத்துவம், தீயணைப்பு என்று பல விஷயங்களுக்குச் செய்யப்பட்ட முன்னேற்பாடு. (4). கோவிந்தபுரம் போல் ஒரு உள்ளடங்கிய கிராமத்திலிருந்து அந்த நிகழ்ச்சியை இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தது. (5) கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் ரத, கஜ, துரக பதாதிகளுடன் பாண்டுரங்கனையும் ருக்குமணியையும் ஊர்வலமாகக் கொண்டு வந்தது மறக்க முடியாத நிகழ்ச்சி. (6) எல்லா நிகழ்ச்சிகளையும் குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடித்தது.

காஞ்சிபுரமென்றால் சங்கர மடமும், காஞ்சி காமாக்ஷி கோவிலும், வரத ராஜ பெருமாள் கோவிலும் நினைவுக்கு வரும். இந்த முறை அங்குள்ள கைலாச நாதர் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. கோவிலெங்கும் சிற்பங்கள் மாமல்லபுரத்தை நினைவூட்டியது. அங்கு பிரகாரத்துக்குள் ஒரு சுரங்கப் பாதை போல் உள்ளது. பாதையின் நுழைவுப் பகுதி மரணவாயில் என்று அழைக்கப்படுகிறது. தலையை முதலில் நுழைத்து குப்புறப் படுத்துதான் உள்ளே நுழைய முடியும். இப்படி நுழைந்தவுடனே ஒரு பெரிய இறக்கம் (படிகளெதுவும் கிடையாது.) பின்னர் எழுந்து நடக்குமளவு உயரம் இருக்கிறது. வெளியில் வரும் வழி ஜனன வாயிலென்று சொல்லப்படுகிறது. அது மிகவும் சிறியது. மீண்டும் குப்புறப்படுத்து ஒரு உன்னல் உன்னித்தான் (குழந்தை கர்ப்பவாயிலிலிருந்து வெளிவருவது போல்) வெளியே வர முடிகிறது. அதனுள் சென்று வந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. இந்தக் கோயில் பற்றிய ஒரு கதையும் உண்டு. பூசல நாயனார் அவர்கள் மனதிற்குள் கற்பனையாக சிவனுக்கு ஒரு ஆலயம் கட்டி அதற்கு கும்பாபிஷேகத்திற்கு நாளும் குறித்தாராம். கைலாச நாதர் கோவில் கட்டிய மன்னனும் அதே நாளில் இந்தக் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் குறித்திருந்தாராம். சிவன் மன்னன் கனவில் தோன்றி தான் பூசல நாயனார் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதால் மன்னனின் கோவில் கும்பாபிஷேகத்தைத் தள்ளி வைக்கச் சொன்னாராம். இந்தக் கோவிலின் அழகைப் பார்த்ததும் நாயனாரின் பக்தியை வியக்காமல் இருக்க முடியவில்லை.
12 comments:
நங்கநல்லூர் கோவில் தனியார் நிர்வகிப்பதால் சுத்தமாகவே வைத்திருக்கிறார்கள். ஆனாலும் நம் மக்கள் அங்கும் பிரசாதம் சாப்பிட்டு விட்டு தொன்னையைக் கண்ட இடத்தில் போட்டு விடுகிறார்கள். அருகில் காபி போலவே சூப்பர் சிப்ஸ் கடையும்!
சுத்தம் சோறு போடும், சோறு சாப்பிட்டுக் குப்பை போடுகிறார்கள்...ரசித்தேன்.
காஞ்சி கைலாசநாதர் கோவில் விவரம் சுவாரஸ்யம்.
நன்றி ஸ்ரீராம். அடுத்த முறை ஆஞ்சநேயரைப் பார்க்க வரும்போது சிப்ஸ் கடையிலும் நுழைய வேண்டியதுதான்.
திண்ணைப் பேச்சு தகவல்கள் சுவாரசியமாக இருக்கிறது..
நங்கநல்லூரில் ஆரம்பித்து வேளச்சேரி, கோவிந்தபுரம், காஞ்சிபுரம் என நல்ல ரவுண்ட் அப்.....
நன்றி பத்மநாபன் ஜி
அருமையான பதிவு.
நிறைய விபரங்கள்.
எனது முகநூல் பக்கத்தில் இந்த பதிவை பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
எங்கள் ப்ளாக்-ல் வெட்டி அரட்டை, இங்க திண்ணை பேச்சு! இப்படி எல்லாம் தலைப்பை படிக்கும்போது திண்ணைல உக்காந்து வேடிக்கை பாத்துண்டே அரட்டை அடிக்கணும்போல ரொம்ப ஆசையா இருக்கு. :)
பக்தி உலா போயிட்டு வந்து அதை அழகா எழுதி இருக்கீங்க. நல்லா இருக்கு. தனி மனித ஒழுக்கம் தானா வராத வரைக்கும் எங்கேயும், எதுலேயும் ஒழுங்கு இருக்காது.
பூசல நாயனார் கதை மிகவும் சுவாரசியம். படிக்கும் காலத்தில் அப்பாவுடன் இந்த கோவில் போயிருக்கிறேன். அவ்வளவாக நினைவில் இல்லை. இப்பொழுது நிச்சயம் இந்த கோவிலை பார்த்து விட வேண்டும் என்று தோன்றி விட்டது. தஞ்சாவூர்ல, எந்த கோவில்ன்னு இப்போ ஞாபகம் இல்லை, சின்ன வயசுல அம்மாவோட போனது, கோவில் பிரகாரத்துல ஒரு சிங்கம் வாயை பிளந்துண்டு இருக்கும். அதுல படிக்கட்டு இருக்கும். இறங்கி போனா அங்க ஒரு சுவாமி சன்னதி இருக்கும். ரொம்ப சுவாரசியத்தோட இதுல பல தடவ இறங்கி இறங்கி போயிட்டு வந்தது மட்டும் ஞாபகம் இருக்கு.
// கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் ரத, கஜ, துரக பதாதிகளுடன் பாண்டுரங்கனையும் ருக்குமணியையும் ஊர்வலமாகக் கொண்டு வந்தது மறக்க முடியாத நிகழ்ச்சி.// பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. நீங்கள் இதை படம் எடுத்திருந்தால் பதிவில் போடுங்கள். பார்க்கலாம்!
நன்றி மீனாக்ஷி. நான் பாண்டுரங்கரின் ரத கஜ துரக பதாதி ஊர்வலத்தை ஃபோட்டோ மற்றும் விடியோ எடுத்திருக்கிறேன். விரைவில் பதிவிடுகிறேன். அந்த சிங்கக் கோவில் பற்றி தகவல் கிடைத்தால் சொல்லுங்கள். அடுத்த முறை இந்தியா வரும் போது போகவேண்டும் என்று ஆவலாக இருக்கு.
நன்றி ரத்தினவேல்ஜி தங்கள் வருகைக்கும், முகப் புத்தகத்தில் இந்தப் பதிவைப் பகிர்ந்ததற்கும்.
//உலகம் முழுதும் பெரும்பான்மை மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில்
அடடே, அப்படியா?
சுவாரசியமான விஷயம் சொல்லப்போறீங்கனு பாத்தா கோவில் குளம்னு தாவிட்டீங்களே? சுத்தமா இருக்கணும்னா கோவில்ல விபூதி குங்குமம் லட்டு பிரசாதம் தராம இருந்தாலே போதுமே?
கீதா மேடம் .. ஆலய ரவுண்ட் அப் நன்றாக இருக்கிறது. குப்பை போடுவது நமது கலாச்சாரத்தின் வெளிப்பாடு போல் ஆகி விட்டது. அப்பாதுரை பிரசாதமே தராதேங்குறாரே! பக்தகோடிகளுக்கு நாலு வாலண்டியர் மாமாமாமிகள், 'ஆ.. அம்ம்' என்று பிரசாதத்தை ஊட்டிவிட்டால் இந்த குப்பை பிரச்னை இருக்காதே!
கருத்துரைக்கு நன்றி அப்பாதுரை & மோகன்ஜி.
சுத்தம் சோறு போடும், சோறு சாப்பிட்டுக் குப்பை போடுகிறார்கள்...ரசித்தேன்.
Post a Comment