மங்காத்தா - ஒரு சீட்டாட்டத்தின் விறுவிறுப்புடனான படம். கிரிக்கெட்டில் பெட்டிங்க் மூலம் வரும் 500 கோடி பணத்தைக் கடத்த நான்கு பேர் முனைய, ஐந்தாவதாக அஜீத் வந்து அவர்கள் அனைவரையும் ஓவர் டேக் செய்வதுதான் கதை.
அஜீத் அவரது ரோலை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். Anti- hero ரோலுக்கேற்ப முக பாவனைகளும் gestures எல்லாம் கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார். சுருக்கமாக, தனது ஐம்பதாவது படத்தில் அஜீத் அவரது ரசிகர்களை ஏமாற்றவில்லை.
படத்தின் பிண்ணனி இசை மிகவும் அருமை. காட்சியின் விறுவிறுப்பை இசையால் அதிகமாக்கியிருக்கிறார் யுவன். மற்றபடி அர்ஜுன், த்ரிஷா, லஷ்மி ராய் எல்லாரும் இருக்கிறார்கள் அவ்வளவுதான். ப்ரேம் காமெடிக்குக் கொஞ்சம் உதவியிருந்தாலும் பணம் கொள்ளையில் அவர் சேர்வதற்கு காரணம் அவ்வளவு அழுத்தமாக இல்லை. அதுவும் ஒரு சாதாரணப் பூட்டை (ஒரு டிஜிட்டல் பூட்டாவது பயன்படுத்தியிருக்கலாம்) எப்படியோ அலார்மோடு இணைப்பதெல்லாம் காதில் பெரிய பூ.
மொத்தத்தில் பொழுதுபோக்கும் மசாலா படம். 'உள்ளே' வந்த ரசிகர்கள் 'வெளியே' போகா வண்ணம் அஜீத்தும் இசை அமைப்பாளரும் மங்காத்தாவைத தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.
12 comments:
அதுக்குள்ள பாத்துடீங்களா! கச்சிதமான விமர்சனத்துக்கு நன்றி. பசங்க இந்த படத்தை கட்டாயம் பாக்கணும்னு சொல்றாங்க. இந்த வார கடைசில போகலாம்னு இருக்கோம்.
என்ன, சினிமா விமர்சனமெல்லாம் கலக்கறீங்க...அதுவும் கலைத்துப் போட்ட வேகத்துலேயே சுடச்சுட சுருக்க விமர்சனம்!
என்ன சொன்னாலும் இந்த மாதிரி படங்களெல்லாம் வீ டோண்ட் சீ..
மீனாக்ஷி, உங்கள் பசங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
ஸ்ரீராம், அப்பப்ப இதெல்லாம் ட்ரை பண்ணவேண்டியதுதான்.
துரை, காதலிக்க நேரமில்லை பாணியில் ' we dont see tamil movies' என்று சொல்கிறீர்களா? உங்களுக்குப் பிடிக்குமா என்று தெரியவில்லை.
excellent comment
என்ன கீதா அப்ப படம் பாத்துடலாமாப்பா?
விமர்சனம் சூப்பரா போட்டிருக்கீங்களேப்பா?
என் மெயில் ஐடி ஏன் ஓப்பன் ஆகலைன்னு தெரியலப்பா..
manjusamdheeraj@gmail.com
குவைத்தில் ரிலீஸ் செய்துவிட்டார்களா ....சுறுசுறுப்பாக விமர்சனம் போட்டுவிட்டிர்கள் .... அஜித் படம் விஜய் அட்டுழியத்துக்கு ஆறுதல் .......
வலைச்சரத்தில் ‘ அனுபவ முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.com/
சரியாகச் சொன்னீர்கள் பத்மநாபன் சார். எனக்கென்னவோ இந்தப் பத்திரிகைக்காரர்களெல்லாம் அஜீத்துக்கு எதிராக வேலைப் பார்த்தார்களோ என்று ஒரு சந்தேகம்.
வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி மனோ மேடம்.
வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி மாய உலகம்.
கீதா மேடம்.. விமரிசனம்லாம் நல்லாதான் பண்ணுறீங்க!
மாங்காத்தா விளம்பரம் பார்த்த என் மனைவி சொன்னது.." இங்க பாருங்க அஜீத் உங்கள மாதிரியே இருக்காரு.." ஹி..ஹி....
மோகன்ஜி, உங்களை அஜீத் மாதிரின்னாங்களா இல்ல மங்காத்தா அஜீத் மதிரின்னாங்களா!!! ஏன்னா மங்காத்தாவில் அஜீத் ரெண்டு நாள் தாடியோடவே படம் முழுதும் வராரு அதான்.
//அப்பாதுரை said... என்ன சொன்னாலும் இந்த மாதிரி படங்களெல்லாம் வீ டோண்ட் சீ..//
காதிலிக்க நேரமில்லை மாதிரியா ?
Post a Comment