Monday 24 October 2011

HAPPY DIWALI

எல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.  நன்றாக வெடி வெடித்து, இனிப்பு காரம் சாப்பிட்டு, டிவி பார்த்து, ஏழாம் அறிவு போன்ற தீபாவளி ரிலீஸ் படங்கள் பார்த்து சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாடுங்கள்.

உங்களுக்காக தீபாவளியை முன்னிட்டு ஒரு மீள்பதிவு. 

இந்த வருடம் தீபாவளிக்கு ஏதாவது specielஆகச் செய்து அசத்தலாம் என்று net-ல் தேடிப்பார்த்தேன்.


அல்வா? நமக்குக் கொடுக்கத்தானே வரும், கிண்ட வராதே என்று reject செய்தேன். குலோப்ஜாமூன்? குடும்ப பாட்டு போல் எங்கள் குடும்ப பஷணம் அது. என் சகோதர, சகோதரி குடும்பங்களில் தீபாவளி தோறும் செய்யப்படும் ஒன்று. அதனால் அதையும் reject செய்தேன். புதிதாக ஏதாவது என்று மேலும் தேடினேன். கண்ணில் பட்டது 'மோஹந்தால்'. செய்முறையைப் பார்த்தேன். கடலை மாவை வறுத்து, condensed milk மற்றும் நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருந்து, கடைசியில் நெய் தடவிய plate-ல் கொட்டி துண்டம் போடவும் என்று இருந்தது. ஆஹா, easy யாக இருக்கே , இதையே செய்வோம் என்று முடிவு செய்தேன். (இவ்வளவு easy யா, இதில் ஏதோ வில்லங்கம் இருக்குமோ என்று யோசித்திருக்க வேண்டாமோ?). கடலை மாவையும் மற்ற பொருட்களையும் சேர்த்து கிளறினேன், கிளறினேன், கிளறிக்கொண்டே இருந்தேன். It looked like a never ending process. அது ஒரு மாதிரி கோந்து போலவே இருந்தது. ஒரு level-க்குப் பின்னர், இதுதான் சரியான பதம் என்று நானே மனசைத் தேற்றிக்கொண்டு, plate-ல் கொட்டினேன். அதைத் துண்டங்களாக்குவது அதைவிட பெரிய கஷ்டமான வேலையாக இருந்தது. கத்தியால் லேசாகக் கோடு போட்டால், கத்தியை எடுத்தவுடனே ஒன்றாகச் சேர்ந்தது. கொஞ்சம் அழுத்தி வெட்டினால், மொத்தமாகக் கத்தியுடனே ஒட்டிக்கொண்டு வந்தது (இது கோந்துதான், சந்தேகமே இல்லை!!!!). சரி, ஆறினால் சரியாகி விடும் என்று ஒன்று, இரண்டு மணி நேரம் wait பண்ணியும் சரியாகததால், overnight இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். காலையில் எல்லோருக்கும் முன்னால் எழுந்து மெதுவாகப் பூனை போல் வந்து திறந்து பார்த்தேன். ம் ஹூம், ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒரு வேளை, 'மோஹன் தான்' வந்து அதைத் தட்டிலிருந்து எடுக்க வேண்டுமோ?!!. எனக்கு அறிந்தவர், தெரிந்தவர்களில் மோஹன் என்று யாரும் இல்லாததால் அதைச் சத்தம் போடாமல் dustbinனில் கொட்டினேன். கடையில் போய் காஜூ கட்லி, ஜாங்கிரி என்று வாங்கினேன்.


என் அம்மா தீபாவளியன்று காலையில் போன் செய்தார்.

அம்மா: "தீபாவளிக்கு என்ன பண்ணினே?"

நான்: "காஜூ கட்லி, ஜாங்கிரியெல்லாம்....."

அம்மா: (சந்தோஷமாக)"very good"

நான்: "பண்ணியிருந்ததை வாங்கி வந்துட்டேன்!"

அம்மா: (சுரத்தில்லாமல்)"ஓஹோ".

 
கடைசியில் என் அக்காவிடம் மட்டும், மோஹந்தால் மேட்டரைச் சொன்னேன். அவள் கூலாக, குலோப் ஜாமூன் பண்ணியிருக்க வேண்டியதுதானே என்றாள்!!!!
 



8 comments:

ஸ்ரீராம். said...

வாய் விட்டுச் சிரித்து விட்டேன். சில பேர் வீட்டில் மைசூர் பாக்கே டம்ளரில் ஊற்றித்தான் தருவார்கள் தெரியுமோ...! எல்லாம் வாச்சிக்கறதுதான் அமைஞ்சிக்கிறதுதான்!!

தீபாவளி நல்வாழ்த்துகள்.

மாய உலகம் said...

தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

meenakshi said...

மீண்டும் ரசித்து படித்தேன்.
உங்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்!

geetha santhanam said...

நன்றி மாய உலகம், ஸ்ரீராம் & மீனாக்ஷி. ஸ்ரீராம், மைசூர் பாகால் அடிக்கலாம் என்று கேலி செய்வார்கள் கேட்டிருக்கிறேன், டம்ளரில் மைசூர்பாகா அதுசரி.

சாய்ராம் கோபாலன் said...

கீது

"நினைவில் நின்றவள்" படத்தில் நாகேஷ் கே.ஆர்.விஜயாவுக்கு சமையல் புத்தகத்தை இந்த பக்கம், அந்த பக்கம் என்று வேவ்வேறு உணவு வகைகளின் செய்முறைகளுக்கு தேவையானதை போட செய்து அது கொந்து போல் வந்து விடும் ! அதை போல் உள்ளதே உன்னுடையது. சந்தானம் உதவியோ !

அந்த காட்சி என் பெரிய மற்றும் சிறிய பிள்ளைக்கு மிகவும் பிடித்த காட்சி. நாகேஷ் அல்டிமேட். முடிந்தால் நெட்டில் சுட்டு பாரு. மனம் விட்டு சிரிப்பாய்

geetha santhanam said...

அந்தப் படத்தில் நிறைய நகைச்சுவைக் காட்சிகள் வருமே, நல்ல படம்.

சிவகுமாரன் said...

சிரித்தேன் மனம் விட்டு

geetha santhanam said...

நன்றி சிவகுமாரன் சார்