ஹிந்து பேப்பரில் படித்த இரு பெண்மணிகளைப் பற்றிய செய்திகள் என்னை ரொம்பவே கவர்ந்தது. என் மகளிடம் கூட அவர்களைப் பற்றிய செய்தியைச் சொல்லி இவர்களைப் போல் தைரியம், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றேன்.
முதலாமவர் சமீபத்தில் மறைந்த நடிகை எஸ்.என்.லக்ஷ்மி அவர்கள். ஹிண்டுவில் அவரைப் பற்றிப் படித்ததும் பிரமிப்பு அடங்கவில்லை.
எம்ஜியாரின் பாக்தாத் திருடன்படத்தில் இவரே சிறுத்தையோடு சண்டை போட்டாராம். அசந்து போன எம்ஜியார் 'இந்தப் படத்தில் இவங்கதான் உண்மையான ஹீரோ' என்று பாராட்டினாராம். அந்த காலத்திலேயே தானே காரோட்டிக்கொண்டுதான் படப்பிடிப்புக்கு வருவாராம். இந்த போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தக் காலத்திலும் தானே காரோட்டுவாராம். சாய்சங்க பஜனைகள் போது பக்தர்களின் காலணியைவாங்கி அடுக்கும் சேவையும் செய்வாராம். தன்னுடன் பணிபுரிந்த பலரின் குழந்தைகளுக்குப் படிப்புச் செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம். சுயசம்பாத்தியத்தில் வாழ்ந்தது, தைரியம் மிகுந்தவராக இருந்தது, சமூகத்திற்குத் தன்னால் முடிந்த தொண்டு செய்தது என்று நிறைவு தரும் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.
அடுத்தவர் Dr.T.S.கனகா அவர்கள்.
நியூரோ சர்ஜனாக வேண்டி போராட்டங்களைச் சந்தித்தாலும் மனம் தளராமல் போராடி வெற்றி பெற்றிருக்கிறார். பெண் என்ற காரணத்தால் அவருக்கு நியூரோ சர்ஜன் படிப்புக்கு வாய்ப்பு கிடைத்ததே பெரும்பாடானதாம். அவரை ஸர்ஜரி பக்கமே வரவிடாமல் பல ஆண் மருத்துவர்கள் தடுக்க, ஒரு நாள் ஒரு துணை மருத்துவர் வர இயலாத நிலையில்தான் முதன் முதலாக சர்ஜரி அறைக்கு அசிஸ்டெண்டாகப் போகும் வாய்ப்பு கிடைத்ததாம். விடாது போராடி முன்னேறியது மட்டுமில்லாமல் brain stimulation பற்றிப் பல ஆராய்ச்சி கட்டுரைகளும் எழுதியுள்ளாராம். இவையெல்லாம்விட வியப்படைய வைத்தது, 79 வயதானபோதும் தனது துறையில் முன்னேற்றங்கள் குறித்துப் பேச துருக்கி நாட்டுக்குப் போகப் போகிறாராம். அவரின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு சல்யூட்!http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2961929.ece
6 comments:
impressive.
மகளிர் தினத்துக்கு இரு சாதனைப் பெண்களின் பதிவு...பொருத்தமான பதிவு.
சைட் பாரில் வரும் ப்ளாக்ஸ் லிஸ்ட்டில் சூடா மணி சேர்க்கவில்லையா?
impressive
வருகைக்கு நன்றி துரை, ஸ்ரீராம் & அனானி. ஸ்ரீராம் இப்ப போட்டுவிடுகிறேன்.
மகளிரின் அன்பளிப்பு தான் இவ்வுலகம்..
இருவரின் சாதனைகளின் சிறப்பு பற்றி நல்ல பகிர்வு..
லட்சுமி அவர்கள் திரைப்படத்திலும் தொலைக்காட்சியிலும் கடைசிவரை நடித்துக் கொண்டிருந்தார். அவரது உள்ளார்ந்த ஆற்றல் வியக்க வைக்கிறது..
வருகைக்கு நன்றி பத்பநாபன் சார்.புதுமைப் பெண்ணுக்குச் சரியான எடுத்துக்காட்டாக இவர்கள் இருப்பதாக நினைக்கிறேன்.
Post a Comment