இரண்டு நாட்களுக்கு முன் ஹிந்து news paper-ல் ஒரு news-ஐப் படித்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். Quaterly exam நன்றாக எழுதாததால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டாள் என்பதுதான் அந்த செய்தி. அடுத்த நாள் இன்னொரு செய்தி. ஒரு சிறுவன் தன் பெற்றோர் டி.வி. பார்க்க விடாததாலும், remote-ஐ கவனக்குறைவால் உடைத்து பயந்ததாலும் வீட்டை விட்டே ஒடிய செய்தி. ( actually i am considering not to read the news paper in detail to avoid getting into this kind of news. மேலோட்டமாக புரட்டுவதே மேல்.!!!)
நாங்கள் 8-வதுபடிக்கும்வரை Quaterly exam எல்லாம் ஒரு exam-ஆகவே consider பண்ண மாட்டோம். வழக்கம் போல் விளையாடிவிட்டு, ஏதோ கொஞ்சம் படித்துவிட்டு exam எழுதுவோம். 70 -80% வாங்குவோம். எங்கள் அம்மாவும் ஒன்றும் திட்ட மாட்டார்கள். 10, 12 வகுப்புகளில் தானாகவே பொறுப்பு வந்து படித்தோம். (என் அண்ணன் XII exam போது கூட hockey விளையாடாமல் இருந்தது இல்லை). இதனால் நாங்கள் யாரும் குறைந்து போகவில்லை. எல்லோரும் M.B.A., C.A., B.E., Ph.D., என்று பட்டப்படிப்பு முடித்திருக்கிறோம். என் அம்மாவின் 'take it easy' policy எங்களைப் பொறுப்பு மிக்கவர்களாகவே ஆக்கியது.
ஆனால் இன்று இந்த parents கொடுக்கும் தொல்லை தாங்க முடியவில்லை. தங்கள் குழந்தைகளை 4- 5 வயதிலேயே கராத்தே, பாட்டு, டான்ஸ் என்று classes-ல் சேர்ப்பது மட்டுமன்றி எல்லாவற்றிலும், முதன்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குழந்தைப் பருவத்தில் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு நேரமே இல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியைத் தொலைக்கிறார்கள். school- ல் படிப்பது போதாதென்று கட்டாயமாக tution அனுப்புகிறார்கள். நாங்கள் படிக்கும்போது tution போவது கௌரவக் குறைவாக இருந்தது. இப்பொழுதோ 99% வாங்குபவர்கள் கூட tution போகிறார்கள். இத்தனைக் கஷ்டப்பட்டு படித்து 98% வாங்கினாலும் கூட பாராட்டாது, விட்ட அந்த 2% -க்காக குழந்தைகளைத் திட்டி தீர்க்கிறார்கள் பெற்றவர்கள். இதனால் அவர்களின் மன அமைதி (peace)யும் தொலைகிறது. பாக்கியம் ராமசாமி அவர்கள் '+2 தியாகிகள்' என்ற சிறுகதையில் due to the anxiety of the parents what kind of torture the students undergo என்பதை மிக அழகாக நகைச்சுவையுடன் எழுதியிருப்பார்.
என் அம்மாவின் குழந்தை பருவத்தில் மிக பெரிய கூட்டுக் குடும்பமாக (பெரியம்மா, பெரியப்பா, cousins) இருந்ததால் அவர்களுக்கு விளையாட, படிக்க வசதியாக இருந்தது மட்டுமல்லாது, விட்டுக்கொடுத்தல், sharing,obedience என்பதெல்லாம் இயல்பாகவே வந்தது. எங்கள் குழந்தை பருவத்தில் atleast விடுமுறையின்போது நாங்கள் cousins எல்லோரும் ஒன்றாய் இருந்ததால் மேற்சொன்ன விஷயங்களைக் கொஞ்சமாவது கற்றுக் கொண்டோம். இன்றைய தலைமுறையிலோ எல்லா குழந்தைகளும் அவர்கள் வீட்டில் ராஜா, ராணி தான். பக்கத்து சமஸ்தானத்தை எட்டிக் கூட பார்ப்பதில்லை. இந்த நிலையில் அவர்களுக்கு எப்படி விட்டுக்கொடுத்தல் போன்ற மேற்சொன்ன விஷயங்கள் வரும்? (அதுவும் ஓரே ஒரு குழந்தை என்றால் கேட்கவே வேண்டாம்!!!).
உறவுகளைச் சுருக்கிக் கொண்டதாலும், எதிர்பார்ப்புகளைப் பெருக்கிக் கொண்டதாலும், நமக்கு அந்நியமாக இருந்த stress, anxiety போன்ற வார்த்தைகளை நாம்அன்றாடம் கேட்க, உணர முடிகிறது. இதன் விளைவுகள்தான் முதலில் படித்த செய்திகள்.
அமெரிக்காவில் பள்ளிகளில் கூட துப்பாக்கி சூடு நடைபெறுவதைப் படிக்கும்போது முன்பெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். இப்பொழுது இந்தியாவில் நடப்பதைப் படிக்கும் போது, நாம் அமெரிக்காவை எட்டிப் பிடிக்கும் (இந்த விஷயத்தில்) நாள் தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.
11 comments:
போட்டி மனப்பான்மையும் சாதிக்க வேண்டிய அவசியமும் ஒவ்வொரு வருடமும் வளர்ந்து கொண்டே வருகிறது. அன்றைய தொண்ணூறு சதவிகிதம் இன்றைக்கு நுழைவுச்சீட்டுக்குக் கூட உத்தரவாதமாக அமையாது. 'நிரூபிக்க வேண்டிய அவசியம்' பன்மடங்கு அதிகரித்திருக்கிற இன்றைய நிலையில் பரந்த வளர்ச்சி கொண்ட பிள்ளைகள் வாழ்வில அதிகம் சாதிக்க முடியும் என்ற அங்கீகாரம் உலக அளவில் பரவிவருகிறது. அதனால் பிள்ளைகளை நற்திசையில் வற்புறுத்தி அழைத்துச் செல்வதில் தவறில்லை. படிப்பதையும் பல்லறிவை வளர்த்துக் கொள்வதையும் தவிர பிள்ளைகளுக்கு வேறு என்ன வேலை? என்றாலும் உங்கள் சிந்தனையின் இலக்கு சரியாக இருக்கிறது. இன்றைய வளரும் சமுதாயத்தின் பிரச்சினைகளுக்குக் காரணம் நாம் தான். (நாம் வளரும் பொழுது நம்முடைய பிரச்சினைகளுக்குக் காரணமாக இருந்த நம்முடைய பெற்றோர்களைப் போல). பாட்டு, கராதே என்று பிள்ளைகளை பல இடங்களில் பிள்ளைகளைச் சேர்ப்பதும் படிக்கச்சொல்லி வற்புறுத்துவதும் பிள்ளைகளின் பரந்த வளர்ச்சிக்காக என்று எண்ணி அதற்கேற்ப நடக்கும் பொழுது, பிள்ளைகளும் இத்தகைய வாய்ப்புகளினால் பயனடைகிறார்கள். அதுவே பெற்றோர்களின் பிரதிநிதித்துவ வெற்றிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மாறும் பொழுது பிள்ளைகளுக்கும் பயனில்லை, பெற்றோருக்கும் எரிச்சல்; முடிவில் பிள்ளைகளுக்குப் பிரச்சினையாகி விடுகிறது.
நன்றி ஹேமா. நீங்கள் இந்த பதிவைப் படித்ததே சந்தோஷம். மூன்றாம் சுழியில் உங்கள் பதிவுகளை விரும்பி படித்தேன். வாழ்த்துக்கள்.
"அதுவே பெற்றோர்களின் பிரதிநிதித்துவ வெற்றிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மாறும் பொழுது பிள்ளைகளுக்கும் பயனில்லை, பெற்றோருக்கும் எரிச்சல்; முடிவில் பிள்ளைகளுக்குப் பிரச்சினையாகி விடுகிறது" என்ற உங்கள் கருத்தை நான் 100% ஆதரிக்கிறேன். geetha
நாம் ஆசைப்பட்டதை நம்ம பிள்ளைகளுக்குக் கொடுக்குறது ஒவ்வொரு தலைமுறையிலும் நடக்கும் செயல் தானே?
தனக்குச் சிறு வயதில் டான்ஸ் கற்றுக்கொள்ள ஆசையிருந்தும் வசதியில்லாததால், நொண்டிப் பிள்ளைக்கு டான்ஸ் வற்புறுத்திச் சொல்லிக்கொடுக்கும் பெற்றோர் காலம் இது. என்னையும் சேர்த்துத் தான். 'don't live your unremitted silly past through me, dad' என்று அன்பாகச் சொல்வாள் என்னுடைய பெண்.
வாய்ப்பு கொடுப்பதில் தப்பே இல்லை. வாய்ப்பு அரிது என்று புரிந்து கொள்ளும் பக்குவத்தையும் குழந்தைக்கு எடுத்துச் சொல்ல முடிந்தால் no pressure on either side. இன்றைய பத்து வயது பிள்ளைக்கு மேன்டரின் மொழி கற்றுக் கொள்வதில் ஆர்வம் இருக்காது தான். இருபது வருடங்களில் பொருளாதாரக் கண்ணோட்டதில் மேன்டரின் மொழியின் உலக ஆதிக்கத்தை மனதில் கொண்டால், குழந்தையை வற்புறுத்துவதில் தவறே இல்லை. பிள்ளைகளால் புரிந்து கொள்ள முடியாத லாஜிக். அதே சமயம் என் பாட்டி வீணை வாசித்தார், அதனால் நீயும் வாசி, குடும்பமே வீணைக்குடும்பம் என்று உதவாக்கரை லாஜிக் சொல்லி வற்புறுத்தினால் பெற்றோரைத் தான் திட்டும் பிள்ளை.
//உறவுகளைச் சுருக்கிக் கொண்டதாலும், எதிர்பார்ப்புகளைப் பெருக்கிக் கொண்டதாலும்//
well said.
அன்புள்ள கீது
குறைந்த மார்க் வாங்கின குழந்தைய திட்டாம வித்யாசமா ட்ரீட் பண்ணின பாரேன்ட் உனக்கு தெரிந்திருக்குமே !
( உன் கூட படிக்கிறவா எல்லாரையும் நிறைய மார்க்கு வாங்க சொல்லு .அப்பத்தான்
உன் அம்மா போன உடனேயே ரிபோர்ட் கார்ட் வாங்கிண்டு வந்துடலாம் ! )
அன்புள்ள லதா
துரை, ரிஷா சொல்வது முற்றிலும் சரி. நாம் ஆசைப்பட்ட வாழ்க்கையை அவர்கள் மூலம் வாழ நினைக்கக் கூடாது.
ஆனாலும் மாண்டரின் படிப்பதா? இது கொஞ்சம் ஓவரா தெரியல?----கீது
லதா, அது யாரு வித்தியாசமானவர்? தெரியலையே. --கீது
Vidya's dad!
Endha vidyaavaa? schoolukku poganumnaale fever varume andha vidya!
aanaa vidyavoda amma ellathukkum sethu vachhu pinnuvanga illiya?
வித்யாவோட அப்பாவா?!!. இந்த விஷயத்தில் நாம் எல்லோருமே அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.---கீது
Post a Comment