சென்ற வாரம் wii வாங்கினோம். வாங்கியதிலிருந்தே ஒரே விளையாட்டுதான். wii ஒரு வகையான video game தான். இதில் நாமும் physical-ஆக involve ஆகி விளையாடலாம். அதன் செயல்முறையை simple-ஆகத் தமிழில் எழுத முடியாமல் தோற்றதால் wikipedia-விலிருந்து copy செய்திருக்கிறேன்.
The game is a collection of five sports simulations, designed to demonstrate the motion-sensing capabilities of the Wii Remote to new players. The five sports included are tennis, baseball, bowling, golf, and boxing. Players use the Wii Remote to mimic actions performed in real life sports, such as swinging a tennis racket.
Tennis விளையாடினால் என்னவோ wimbledon tournament-ல் விளயாடுவது போல் பெருமிதம் வருகிறது.
தனியாக exercise செய்வது பல நேரங்களில் monotonous ஆக இருப்பதால் சலித்து போகும். wii-ல் எப்பொழுதும் நம்மோடு நான்கைந்து பேர் screen-ல் தோன்றுவதால் ஜனரஞ்சகமாக இருக்கின்றது. 10 நிமிட jogging-ல் நாம் மலை, பீச், bridge எல்லாம் cross செய்வது போன்ற simulations, ஜாகிங் செய்வதை enjoyable exercise ஆக ஆக்குகிறது. நம்மை ஒருவர் முந்த முனையும்போது, 'விடக்கூடாது' என்று வேகமாக ஓட motivate செய்கிறது . யோகா, aerobics சொல்லித் தரவும் ஒரு ஆசிரியர் இருக்கிறார். சில கஷ்டமான யோகா செய்யும்போது யாரும் பார்க்கலையே என்று நைசாக காலை கீழே வைத்தால் "ஏய்! பார்த்துண்டே இருக்கேன்" என்று எச்சரிக்கிறார்.
கஷ்டப்பட்டு exercise பண்ணி முடித்தால் கடைசியில் 'நீ இன்னைக்கு இவ்வளவு calories குறைத்திருக்கிறாய்' என்று கணக்கு போட்டு சொல்லிவிடுவது மட்டுமில்லாமல், 'ரொம்ப சந்தோஷப் படாதே. அது 4 strawberry அல்லது அரை டம்ளர் பால் குடிப்பதற்கு (மட்டுமே) ஈடானது' என்றும் சொல்லி மனசை உடைக்கும்.
நிறைய மனிதர்களோடு விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற திருப்தியை தருவதாலும், அவ்வப்பொழுது பாராட்டுக்களை வாரி வழங்குவதாலும் தனிமையில் வாழும் பல senior citizens -க்கு இது ஒரு சிறந்த companion என்பதில் ஐயமில்லை.
2 comments:
//பல senior citizens -க்கு இது ஒரு சிறந்த companion என்பதில் ஐயமில்லை//
senior citizens? senior citizens may find wii weakening.
junior citizens like us could use wii to keep ourselves fit - mind and body.
"junior citizens" ok. adhu enna "like us"??
Post a Comment