சொர்க லோகத்தில் lesuirely-யாக லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் பார்வதி மூவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
லக்ஷ்மி: இந்த வருஷ நவராத்திரி கொலுவுக்கு பூலோகத்தில் எல்லாரும் ரெடி ஆகிண்டு இருக்காளே!
சரஸ்வதி: ஆமாம். ---- வீட்டில் கருட சேவை செட் வாங்கியிருக்காங்க. ----- வீட்டில் ப்ரதோஷம் செட் வாங்கியிருக்காங்களாம்.
பார்வதி: ----வீட்டில் கோவில் கடை வீதி model எல்லாம் பண்ணியிருக்காங்களாம்.
லக்ஷ்மி: இப்ப பூலோகத்தில் பக்தி ஜாஸ்தி ஆகிவிட்டதில்லையா?!!
பார்வதி: ஆமாமாம். கொலுவிற்கு அவர்கள் ரெடியாகும் ஜோரைப் பார்த்தால் எனக்கே அங்கு போய் பார்க்க வேண்டும் போல் இருக்கு.
சரஸ்வதி: நல்ல ஐடியா. எனக்கும் பூலோகத்தை சுற்றி வந்து நாளாகி விட்டதால் போகணும் போல் இருக்கு.
மூவரும் நவராத்திரிக்கு பூலோக விஜயம் செய்யலாம் என்று முடிவு செய்தனர். இதை பிரம்மா, விஷ்ணு, சிவனிடம் சொல்ல சென்றனர்.
"ஒன்பது நாள் நீங்க இங்க இருக்க மாட்டீங்களா" என்று சந்தோஷத்தோடு விஷ்ணு கேட்டார். உடனே பிரம்மா, " ரொம்ப சந்தோஷப்படாதே. 2012-ல் உலகம் அழியப் போகுதாம். ஏதோ சினிமால்லாம் வந்திருக்காம். ஊரெல்லாம் அதே பேச்சாக இருக்கு. நாம எதுக்கும் தயாரா இருப்போம். நானே எமர்ஜென்சி மீட்டிங் கூட்டலாமென்று நினைத்தேன். இவங்களும் பூலோகம் போறாங்க. நாம அந்த நேரத்தில் இது பற்றி மீட்டிங் போடலாம். " என்றார். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் உலகம் அழியாமல் இருக்க என்ன செய்ய, அழிந்தால் என்ன செய்ய என்று விவாதிக்க முடிவு செய்தனர்.
தேவியர் மூவரும் பூலோகம் வந்தனர். நவராத்திரி ஒரு விடுமுறை நாளில் தொடங்கியதால் எல்லோர் வீட்டிலும் மெதுவாக பத்து பத்தரைக்கு எழுந்தனர். சோம்பலோடு காஃபியைக் குடித்துக்கொண்டே டி.வி பார்த்துக் கொண்டு இருந்தனர். ஒரு வீட்டிலாவது பூஜை, நிவேதனம் செய்வதற்கான அறிகுறியே இல்லை. சொர்க லோகத்திலிருந்து பூலோகம் வந்தபடியால் தேவியர் மூவருக்கும் பூலோகவாசிகளைப் போலவே பசிக்கத் தொடங்கியது. "ஆஹா, இந்த பூலோகவாசிகள் கொலு வைத்த ஆர்பாட்டத்தப் பார்த்து இங்கு வந்து மாட்டிக் கொண்டோமே. என்ன செய்ய" என்று லக்ஷ்மியும் சரஸ்வதியும் சோர்ந்து போனார்கள். "கொஞ்சம் பொருத்துக் கொள்ளுங்கள்" என்று அவர்களை சமாதானப் படுத்தி தனது சக்தியில் இருவருக்கும் கொஞ்சம் கொடுத்து சமாளித்தார் பார்வதி. நல்ல வேளை, யாரோ ஒரு நல்லவர் வீட்டில் மூன்று தேவியரையும் மானசீகமாக அழைத்து சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ததால் மூவருக்கும் பசி ஆறியது.
மாலை வேளையில் மூன்று தேவியரும் நகரில் எல்லோர் வீட்டிற்கும் விஜயம் செய்வது என்று முடிவு செய்தனர். முதலில் ஒரு வீட்டிற்குச் சென்று வேடிக்கைப் பார்த்தனர்.
வீட்டுத் தலைவரும், மகனும் டி.வியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பா மகனிடம் " நவராத்திரில இன்னைக்கு என்னடா ஸ்பெஷல்?" என்றார். " ---aunty வீட்டில் சுண்டல், தயிர் வடை, கேசரி. அப்புரம், ---- aunty வீட்டில் சேவை, பாதுஷா, டோக்ளா. பின்னர் ---aunty வீட்டில் சாப்பாடு. நேத்திக்கே அம்மா மெனுவெல்லாம் கேட்டாச்சு" என்றான். "சாப்பாட்டு ராமா" என்று சொல்லிக் கொண்டே வந்த அவரின் மகள் " அப்பா, நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு கலர் டிரஸ் போட்டுக்கணுமாம். இன்னைக்கு எல்லாரும் ஸ்கை ப்ளூ. நாளைக்கு கிரீன். மறு நாள் ஆரஞ் கலர். எனக்கு ஆரஞ் கலரில் டிரஸ் இல்லை. நாளைக்கு வாங்கிண்டு வந்துவிடு" என்றாள். "என்ன இங்க discussion?" என்று கேட்டாள் அவரின் மனைவி ஸ்கைப்ளூ புடவையை சரி செய்தபடியே. "நவராத்திரிக்கு இன்றைய ஸ்பெஷல் என்ன என்று கேட்டேன். உன் மகளும், மகனும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். " இன்னைக்கு நாலு வீட்டில் வெத்தல பாக்கு வாங்க போகணும். அப்புறம் ----- வீட்டில் பஜனை. கடைசியா ---- வீட்டில் கச்சேரி அண்டு டின்னர். சீக்கிரம் கிளம்புங்கள் டயமாச்சு" என்றார்.
"நான் 5 நிமிஷத்தில் ரெடியாகிவிடுவேன். நீ விளக்கு ஏத்துவதற்குள் நான் ரெடியாகி விடுவேன் " என்றார்.
" நம்மாத்தில் புதன் கிழமைதான் எல்லாரையும் கூப்பிட்டிருக்கேன். அன்னைக்கு ஏத்தினால் போதும். நீங்க கிளம்புங்கோ" என்றாள் மனைவி.
இந்த conversation-ஐக் கேட்டு முப்பெருந்தேவியருக்கும் மயக்கம் வராத குறைதான். அதிக எதிர்பார்ப்புடன் பூலோகம் வந்தோமே என்று நொந்து போனார்கள். இவர்களில் புத்திக்கு அதிபதியான் கலைவாணி மற்ற இருவரிடம், " இந்த ஒன்பது நாளில்தான் யாரும் நம்மை நினைக்க மாட்டார்கள் போலும். நாமும் நம் கணவர்களுக்கு உதவியாக disturbance இல்லாமல் 2012 crisis குறித்து தயாராக உதவுவோம்" என்றார்.
7 comments:
\\" நம்மாத்தில் புதன் கிழமைதான் எல்லாரையும் கூப்பிட்டிருக்கேன். அன்னைக்கு ஏத்தினால் போதும். //
:-))))))))))))))))))... நல்லாச் சொன்னீங்க..
ஹைய்யோ......சூப்பர்.
எங்காத்துலே விளக்கு மட்டும்தான் ஏத்துவோம். நைவேத்தியம் எல்லாம் மிஸ்ஸிங். ஆனால் பழங்கள் இருக்கு. அவாளை வந்து சாப்பிடச் சொல்லுங்கோ1
இருக்கறவாளுக்கே சோத்தைக் காணோம், இறங்கி வந்தவாளுக்கு என்ன வேண்டிக்கிடக்கு? மூணு அம்மனும் சாப்பாட்டுராமிகளா இருப்பா போலிருக்கே? பேஷ்! பேஷ்!
i`m your permanent reader now
புதிதாக வருகை தந்த முத்துலக்ஷ்மி, துளசி மற்றும் anonymous எல்லாருக்கும், "வருகைக்கு நன்றி".
துளசி, அடுத்த முறை லக்ஷ்மி, பார்வதி, சரஸ்வதி யாராவது வருவது தெரிந்தால் உங்கள் வீட்டைப் பரிந்துரை செய்கிறேன். குறைந்த பட்சம் பழமாவது கிடைக்குமே! healthy food அது இது என்று சமாளித்துக் கொள்ளலாம்.---கீதா
நன்றாக எழுதி இருக்கிறாய். எல்லாரும் கொண்டாடும் ஒரு நவராதிரிக்கே இவ்வளவு சீன் போட்டால் இன்னும் ஒரு நவராத்திரி வசந்த நவராத்திரி இருக்கு ஏப்ரல் மதத்தில் வரும் என்று சொன்னால் என்ன செய்வார்களோ தெரியவில்லை.
லதா
nice one geethu.
//வீட்டில் கருட சேவை செட் வாங்கியிருக்காங்க. ----- வீட்டில் ப்ரதோஷம் செட் வாங்கியிருக்காங்களாம்.
//
எங்க வீட்டுல cricket set வாங்கினாதான் அடுத்த வருஷம் கொலு allowed என்று ஆத்துகாரர் கறாரா condition போட்டுட்டார். அது சரி ..L.Sahasranamam chanting மறந்துட்டிங்களே.. உங்க ஏரியாவுல இன்னும் சூடு பிடிக்கலையா? அதுக்கு 9 நாளும் different sarees தான் கட்டணும் . repeat பண்ண கூடாது. போன வருஷம் கட்டின சாரீசும் avoid பண்ணறது better. புண்ணியம் சேர்க்க எவ்வளவு கஷ்டப்படறோம் பாருங்க..இது புரியாம husbands எல்லாம் "ஐயோ! உங்க நவராத்ரி தொல்லை தாங்கலன்னு அலுத்துக்கராங்களே...
Post a Comment