நல்ல நேரத்தில் திரு.சந்திரசேகர ராவ் அவர்கள் தெலுங்கானா பிரச்சினையைக் கையில் எடுத்து உண்ணாவிரதம் இருந்தார், இப்பொழுது பாதி MLA,MP-கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இந்த state-ஐ இரண்டாகப் பிரி, அந்த state-ஐ மூன்றாகப் பிரி என்று அவரவர்கள் மனம் போனபடி கேட்கிறார்கள். Mr. பாவம் பொதுஜனம்தான், ஊருக்குப் போக பஸ் இல்லாமல், வெளியே போக தைரியம் இல்லாமல் வீட்டிலேயே அடைபட்டு கிடக்கிறார். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமோ இல்லையோ, பொது மக்களுக்குத் திண்டாட்டம்தான்.
1. எங்கள் பகுதி முன்னேறவில்லை, அதனால் பிரித்துக் கொடுங்கள் என்பதற்கு பதில், இன்ன இன்ன விஷயங்கள் வேண்டும், இந்த project (IT யோ அல்லது வேறெதுவோ) இங்கே தொடங்கவேண்டும் என்று போராடிப் பெற்று முன்னற்றலாமே?
2. இத்தகைய sensitive-ஆன விஷயத்திற்கு CM-ஐக்கூடக் கலந்து ஆலோசிக்காமல் முடிவு செய்ய விழைந்த அரசியல் பெரிய தலைகளுக்கு,
'எண்ணித் துணிக கருமம்; துணிந்த பின் எண்ணுவம் என்ப திழுக்கு' என்ற
வள்ளுவர் வாக்கை யாராவது நினைவு படுத்துங்கள்.
3.Canada-வில் ஒரு province- ஆன quebec-கிலும், தனி நாடு கோரிக்கை அவ்வப்போது வலுப்பெறும். Canadian Government மக்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பின்னரே பிரிக்கமுடியாதென்று முடிவு செய்தது. அதுபோல் இங்கேயும் செய்யலாமே!. ( " அப்பாடா, election முடிஞ்சுதுடா என்று பெருமூச்சு விடுமுன் இடைதேர்தல் வருகிறது, இதுல இது வேறயா" என்று தேர்தல் கமிஷன் கடுப்பாவது தெரிகிறது. ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜமப்பா!!!)
1 comment:
பொதுமக்களிடம் வாக்கெடுத்து என்ன பயன்? பொதுமக்கள் தானே வாக்கெடுப்பவர்களை வாக்களித்து உட்கார வைத்தவர்கள்? கேனடாவைப் போல இந்தியாவில் வாக்கெடுத்திருந்தால் தெலுங்கானாவை பிரிக்கும்படி வாக்குகள் குவிந்திருக்கும். அஞ்சு விரலுக்கு அஞ்சு வோட்டு என்று எம்ஜிஆருக்கும் என்டிஆருக்கும் ஓட்டுப் போட்டவர்கள் தானே நம் மக்கள்?
இந்தியாவிலும் (மற்ற நாடுகளைப் போல) அரசாங்க பொருளாதாரக் கண்ணோட்ட முதலீடுகளுக்காகவும் ( read: vote bank) பொது நிர்வாக வசதிக்காவும் மாநிலங்களைப் பிரிப்பது வழக்கமாகியிருக்கிறது.
In the long-run, statehoods tend to benefit the public and the government. Economic self-reliance is a big benefit of statehood. Taxes flow back to the state coffers which in theory can be used for the benefit for state projects.
குறளை விளக்கிச் சொல்றதா? 'கருமம்' என்பதற்கு வேறு ஏதாவது சொல்லிக்கொடுத்துடுவாங்க.
Post a Comment