Thursday 29 April 2010

ஏட்டுச் சுரைக்காய்

               டெல்லி யூனிவெர்சிட்டியில் professor ஒருவர் 1968ம் வருடம் ஆராய்ச்சி செய்ய கனடாவிலிருந்து gamma ccell counter ஒன்றைத் தருவித்திருக்கிறார்.  அவர் ஆராய்ச்சியெல்லாம் முடித்து 1985-ம் ஆண்டு ஓய்வும் பெற்றுவிட்டார்.  பல வருடங்கள் பயனற்று இருந்த அதை ஏதோ பழைய சைக்கிளை காயலான் கடைக்குப் போடுவது போல் போட்டுவிட்டார்கள்.  அதைப் பிரித்து விற்கும் வேலையில் பாவம், படிக்காத பாமரர்கள் பலரும் cobalt-60 என்ற கதிரியக்கம் கொண்ட வேதிப் பொருளின் கதிர்வீச்சிற்குப் பலியாகி உள்ளனர்.
ஒரு scrap market-ல எப்படி radioactive material வந்தது என்று ஆய்வு செய்து இந்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மிகவும் அபாயகரமான கதிர்வீச்சுள்ள பொருளுடன் ஆராய்ச்சி செய்த அந்த professor ஓய்வு பெறுமுன் முறைப்படி அந்த instrument-ஐத் திருப்பி அனுப்பியிருக்கவேண்டும். அல்லது அதைப் பயன்படுத்தக் கூடிய BARC போன்ற நிறுவனங்களுக்குக் கொடுத்திருக்கலாம்.
Department-ல் தேவையற்ற கருவிகளை ஏலம் இடும்போது, மெத்தப் படித்த professors அதைப் பற்றி நன்கு படித்து அறிந்த பின்னரே அவற்றை dispose செய்யத் தீர்மானிக்கவேண்டும்.
மெத்தப் படித்தவர்களின் மெத்தனப் போக்கால் பாமர மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.  

டெல்லி யூனிவர்சிட்டி மட்டுமல்ல, பல பெரிய கல்வி நிறுவனங்களிலும் hazardous chemicals- அலட்சியமாகப் பயன்படுத்துவதும், dispose செய்வதும் நடக்கிறது.  இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவில் கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகளில் garbage disposal-ஐக் கவனமாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலதிக விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் படிக்கவும்

http://timesofindia.indiatimes.com/city/delhi/Radioactive-metal-Chem-dept-head-in-dark-V-C-says-shocking-/articleshow/5870791.cms

http://timesofindia.indiatimes.com/city/delhi/Radioactive-metal-Chem-dept-head-in-dark-V-C-says-shocking-/articleshow/5870791.cms


(அணுவின் கருவில் protons மற்றும் neutrons இருக்கின்றன. protons இடையே இருக்கும் எதிர்விசையால் அணுக்கரு உடைவதற்கு முற்படும்.  அதைத் தடுக்க neutrons பயன்படுகிறது.  when the ratio of neutrons to protons exceeds 1.6 then that element is radioactive.)

4 comments:

சாய்ராம் கோபாலன் said...

//(அணுவின் கருவில் protons மற்றும் neutrons இருக்கின்றன. protons இடையே இருக்கும் எதிர்விசையால் அணுக்கரு உடைவதற்கு முற்படும். அதைத் தடுக்க neutrons பயன்படுகிறது. when the ratio of neutrons to protons exceeds 1.6 then that element is radioactive.)//

"வேணாம் நான் அழுதுருவேன்" - வின்னர் பட வடிவேலு டயலாக் மாதிரி ?

- அங்கே "எங்கள் பிளாக்" கணக்கு வழக்கு என்ற
- இங்கே நீ படிச்ச / படிக்காத சப்ஜெக்ட் என்று - விளையாடறீங்களா ?

அப்பாதுரை said...

வருத்தப்பட வேண்டிய விஷயம்.

இந்தியப் பல்கலைக்கழகம் முதற் பொறுப்பென்றாலும், இதில் கனடாவுக்கும் பங்கிருக்கிறது. disposal மற்றும் disarmament வகைகளில் விற்றவர் வாங்கியவர் உபயோகித்தவர் மூன்று பிரிவினருக்கும் பொறுப்பிருக்கிறது.

எல் கே said...

enna solrathu . nanum paarthen itha tvla.. yarukkum porupu illa alacthiyam

ஸ்ரீராம். said...

செய்திச் சுனாமியில் இதுவும் கலந்து போகும். எந்த உருப்படியான ஆக்ஷனும் எடுக்கப் படாது..