Thursday, 29 April 2010

அந்த நாள் ஞாபகம் - 2

               அந்த வார இறுதியில் என் மகன் விஜயுடன் வினோதும் வீட்டிற்கு வந்தான்.  பெரும்பாலும் விஜயுடனே நேரத்தைக் கழித்தான்.  நேதனிடம் ஓரிரு வார்த்தைகளையே பேசினான்.  ஆனால் நேதனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்ததாக அவருக்குத் தோன்றியது.  அடுத்த மாதத்தில் இருமுறை வீட்டிற்கு வந்தான்.  கொஞ்சம் கொஞ்சமாக நேதன் மற்றும் அவரின் மனைவியிடம் பேசத்தொடங்கினான். இப்படியாக நேதனுக்கு மிகவுமே நெருக்கமானான்.  இப்பொழுதெல்லாம் வார இறுதியில் விஜயை விட வினோதை அதிகம் எதிர்பார்க்கத் தொடங்கினர் நேதன் தம்பதிகள். கலகல என்றில்லாவிட்டாலும் நிதானமான, தெளிவான அவன் பேச்சு அவர்களை ஈர்த்தது.
          
              அந்த வருடம் விஜயின் பிறந்த நாளுக்கு அவனுக்கு ஒரு காரைப் பரிசளித்தார் நேதன்.  விஜய் திறமையாகக் கார் ஓட்டுவான்.  புதிய காரில் நேதன், அவரின் மனைவி மற்றும் வினோதை நயாகராவிற்கு அழைத்துச் சென்றான் vijay.   நேதன் வினோதையும் டிரைவ் பண்ண சொல்லி வற்புறுத்தினார்.

              "Uncle, சின்ன வயசிலேர்ந்தே எனக்கு கார் என்றால் பயம்.  கார் பொம்மைகூட விரும்பியதில்லையாம்.  அதுவும் remote control car வைத்து யாராவது விளையாடினால் பயத்தால் என் அப்பாவின் மீது ஏறிக்கொள்வேனாம்.  இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை.  காரில் பயணம் செய்யுமளவு தைரியம் வந்திருக்கிறது" என்றான் வினோத்.  " அதுக்கெல்லாம் கவலைப் படாதே.  என் அப்பாவிற்கு வாரத்திற்கு மூன்று நாளாவது காரில் யாரையோ இடித்துவிடுவது போல் கனவு வரும்.  வியர்த்து எழுந்து உட்காருவார்.  ஆனால் டிரைவிங்கில் கில்லாடி.  இதுவரை ஒரு traffic violation கூட பண்ணியது கிடையாது. அதனால நீயும் தைரியமாக driving கத்துக்கோ" என்றான் விஜய். வினோத் மெல்லியதாகப் புன்னகைத்தான்.

             அதற்குப் பின் வினோத் வரும்போதெல்லாம் ட்ரைவிங் பற்றி பேசி, அவனின் பயத்தைப் போக்கி அவனுக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுத்து, லைசன்ஸும் வாங்கச் செய்தார் நேதன்.  வினோதிற்கு நடுவில் ஒருமுறை வைரல் ஜுரம் வந்தபோது தன் வீட்டிலேயே ஒருவாரம் தங்கச் செய்து அவனைப் பார்த்துக் கொண்டார்.  நேதனின் மனைவிகூட "பார்த்துங்க. ஒரு நாள் விஜய்க்குப் பதில் வினோத் பேர்ல சொத்தெல்லாம் எழுதி வைச்சுடப் போறீங்க!!" என்று கேலி செய்தாள்.  'ஏன் வினோதிடம் தனக்கு இந்த ஒட்டுதல்?என்று எண்ணிப் பார்த்தார்; பதில் தெரியவில்லை.  வினோதின் வருகையால் தன் மனதில் ஒரு நிம்மதி ஏற்படுவதும் கடந்த சில மாதங்களாக கார் விபத்து பற்றிய night mare வராமலிருப்பதும் நேதனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

               விஜய் மேற்படிப்புக்காக USA சென்றான்.  வினோதும் கோடைக்கால விடுமுறையில் Sherbrooke university-ல் summer project செய்ய சென்றான்.  இடையில் ஒரு long weekend விடுமுறைக்கு நேதன் family-யுடன் கழிக்க வந்திருந்தான். நேதன் தானே அவனை sherbrooke -க்கு காரில் கூட்டிச் சென்றார்.  வினோதிடம் பல விஷயங்களைப் பேசிக்கொண்டே சென்றதில் 3 மணி நேரப் பயணம் சுவையானதாக இருந்தது நேதனுக்கு.  Sherbrooke ஒரு அழகான நகரம்.  நகரமே யூனிவர்சிட்டியைச் சார்ந்தே இருக்கிறது.  எங்கும் students-தான் அகதிகம் தென்படுவதால் நேதனுக்கே பத்து வயது குறைந்தாற்போல் உணர்ந்தார்.  பச்சை பசேலென்ற புல் வெளியும், french மக்களுக்கே உரிய ரசனையுடன் பூச்செடிகள் நிறைந்த வீடுகளும் நேதனை மிகவும் கவர்ந்தது.  வினோதின் appartment யூனிவர்சிட்டியிலிருந்து பத்து நிமிட நடை தூரத்தில் இருந்தது.  அருகிலேயே safe way (24h shop), cumberland போன்ற பெரிய கடைகளும், பஸ் ஸ்டாப்பும் இருந்தன.  இருவரும் வினோதின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, நகரின் அழகை ரசித்துக் கொண்டே walk போனார்கள்.

             மாலை ஏழு மணியளவில் நேதன் டொரொண்டோவிற்கு திரும்ப கிளம்பினார்.  அப்போதுதான் கார் டிக்கியில் ஒரு bag இருப்பதைப் பார்த்து அதை வினோதுடையதா என்று கேட்டார்.  வினோத் "uncle, என்னுடையதில்லை. aunty ஏதாவது வைச்சிருப்பாங்க. பிரிக்காதீங்க.  கோவப்படப் போறாங்க" என்று சொல்லி டிக்கியை அழுத்தி மூடினான்.

              திரும்பி வரும்போது நேதனுக்கு பயணம் கொஞ்சம் அலுப்பாக இருந்தது. Freeway வந்ததும் 100km/h என்று வேகத்தைக் கூட்டினார்.  ஐந்து நிமிடத்தில் வினோதிடமிருந்து ஃபோன் வந்தது.  " என்ன uncle, freeway-ல போயிண்டிருக்கீங்களா?' என்றான்.  "ஆமாம்.  வேகமாகப் போனால் சீக்கிரம் போலாம்." என்றார் நேதன்.
"வேகமாகவே போங்க.  வேகத்தை 50-க்குக் கீழே குறைக்காதீங்க.  ஏன்னா உங்க காரில் இருக்கும் bomb வெடிக்கும்" என்றான்.
" is this some kind of prank? freeway-ல போகும்போது விளையாடாதே" என்று ஃபோனைக் கட் செய்தார்.
திரும்பவும் வினோதிடமிருந்து ஃபோன். "uncle, உங்கள் கார் டிக்கியில் ஒரு பேக் இருந்தது இல்ல, அதில்தான் பாம் இருக்கு" என்று கொஞ்சம் கடுமையான குரலில் பேசினான்.
" நீ சொல்றதை நான் எப்படி நம்புவது?" என்றார் நேதன் நம்பிக்கையில்லாமல்.
" o.k. பல வருஷங்களுக்கு முன்னால, மதுரைப் பக்கம் ஒரு மனுஷனை காரால் இடித்துக் கொன்னீங்க இல்ல.  அவனோட மறு பிறவிதான் நான்.  இப்ப பாம் விஷயத்தை நம்புவதும் நம்பாததும் உங்க இஷ்டம்" என்றான் வினோத். "but....how...." என்று நேதன் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கையிலேயே அவரின் mobile-ல் charge தீர்ந்துவிட்டது.

              சே!, charger எடுக்கவில்லையே என்று தன்னையே நொந்து கொண்டார் நேதன்.  'கார் விபத்து அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.  டிக்கியில் ஒரு பையை வலுக்கட்டாயமாக வினோத் இருக்க வைத்ததும் உண்மைதான்!!.  ஒருவேளை உண்மையாகத்தான் பாம் வைத்திருக்கிறானோ?  ஐயோ! விஜயும் அகிலாவும் நான் இல்லாமல் தவிப்பார்களே!  இங்கு உறவினர்களே இல்லையே!! விஜயின் படிப்பே இன்னும் முடியவில்லையே! சே, இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருக்கலாமோ?' என்று மனம் புலம்பியது.

             'தெய்வம் நின்று கொல்லும் என்று கேட்டதில்லையா?  நீ செய்த தப்புக்கு தண்டனை.  அதுவும் கொன்னவன் கையாலேயே.  உனக்கு நல்லா வேணும்' என்று இன்னொரு மனசாட்சி. என்ன செய்வது என்று குழம்பியவாறே freeway exit அருகில் வந்துவிட்டார். ''அடுத்து ஸிக்னல் வரும்.  நின்றால் என்னோடு 4-5 innocent மக்களாவது செத்துப் போவார்கள்.  ஒரு மரணத்துக்கே இந்த பிறவி முழுக்க கஷ்டப் பட்டாச்சு.  அடுத்த பிறவிக்கும் சேர்த்து பாவம் செய்ய வேண்டாம்.Freeway யிலிருந்து Exit ஆனவுடன் pullover செய்வோம்.  செத்தாலும் நான் மட்டும்தானே சாவேன்' என்று எண்ணியவாறே pullover செய்யத் தயாரானார்.  அதற்குள் நெஞ்சின் மீது பத்து பேர் குத்தாட்டம் போடுவது போல் ஒரு வலி.  காரை நிறுத்தினாரா, வெளியில் வந்தாரா என்று தெரியவில்லை.  கைகளும் கால்களும் அனிச்சையாக வேலை செய்ய blackout ஆனார் நேதன்.
---------தொடரும்

3 comments:

எல் கே said...

எதிர்பாராத திருப்பம் . அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்

ஸ்ரீராம். said...

கவலைப் படாதீங்க வெடியெல்லாம் வெடிக்காது...!

Anonymous said...

migaum nantraka ulathu