Wednesday, 10 November 2010

1980 - 2010





1980

             மாலை ஆறரை மணியாகிவிட்டது. சீதாவோ எத்தனை முறை கூப்பிட்டாலும் "அஞ்சே நிமிஷம்மா" என்று தோழிகளுடன் பக்கத்து மைதானத்தில் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள். ஒரு வழியாக ஏழு மணிக்கு வீட்டிற்கு வந்தாள்.  வந்தவுடன் அக்கா அண்ணாக்களுடன் விளையாட்டு, சண்டை etc.,.  "ஏண்டி நாளைக்கு ஸ்கூல்ல பேச்சுப் போட்டின்னு சொன்னியே. prepare பண்ணியாச்சா?" என்று அம்மா சமையலறையில் சமைத்தபடியே கேட்டாள்.  "அம்மா, அதெல்லாம் அக்கா என்னென்ன points சொல்லனும்னு சொல்லியிருக்கா,  நான் develop பண்ணிப்பேன்.  கவலைப் படாதே.  நான் இப்ப homework பண்ணிண்டு இருக்கேன்." என்றாள் சீதா.  ஹோம் வொர்க் முடித்த பின்னர் அடுத்த நாளுக்காக time-tableபடி புத்தகத்தை அடுக்கி வைத்துக் கொண்டாள்.  இதற்குள் அம்மா டின்னருக்குக் கூப்பிட அனைவரும் ஒன்றாக அமர்ந்து கதை பேசியபடி சாப்பிட்டனர்.

              மறு நாள் ஸ்கூலுக்குப் போகும்போது 'அம்மா, நான் நல்லா பண்ணனும்னு சாமிகிட்ட வேண்டிக்கோ" என்று சொல்லியபடி குதூகலத்துடன் ஸ்கூலுக்குப் போன சீதா பேச்சுப் போட்டியில் தன்னம்பிக்கையுடன் கலந்து கொண்டு முதல் பரிசும் பெற்றாள்.  மாலையில் பெருமிதத்துடன் வந்த மகளை அணைத்து " நீ நல்லா பண்ணுவேன்னு தெரியும். very good. சரி போய் விளையாடு" என்று அனுப்பி வைத்தாள் அம்மா.

2010

              நான்கு மணிக்கு ஸ்கூலிலிருந்து வந்தாள் அனன்யா.  அம்மா வைத்திருந்த பூஸ்டையும் டிபனையும் சாப்பிடும்போதே ஹோம் வொர்க் செய்ய ஆரம்பித்தாள்.  " அனன்யா, சீக்கிரம் ஹோம் வொர்க் பண்ணு.  இன்னைக்கு விளையாடப் போக வேண்டாம்.  ரெண்டு நாள் கழிச்சு பேச்சுப் போட்டி இருக்கில்ல.  தினமும் இரண்டு தடவை சொல்லிப் பாரு.  நான் இண்டர் நெட்டில் பார்த்து நிறைய points எழுதி வச்சிருக்கேன்.  அதையும் சேர்த்து மனப்பாடம் பண்ணிக்கோ.  ஆறு மணிக்குப் பாட்டு க்ளாஸ் வேற இருக்கு." என்றாள் அம்மா.  அன்றும் அதற்கு மறு நாளும் விளையாட்டு கட்.  பேச்சுப் போட்டிக்கு முதல் நாள் அம்மா டென்ஷனாக இருந்தாள்.  "யார் யாரெல்லாம் போட்டியில் இருக்காங்க?  யார் ஜட்ஜ் தெரியுமா?" என்று ஏதாவது கேட்ட வண்ணம் இருந்தாள்.  ஒரு நான்கு முறையாவது அனன்யாவைச் முழு உரையையும் சொல்ல வைத்திருப்பாள். கையால் இப்படி action பண்ணு, முகத்தில் expression இன்னும் கொஞ்சம் வேணும், இந்த இடத்தில் modulation இன்னும் கொஞ்சம் better-ஆ இருக்கட்டும் என்று அட்வைஸ் கொடுத்த வண்ணம் இருந்தாள்.  இத்தனை ரிஹர்ஸலுக்குப் பிறகும் அனன்யா ரொம்ப டென்ஷனாகவே இருந்தாள்.  'அம்மா நான் நல்லா பண்ணுவேனாமா?' என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தாள். டிவி பார்த்துக் கொண்டிருந்த அப்பா ' என்ன, மணி ஏழரை ஆறதே.  பிட்சா ஆர்டர் பண்ணவா.  பாவம் நீங்க ரெண்டு பேரும் போட்டிக்கு பிஸியா prepare பண்ணிண்டு இருக்கேளே" என்றார்.  எட்டு மணிக்கு சுனைனா பார்த்த வண்ணம் அனன்யாவும், ஏதோ சீரியல் பார்த்த வண்ணம் அப்பாவும் அம்மாவும் பீட்ஸா சாப்பிட்டனர். டின்னருக்குப் பிறகு அப்பா அம்மா இருவருக்கும் பேச்சுப் போட்டிக்கான உரையை இருமுறை சொல்லிக் காட்டிய பிறகே அனன்யா தூங்கப் போனாள்.

             காலையில் அனன்யாவைச் சீக்கிரம் எழுப்பிய அம்மா அவளுக்கு முக்கிய points எல்லாம் ஒரு முறை நினைவூட்டினாள்.  'relaxed-ஆ இரு. confident-ஆ பேசு. all the best" என்ற அட்வைஸுடன் மகளை முத்தமிட்டுப் பள்ளிக்கு அனுப்பி வைத்தாள். அன்று முழுவதும் 'இப்ப போட்டி ஆரம்பித்திருக்கும்; இப்ப அனன்யா பேசியிருப்பாள்; இப்ப முடிவு சொல்லியிருப்பார்கள்' என்று அம்மாவின் எண்ணங்கள் அனன்யாவைப் பற்றியே இருந்தது.

            மாலை அனன்யா ' அம்மா, நான் நல்லா பேசினேன். எனக்கு மூன்றாம் பரிசுதான் கிடைத்தது" என்று கூறிய வண்ணம் வந்தாள். " கவலைப் படாதே.  உங்க ஸ்கூலில் இருக்கும் பாலிடிக்ஸுக்கு உனக்கு மூன்றாம் பரிசு கிடைத்ததே பெரிசு. I am very happy that you got some prize. be happy. we will buy you a nice gift today " என்று மகளைத் தேற்றினாள்.  மாலை அப்பா வந்ததும் மூவரும் பேச்சுப் போட்டியில் வென்றதற்காக அனன்யாவிற்கு கிஃப்ட் வாங்க கடைக்குப் போனார்கள்.

11 comments:

Anonymous said...

Interesting story--------

அப்பாதுரை said...

காலப்போக்கு எப்படி இருக்கு பாருங்க.. 1980ல மூன்றாம் இடத்துக்கு வாழ்த்தும் பரிசும் கிடைச்சிருக்குமா? ரெண்டு சாத்து தான் கிடைச்சிருக்கும்.

geetha santhanam said...

சரியாகச் சொன்னீர்கள் துரை. மேலும் ஒரு பேச்சுப் போட்டிக்கு அம்மா சமையலைக்கூட மறந்து டிரைனிங் கொடுப்பார்களா? இப்ப parents கொஞ்சம் too muchஆ அலட்டிக் கொள்கிறார்கள்.

meenakshi said...

தாங்களும் வருத்திக்கொண்டு, குழந்தைகளையும் வருத்தி........ காலம் இப்படி மாறி போனது நெனச்சா ரொம்ப வருத்தமாதான் இருக்கு.

ஸ்ரீராம். said...

அந்தக் காலத்துல டிரெயினிங்கும் தர மாட்டார்கள், பரிசு கிடைக்கா விடில் அலட்டிக் கொள்ளவும் மாட்டார்கள்...இப்போ அப்படியா..பிள்ளைகளுக்கு மேல பெற்றவர்கள் படும் பாடு, பரிசு கிடைக்காவிட்டால் இடிந்து போவது...!!!

geetha santhanam said...

ஆமாம் மீனாக்ஷி & ஸ்ரீராம். குழந்தைகளுக்குப் பெற்றவர்கள் போடும் pressure-ஐ நினைத்தால் கவலையாக இருக்கிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நானும் போகக்கூடிய போட்டி நேரங்களில்.. நான் தூரமா நின்னுப்பேன் என்னோட டென்சன் .. அவளுக்கு ஒட்டிக்கக்கூடாதேன்னு..சில சமயம் நான் போகாம இருக்கக்கூட முயற்சிப்பேன் :)

அதே மாதிரி சாஞ்சு இரு அப்பத்தான் சிக்ஸர் அடிப்பான் நு சொல்றமாதிரி.. நான் வரல அதான் போட்டியில் ஜெயிச்ச ந்க்கறமாதிரி மூடநம்பிக்கை எல்லாம் இருக்கும் எனக்கு சிலசமயம் :)
டூ பேட் இல்ல

geetha santhanam said...

இதெல்லாம் part of parenting pressure (pleasure) முத்துலெட்சுமி.

சாய்ராம் கோபாலன் said...

"ஓடி விளையாடு பாப்பா" என்று பாரதி சொன்னபோது நாம் முப்பது கோடி மக்கள் ! இப்போ. பிரம்மா எத்தனை ஷிபிட் போட்டாலும் நாம் குழந்தைகளை பெத்து பிதுக்கி தள்ளிக்கொண்டு இருக்கின்றோம !!

காலை எழுந்தவுடன் படிப்பு
மாலை முழுதும் விளையாட்டு

இப்போது அப்படி முடியுமோ !!

அந்த கிளாஸ், இந்த கிளாஸ் என்று - என்னவோ போங்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

super story....remba alaga solli irukkeenga geetha

geetha santhanam said...

thanks appavi thangamani