Wednesday, 17 November 2010

(ஃ)போகஸ் செய்திகள்

JPC- யில் சேரத் தயக்கம்

பல கோடி ரூபாய் ஊழலுக்காக JPC அமைக்க வேண்டும் என்று பார்லிமெண்டில் பெருங்கூச்சல் எழுப்பினார்கள் எம்பிக்கள்.  ஆனாலும் 1.75 lakh crores-க்கு எத்தனை சைபர் என்ற குழப்பத்தின் காரணமாக அந்தக் குழுவில் இடம் பெற அரசியல் தலைவர்கள் தயக்கம் காட்டி வருவதாகச் செய்திக் குறிப்பு கூறுகிறது.

சேரும் ஷேரும்.

'சேர் (chair) என்பது தோளில் தொங்கும் துண்டைப் போன்றது; ஷேர்(share) என்பது இடுப்பில் கட்டிய வேட்டி போன்றது. அதனால் கண்மணிகளே, சேர் போனாலும் ஷேர் இருப்பதால் கவலை வேண்டாம்' என்று தலைவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

எடியூரப்பா பெயர்  மாற்றம்.

எடியூரப்பா என்ற பெயர் சமயத்தில் இடையூரப்பா என்று ஒலிப்பதால்தான் அடுத்தடுத்து இடையூறாக வருவதாகத் தன் குடும்ப ஜோசியர் கூறியதால் அவரின் ஆலோசனைப்படி எடியூரப்பா தனது பெயரை உடையூரப்பா என்று மாற்றிக் கொள்ளப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்கிறார்கள்.

CBI அதிகாரிகள் ஒட்டுமொத்த ராஜினாமா

காமன்வெல்த் கேம்ஸ், ஆதர்ஷ் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று இடைவிடாமல் அரசியல்வாதிகள் ஊழல் செய்வதோடு எதற்கெடுத்தாலும் CBI விசாரணைக்கு உத்தரவிடுவதால் வேலைப் பளு தாங்காமல் தாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ராஜினாமா செய்யப் போவதாக CBI அதிகாரிகள் மிரட்டல்.

ஓரவஞ்சனை - ஓபாமாவின் புலம்பல்

அடுத்தடுத்து கோடிக் கணக்கில் ஊழல் புரியும் இந்திய அரசியல்வாதிகள் தனது இந்தியப் பயணத்தின் போது வெறும் நடனமாட மட்டும் கற்றுக் கொடுத்துவிட்டு ஊழல் பற்றிய பாடங்களைக் கற்றுக் கொடுக்காமல் விட்டது பெரும் ஓர வஞ்சனை என்று அமெரிக்க அதிபர் ஓபாமா வன்மையாகக் கண்டித்தார்.

சினிமா தியேட்டரில் ஈ ஓட்டினார்கள்

இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் திறமை பற்றிய விவரம் விறுவிறுப்பாகவும் அவர்களின் உரைகள் சரியான காமெடி பீஸாகவும் இருப்பதால் தொலைக்காட்சி செய்திகள் பார்ப்பதிலேயே மக்கள் ஆர்வம் காட்டுவதால் பெரும்பான்மையான திரையரங்குகளில் கூட்டமே இல்லை என்று தெரிய வருகிறது.

12 comments:

LK said...

போகஸ் செய்திகள் தூள்

சாய் said...

Super

geetha santhanam said...

நன்றி LK மற்றும் சாய்ராம்.
சாய்ராம், என்ன மீனாக்ஷி ஆளே காணோம்?

அப்பாதுரை said...

எல்லாம் சரி - ஒபாமா தவிர.. அதுக்கெல்லாம் புத்திசாலித்தனம் வேணும்ல?

meenakshi said...

உள்ளேனுங்கோ! :)

பதிவை பதிவிட்டதினமே படிச்சாச்சு. பின்னூட்டம்தான் இதோ, இதோன்னு எழுதறதுக்கு கணிபொறி கிடைக்கல. அது கிடைக்கும்போது எனக்கு வேலை. மன்னிக்கணும்.
பதிவு சுவாரசியம். //எடியூரப்பா பெயர் மாற்றம்// சூப்பர்!
நீங்க மெல்லிசை பற்றிய பதிவு ஒண்ணு எழுதுங்களேன். இதை உங்க வாசகியின் விருப்பமா எடுத்துக்கோங்க. :)

geetha santhanam said...

வாங்க மீனாக்ஷி. ரொம்ப நாளா உங்களைக் காணோமே என்று விசாரித்தேன்.
துரை, இங்க எல்லாருக்கும்கூட புத்திசாலித்தனம் கொஞ்சம் குறைவுதான். இல்லன்னா இப்படி மாட்டிண்டு முழிப்பாங்களா?

THOPPITHOPPI said...

தொகுப்புகள் அருமை

geetha santhanam said...

thanks thoppithoppi.

ஸ்ரீராம். said...

எல்லாமே டாப்.

geetha santhanam said...

thanks sreeraam.

shanthi said...

எல்லாமே super!! நீங்க எழுதியிருக்கரதுல எதுவுமே bogus இல்லியே!! இப்பெல்லாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுசா என்ன scam release ஆகுதுன்னு பாக்கவே நேரம் சரியாயிருக்கு. இதுல யார் theatre போயி படம் பாக்குறது?

எடியுரப்பா அடி மேல அடி வாங்கி அடியுரப்பா ஆகிட்டாரே !! BJPல இருந்துகிட்டு ஊழலெல்லாம் கொஞ்சம் பாத்து பண்ண வேணாமா?

geetha santhanam said...

நன்றி சாந்தி. மற்ற கட்சிகள் மாதிரி கூட இருந்தவங்களையும் அப்பப்போ கொஞ்சம் 'பார்த்துண்டா' பிரச்சினை வந்திருக்காதோ?