சமீபத்தில் சன் டிவியில் டாக்டர் கலாம் அவர்களின் பேட்டி (மறு ஒளிபரப்பு) பார்த்தேன். மனதைத் தொடும் வண்ணம் பல நிகழ்ச்சிகளை அதில் அவர் நினைவு கூர்ந்திருந்தார். அதிலிருந்து சில துளிகள்:
மகாத்மா காந்தி அவர்கள் டில்லி பிர்லா மந்திர் பிரார்த்தனை கூட்டத்திற்குச் செல்லும்போது வாசலில் நின்று மக்களுக்காக நிதி திரட்டுவாராம். அந்த நிதியை அன்றே வங்கியில் சேர்த்து மக்கள் நலனுக்காக அந்த நிதியைப் பயன்படுத்துவாராம். ஒருமுறை அப்படி சேகரித்த நிதியை வங்கியில் செலுத்தும் பொறுப்பை ஒருவரிடம் கொடுத்தாராம். அப்படி வங்கியில் செலுத்திய கணக்கில் காலணா குறைந்ததாம். மக்கள் சேவைக்காகச் சேர்த்த நிதியில் காலணா குறைந்ததற்காக மனம் வருந்தி மகாத்மா உண்ணாவிரதம் இருந்தாராம். நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கு!!
(ராஜாக்களும் கல்மாடிகளும் இருக்கும் இதே மண்ணில் இப்படி ஒரு தலைவர் இருந்திருக்கிறார்!!)
சீனியர் புஷ்ஷின் இந்தியா வருகைக்கு முன் அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு சோதனைக்கு வந்தவர்கள் கலாம் அவர்களுக்கு, " அமெரிக்க அதிபர் ராஷ்ட்டிரபதி பவனைப் பார்க்க வருகிறார். நீங்கள் அங்குள்ள கார்பெட்டை மாற்றி விடுங்கள். மேலும் அங்கு அதிபரின் பாதுகாப்பிற்காக எங்கள் பாதுகாப்பாளர்கள் ராஷ்ட்டிரபதிபவனின் முழுப் பாதுகாப்பையும் ஏற்பார்கள்' என்று ஆலோசனை சொன்னார்களாம். அதற்கு டாக்டர் அவர்கள் " ராஷ்ட்டிரபதி பவனின் இந்த கார்பெட் இந்தியாவின் மிகப் பெரும் தலைவர்கள் பலரின் பாதம் பட்டது. அதை மாற்றும் எண்ணமே இல்லை. மேலும் எங்கள் நாட்டிற்கு வருகை தரும் வெளி நாட்டுத் தலைவரைப் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் எங்களுக்கு உண்டு. அதனால் எங்கள் காவலர்களே பாதுகாப்பு வேலையைச் செய்வார்கள்" என்று கண்ணியமாக ஆனாலும் கண்டிப்பாக அதை மறுத்தாராம்.
(இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!)
.
5 comments:
thanks for sharing
கலாமுக்கு ஒரு சலாம்....
இதே நிகழ்ச்சி பற்றி இதயம் பேத்துகிறது பக்கத்திலும் ஒரு பதிவு வந்துள்ளதே படித்தீர்களா...
கலாம் வேறொரு தலைமுறை.
'பிற முன்னேற்றத்தைக் கண்ட நாம் கண்ணியத்தில் மட்டும் முந்தைய தலைமுறைகளைப் பின் தங்குவது ஏன்?' என்று கொஞ்சம் யோசிக்க வைத்தது பேட்டி.
இணைப்புக்கு நன்றி.
நன்றி துரை, ஸ்ரீராம் & LK. ஸ்ரீராம் அந்த பதிவைப் படிக்கவில்லை. இன்று படித்துவிடுகிறேன்.
மிகவும் நல்ல பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காமல் அருமையாக தூய தமிழில் அவர் பேசுவது என்னை மிகவும் வியக்க வைக்கும். சமீபத்தில் தொலைகாட்சியில் இவரது இன்னொரு பேட்டியை மறு ஒளிபரப்பு செய்திருந்தார்கள். அவர் தன் குழந்தை பருவத்தையும், பள்ளி பருவத்தை பற்றியும் மிக அருமையாக, நகைச்சுவை கலந்து பேசி இருந்தார்.
சமீபத்தில் சிவகுமார் அவர்களின் கம்பராமாயண சொற்பொழிவு ஒன்றும் பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.
Post a Comment