இந்தியாவில் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். நூற்றுக் கணக்கில் வரும் சேனல்களில் நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம். அட, எதிலும் ஒன்றும் பார்க்க சகிக்காவிட்டால் சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்தாலே பதினைந்து நிமிடம் கழிந்துவிடுமே!. இங்கு எங்களுக்குக் கேபிள்வாலா புண்ணியத்தில் இரண்டே இரண்டு தமிழ் சேன்ல்கள்தான் வரும். அதிலும் ஜெயா டிவி 'வரும் ஆனால் வராது' ரகம். ஒன்று சத்தமே வராது; இல்லை ஒரே சத்தமாக (back ground noise) இருக்கும். அதனால் கிடைக்கும் ஒரே சேனல் சன் தான். அதிலும் பாதி நேரம் சீரியல்கள்தான் லைன் கட்டி வரும். எனக்கு இந்தியும் பிடிக்'காத தூரம்' என்பதால் பெரும்பாலும் ND TV -யோ இல்லை CNN- ஓ தான் பார்க்க நேரிடும். அவர்களும் ஒசாமா, 2ஜி என்று எதுவும் சிக்காத பெரும்பாலான நாட்களில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள்.
ஒரு மாதமாகத்தான் 'பெஹலா நெட்வொர்க்கின் உதவியால் பாலைவனச் சோலை போல் விஜய் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது. பத்திரிகைகளில் விஜய் டிவி நிகழ்ச்சிகளை சிலாகித்து எழுதியிருப்பதைப் படித்ததில் விஜய் டிவி பார்க்க ஆர்வமாக இருந்தேன். அந்த வாய்ப்பு கிடைத்தும் பெரும்பாலான நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பும் நேரம் தெரியாததால் ( இந்திய நேரப்படி இங்கு ஒளிபரப்பு கிடையாது) பார்க்க முடியாமல் இருந்து ஒரு வழியாக அந்த time difference-ஐக் கண்டு பிடித்து இரு வாரங்களாகத்தான் நிகழ்ச்சிகளை ரெகுலராகப் பார்க்கிறேன். ஜுனியர் சூப்பர் சிங்கரில் 'நாக்க முக்க' பாடி கலக்கிய சிறுமிக்குத் திருஷ்டி சுத்திப் போடவேண்டும். சத்திய ராஜின் ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியும் ('minute to win' நிகழிச்சியின் காப்பியாக இருந்த போதும்) ரசிக்க முடிகிறது. சூப்பர் சிங்கர் மற்றும் அது இது எது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவரின் நகைச்சுவை அந்த நிகழ்ச்சிகளுக்குப் பெரும் பலம் என்று நினைக்கிறேன்.
இவை எல்லாவற்றையும் விட ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நடத்தும் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்தது. ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் 'தமிழ் பேசு தங்கக் காசு' நிகழ்ச்சியை இந்தியா வரும்போது பார்த்திருக்கிறேன். அவர் ஆங்கிலமே கலக்காமல் தமிழ் பேசும் அழகை வியந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி ( atleast போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்திலாவது)தமிழ் படிக்க முடியாத, பிடிக்காத இன்றைய தலைமுறையினரிடம் தமிழார்வத்தை உண்டு செய்தால் மகிழ்ச்சியே.
அதிலும் ரேவதிப் பிரியா, காவ்யா அவர்கள் பங்கு கொண்ட இந்த episode மிகவும் அருமை. விடை கண்டு பிடிப்பவரா அல்லது அதற்கான க்ளூ கொடுப்பவரா யார் அதிக புத்திசாலி என்று வியக்கும் வண்ணம் இருவரும் அருமையாக செய்திருக்கிறார்கள். 'பிரயத்தனம்' என்ற சொல்லுக்குப் 'ப்ரும்ம' என்ற க்ளூ கொடுத்து வெற்றி பெரும் வரை ஆட்டம் 20/20 கிரிக்கெட் பந்தயம் போல் விறுவிறுப்பாக இருந்தது. கடைசியில் 'சிறந்த தகுதிகள் இருந்தும் திரையுலகில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற முடியாத தனக்குத் தாய் மொழி பெற்றுக் கொடுத்த வெற்றி இது என்று அவர் (காவ்யா) குறிப்பிட்டது நெகிழ்ச்சியாக இருந்தது. (இந்த நிகழ்ச்சியைப் பார்க்க கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்.)
.http://123tamiltv.com/vijay-tv-oru-vaarthai-oru-latcham-23-04-11.html
இவர்களைத் தொடர்ந்து விளையாடிய வடிவுக்கரசியும் வியக்கும் அளவு சிறப்பாக ஆடினார்.
தமிழ் சொற்களுக்குத் தமிழிலேயே குறிப்புகள் கொடுத்து கண்டுபிடிக்க வைப்பது ஒரு சுவையான சவாலாகத்தான் இருக்கிறது.
18 comments:
இன்டர்னெட்டில் நிறைய தமிழ் சேனல்கள் வருது என்கிறார்களே?
ஆமாம் துரை, tamil o.com -ல் போனால் நிறைய சேனல்களின் நிகழ்ச்சிகளை download செய்து பார்க்கலாம். இது போல் மேலும் சில வெப் சைட் இருக்கலாம்.
விஜய் டிவியில் 'காஃபி வித் அனு' பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்று.
Nice roundup... நெறைய சேனல் இருந்தாலும் குழப்பம்'தாங்க... எதை பாக்கறதுன்னு... அதுக்கு இது போல இன்டர்நெட்ல வேணுங்கறது மட்டும் தேடி பாத்துக்கறது பெட்டர்னு தோணுது...
வருகைக்கு நன்றி அப்பாவி தங்கமணி & ஸ்ரீராம்.
அப்பாவி தங்கமணி, டிவி என்றால் ஒரு சௌகர்யம், வேலையும் பார்த்துக் கொண்டே பார்க்கலாம். ஆனாலும் இணையத்தில் விரும்பும் நேரத்தில், அதுவும் விளம்பரங்கள் இடையூறு இல்லாமல் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வசதிக்கு யூ ட்யூபுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
ஸ்ரீராம் ஜி, குறித்துக் கொண்டேன். கட்டாயம் பார்க்கிறேன்.
உங்க ஊர்ல விஜய் டீவியெல்லாம் வருகிறதா பரவாயில்லை.. இங்க ஜெயா ஒன்னுதான் தமிழ் சேனல்... முதலில் மக்கள் டிவி வந்தது.. தமிழ் பேசு தங்க காசு , கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை நிகழ்ச்சிகள் பார்த்து பழக ஆரம்பித்தவுடன் அந்த சேனலும் கட்..
வீட்டிற்கு ( இந்தியா) வந்தால் விஜய் டிவி மட்டும் தான்....
மக்கள் டிவி கட் ஆனதற்கு வருத்தப்படாதீர்கள். சமீபத்தில் பார்த்தேன். பாதி நேரம் ரியல் எஸ்டேட் பற்றிதான் நிகழ்ச்சிகள். என்ன ஆச்சு மக்கள் டிவிக்கு?
பத்ம நாபன் சார்,மக்கள் டிவியில் இப்ப பெரும்பாலும் ரியல் எஸ்டேட் பற்றிய நிகழ்ச்சிதான் வருகிறது. அதனால் மக்கள் டிவி வராததற்காக வருந்த வேண்டாம்.
//அதிலும் பாதி நேரம் சீரியல்கள்தான் லைன் கட்டி வரும்//
ஏய் கீது, சென்னையில் உன் அக்காக்கள் / அம்மாவிடம் டிவி. சீரியல் கிடையாது என்று சொல்லிப்பார்த்தியோ ? கொலை விழும்.
என் அம்மா இங்கே வந்தபோதும் "திருமதி செல்வம், தென்றல்" அது இது என்று ஒன்றையும் விடவில்லை. அதை கண்டு அழவிட்டால் தமிழ் பெண்களின் நாள் முடிவதில்லை.
ஏன் என் அக்காவின் கணவரும் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் ஷுவை அவுக்காமல் பார்ப்பது டி.வி. சீரியல் தான் !!
நகைச்சுவை சீரியல் ஒன்றும் தப்பி தவறி கூட வராது
சாய்ராம், ஆச்சர்யம் ஆனால் உண்மை, என் அக்காக்கள் யாரும் டிவியே பார்ப்பதில்லை. என் அம்மா டிவியில் சீரியல் பார்ப்பது இல்லை.
//geetha santhanam said... சாய்ராம், ஆச்சர்யம் ஆனால் உண்மை, என் அக்காக்கள் யாரும் டிவியே பார்ப்பதில்லை. என் அம்மா டிவியில் சீரியல் பார்ப்பது இல்லை.//
Wow, I should have realized knowing you all that they may not waste time on this.
Glad to know that they do not. Nice situation to be in
சேனல்கள் அதிகம் பார்ப்பது ஆயாசமான விஷயம். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஒழித்ததே இத சீரியல்கள் தான்.
வேடிக்கையாய் சொல்வதுண்டு..
ஒரு பெண் அழுதாள் அது சீரியஸ்...பல பெண்கள் அழுதாள் அது சீரியல் ..
good joke mohanji.
டிவி ப்ரோக்ராம் எல்லாம் எங்கே மேடம் பார்க்க முடிகிறது? எப்பப் பார்த்தாலும் கார்ட்டூன் தான். வர வர நானும் என் மனைவியும் Tom & Jerry க்கு ரசிகர்கள் ஆகி விட்டோம்.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பார்க்க மட்டும் அனுமதி கொடுத்திருக்கிறார் எங்க வீட்டு பெரியவர்.
ஆஹாஹா. நாங்களும் அந்த நிலமையில்தான் இருந்தோம் சென்ற ஆண்டு வரை. ஆனாலும் டாம் அண்டு ஜெர்ரியை வது வித்தியாசம் பாராமல் ரசிக்கலாம். உங்கள் குழந்தை பென் டென் எல்லாம் பார்த்து ரசிக்கும் காலம்தான் உங்களுக்கு உண்மையிலேயே திண்டாட்டம்.
'ஒரு வார்த்தை ஒரு லட்சம்'. ஜேம்ஸ் வசந்தன் மிகவும் அருமையாக நடத்தும் நிகழ்ச்சி இது. ஆரம்ப நாட்களில் இவர் சென்னை தொலைகாட்சியில் பல அருமையான நிகழ்சிகளை நடத்தியுள்ளார். நான் எப்பொழுதுமே இவர் நிகழ்சிகளை விரும்பி பார்ப்பேன். இந்த முறை சென்னை சென்ற பொழுது, இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, எங்கள் அம்மா வீட்டில் நாங்களும் இந்த விளையாட்டு விளையாடினோம். இதில் ஜெயித்தவர் என் அம்மாதான்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, நடிகர் சுரேஷ் நடத்தும் 'காதல் மீட்டர்' நிகழ்ச்சியும் மிகவும் பிரபலம். இதுவும் தொலைக்காட்சி பிரபலங்கள், அவர்கள் தம்பதிகளுடன் சேர்ந்து விளையாடும் ஒரு நிகழ்ச்சி. மிகவும் சுவாரசியமாக இருந்தது. நேரம் கிடைத்தால் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
வாங்க மீனாக்ஷி, ரொம்ப நாளா உங்களை வலையுலகில் காணுமே என்று தேடிக் கொண்டிருந்தேன். எப்படி இருக்கீங்க? நீங்க சொன்ன நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை. இனி பார்க்கிறேன்.
நல்லா இருக்கேன். நீங்கள் என்னை தேடினதா எழுதி இருந்தத படிச்ச போது ரொம்ப சந்தோஷமா இருந்துது. இதுக்காகவே அடிக்கடி காணாம போய்டலாம் போல இருக்கே. ;)
Post a Comment