குவைத்தில் 'Proud to be Kuwait' என்ற project-காக மண் சிற்பங்கள் பிரும்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. 28,000 ச.மீ பரப்பில் 25 நாடுகளைச் சேர்ந்த 80 சிற்பக்கலை வல்லுனர்கள் சேர்ந்து பல மண் சிற்பங்களைச் செய்துள்ளனர். அரபியரின் பிரபலமான கதைகளான ஆயிரத்தோரு இரவுகள், சிந்துபாத் மற்றும் அலாவுதீன் கதைகளிலிருந்து பல நிகழ்வுகளைச் சிற்பங்களாக வடித்துள்ளனர். மாலை வேளையில் கண்கவர் வண்ண ஒளியில் இந்தக் கதைகளில் சிலவற்றை நாடகமாகவும் காண முடிந்தது. இரண்டு மில்லிலயன் டாலர் செலவில் செய்யப்பட்ட இந்த பிரும்மாண்டமான மண் சிற்பங்கள் உண்மையிலேயே பிரமிப்பூட்டும் வண்ணம் இருந்தன.
பகலில் சூரிய ஒளியில்
இரவில் வண்ண லேசர் ஒளியில்
3 comments:
பிரமிக்க வைக்கின்றன, ஒரு சந்தேகம் வருகிறது. இந்த சிற்பங்களை மேலிருந்து கீழ்வரை செதுக்குகின்றாரா இல்லை கீழிருந்து மேல்வரௌ செதுக்குகிறாரா.?நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு பதிவு / மழைபெய்தால் கரையாதோ. ?பாராட்டுக்கள்.
என்னே நுணுக்கம்...! அற்புதங்கள்...
கருத்துக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்ஜி மற்றும் ஜிஎம்பி சார். மணலுடன் வேறு ஏதோ கலந்து இந்த மண் சிற்பங்களைச் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். நாங்கள் சென்ற அன்று மழை லேசாகத் தூறியது. ஆனால் பெரிய மழி ஒன்றும் இதுவரை இல்லை. அதனால் இதுவரை கரையாமல்தான் இருக்கிறது.
Post a Comment