Sunday 17 January 2010

Birthday party

                               நான் சிறுமியாக இருக்கும்போது பிறந்த நாளென்றால் புது உடையும் கோவிலுக்குப் போவதும்தான் நினைவுக்கு வரும். என் மகளுக்கோ பிறந்த நாளென்றால் party-யும், gifts தான் நினைவுக்கு வருகிறது. காலத்திற்கேற்ப கொண்டாட்டங்களையும் மாற்றிக்கொண்டோம்.


                             மெழுகுவத்தியை அணைத்து கேக் வெட்டுவது எல்லோரும் செய்யும் ஒரு விஷயமாகிவிட்டது. சிலர் (பிறந்த நாள் கொண்டாடும்) தன் குழந்தையின் ஃபோட்டோவை கேக்கில் வரைந்து அதை அந்தக் குழந்தையைவிட்டே கத்தியால் cut செய்யச் சொல்கிறார்கள். நீடூழி வாழ்க என்று வாழ்த்தவேண்டிய நேரத்தில் இப்படி செய்யலாமா?

                               எங்கள் நண்பரின் மகனுக்கு முதலாம் ஆண்டு நிறைவின்போது மிக்க மகிழ்ச்சியோடு பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். விழா நடக்கும் இடத்தை அலங்கரிக்கும் பொறுப்பை ஒரு நிபுணரிடம் ஒப்படைத்திருந்தார் எங்கள் நண்பர். அவர் அழகு செய்வதில் நிபுணரோ இல்லையோ, அவருக்கு நமது கலாச்சாரத்தைப் பற்றி கொஞ்சமும் தெரியவில்லை. பார்ட்டி ஹாலின் நுழைவாயிலில் பிறந்த நாள் கொண்டாடும் குழந்தையின் ஃபோட்டோவை வைத்து அதற்கு மாலை போட்டு அதற்கு முன் ஒரு அகல் விளக்கையும் ஏற்றி வைத்திருந்தார். இவையெல்லாம் வேறு எதற்கோ செய்ய வேண்டியவை அல்லவா? அதைப் பார்த்ததும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.  பகட்டிற்காக

 நம் பாரம்பரிய வழக்கங்களை மறந்தது மட்டுமில்லாமல் முற்றிலும் ஆகாததாகக் கருதப்படும் விஷயங்களை செய்யுமளவிற்குக் கீழிறங்க வேண்டாமே!

                                 சென்ற வாரம் என் தோழியின் மகனுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்.  நம் பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல் கேக்கிற்கு முன் அழகாக மூன்று (அவரின் மகனுக்கு அது மூன்றாம் பிறந்த நாள்) அகல்  விளக்குகளை ஏற்றி பின்னர் கேக்கை வெட்டினார்கள். இவர்களைப் போல் மேலை நாட்டு வழக்கங்களில் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு நம் பாரம்பரியத்திற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் விழாக்களைக் கொண்டாடலாமே!.

3 comments:

அப்பாதுரை said...

கடவுளுக்கும் படம் வெச்சு மாலை போட்டு விளக்கேத்துறோம். குழந்தையும் தெய்வமும் ஒண்ணுனு பாரம்பரியப் பள்ளிக்கூடத்துல சொல்லிக் கொடுக்கலையா?
இப்படித்தான் பொறந்த நாள் கொண்டாடணும் பாரம்பரியம் புடலங்காய்னு புலம்பாம, வாய்ப்பு கிடைச்சதை நெனச்சு சந்தோசப் படுங்க.

Anonymous said...

cake a vettittaangalaa? adada! abasaunamaache!

aammaam, vettarathukku munnaadi cake mela thanni thelichi sammadham kettaangalaa??

Anu said...

We had a Hindi teacher in school, who admonished any student who said "Hi!" - reason, the word has a negative(oppari!)connotation in Hindi! Happens......