Wednesday, 6 January 2010

good samaritans

                             2009-ம் வருட முடிவில் பல பத்திரிகைகளும், இணையப் பதிவர்களும் 2009-ம் வருடத்திற்கான --- விருது என்று பலருக்கு விருதுகளை வழங்கியிருக்கின்றன. நானும் எண்ணச்சிதறல் சார்பில் மூன்று பேருக்கு 2009-ம் வருடத்திற்கான good samaritans விருதை வழங்கலாமென்றிருக்கிறேன்.

                              பிரபலமானவர்கள் சின்ன நல்ல காரியம் செய்தாலும் அதிக publicity பெறுகிறார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமாவைப் பாருங்கள், தீவிரவாதத்தை ஒழிக்க நினைத்ததற்கே நொபெல் பரிசெல்லாம் பெற்றார். அப்படியிருக்க உங்களையும் என்னையும் போல் சதாரணமானவர்கள் கூட கொஞ்சம் முயன்றால் நாட்டுக்கு நல்லது செய்யலாம் என்று உணர்த்திய கீழ்காணும் மூன்று பேருக்குத்தான் அந்த good samaritans விருது.

1. ஆராதனா - தன் தோழி ருசிக்காவின் வாழ்க்கையைச் சீர்குலைத்து அவளின் தற்கொலைக்குக் காரணமான ராதோருக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தால்தான் ஓய்வேன் என்று 19 வருடங்களாக விடாமல் போராடிய கொள்கை பிடிப்பு, சமூக அக்கறை, அதிகாரத்திற்கு அடிபணியாத நெஞ்சுரம் என்ற குணங்களால் No.1 இடத்தைப் பிடிக்கிறார்.

2. சுகந்தி டீச்சர் - 'good morninig' என்று greet செய்யும் குழந்தைக்கு பதில் வணக்கம் சொல்லாது, 'சரி, சரி போய் உட்கார்" என்று எரிந்து விழும் ஆசிரியர்களுக்கு மத்தியில் ஓட்டுனரின் கவனக்குறைவால் van-னோடு குளத்தில் விழுந்த பல குழந்தைகளைக் காப்பாற்றியதோடு, அந்த முயற்சியிலேயே இரு குழந்தைகளைப் பிடித்த வண்ணம் உயிர் இழந்த சுகந்தி டீச்சரின் கடமை உணர்வு என்னை மிக அதிகமாக பாதித்தது.

3. கனகசுப்பிரமணியன் (bus conductor): கூட்டத்தைப் பார்த்தாலே கடுப்பாகும், சில்லறை பாக்கியைக் கேட்டால் கூட சலித்துக் கொள்ளும் நடத்துனர்கள்தான் நாம் சென்னையில் அதிகம் பார்ப்பது. குன்னூரில் நடத்துனராக வேலை பார்க்கும் இவரைப் பற்றி இட்லி வடை ப்ளாகில் படித்ததும் மிகவும் வியந்து போனேன். இட்லி வடை blog-ல் அவரைப்பற்றி படித்த செய்தி இதோ:

பயணம் தொடங்கும் முன் தினம் ஒரு திருக்குறளும் அதற்குப் பொருளும் சொல்கிறார். பஸ்சில் பயணிக்கும் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாகவும் கொடுக்கிறார்.பஸ்சில் வரும் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை கருத்துகளை தெரிவிக்கும் கனக சுப்ரமணியம், ஏழைக்குழந்தைகளுக்கு, இலவச சீருடையும் வாங்கித் தருகிறார். தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவருக்குப் பயணிகளுக்கு மத்தியில் சந்தன மாலை அணிவித்து கவுரவிக்கிறார்."செந்தமிழ்' அறக்கட்டளையை நடத்தும் கனகு, சிறைத்துறையின் அனுமதியோடு, கைதிகளுக்குப் போட்டிகளை நடத்தி பரிசும் வழங்குகிறார். நண்பர் ஒருவருடன் சேர்ந்து கோவையில் இவர் நடத்தும் "சாரோன்' முதியோர் இல்லத்தில் இப்போது இருக்கும் ஆதரவற்ற முதியோர் எண்ணிக்கை 15.எச்.ஐ.வி.,யால் பாதித் தோருக்கு, கோவை "சினேகம்' அறக்கட்டளையுடன் இணைந்து, இலவச மருந்து, சத்து மாவு வழங்கி வருகிறார்.

                        இந்த மூவரைப் போல் நம்மால் முடிந்த அளவு நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுவதைப் புத்தாண்டு உறுதி மொழியாக கொள்வோம்.

2 comments:

அப்பாதுரை said...

திருக்குறள் lectureக்கு பயந்து அடுத்த பஸ்சுக்கு வெயிட் பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்தேன்.. not bad.
the world needs more of such people.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்களிட ம் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.. மூவரில் ஒருவர் இப்போது இல்லை.. அவருக்கு என் அஞ்சலிகள்.