+2-வில் நிறைய மார்க் வாங்கி அண்ணா யுனிவர்சிட்டியில் B.Tech (industrial biotech) படித்தேன். படிச்சேன்னா, சும்மா இல்ல; காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், professors, ஏன் principal கூட 'யாரிந்தப் பொண்ணு' என்று வியந்து பார்க்கும்படி படிச்சேன். Biotech உலகத்தையே தலைகீழே புரட்டிப் போடவேண்டும் என்ற வெறியில் படித்தேன். ஆனால் final year முடிச்சவுடனே கல்யாணம்.
அவரைப் பார்த்தவுடனே என் கனவெல்லாம் மாறி, நினைவெல்லாம் அவராக ஆனேன். அப்புறமென்ன, ஒரு வருஷத்தில் அழகாக ந்ருத்யா பிறந்தாள். பின் என் கனவு நினைவு எல்லாம் ந்ருத்யாதான். ஒரு வினாடிகூட அவளைப் பற்றி சிந்திக்காமல் இருந்ததில்லை. அவளை யாரிடமும் விட்டு விட்டு ஒரு மணி நேரம்கூட என்னால் இருக்க முடிந்ததில்லை. அவளும் school போய் அடுத்து பிறந்த நரேஷும் kindergarten போயாச்சு. என் கணவர் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே 'பணத்துக்காக இல்ல. நீ படிச்ச படிப்பு வீணாக வேண்டாமே. நீ வேணா வேலைக்குப் போயேன். பசங்க ஸ்கூல் முடிஞ்சு கொஞ்ச நேரம் day care-ல இருக்கட்டும்' என்று சொன்னார். நாந்தான் பசங்களை day care-ல் விடப் பயந்து வேலைக்குப் போக மறுத்தேன்.
இப்ப ஒரு வருஷத்துக்கு முன்னால linkedIn network-ல சேர்ந்து தொலைச்சேன். என் கூடப் படித்தவர்களெல்லாம் career-ல நல்ல முன்னேறியிருக்கறதைப் பார்த்ததும் மனசு அடிச்சுக்க ஆரம்பிச்சுடுத்து. என்ன செய்ய!!. இவ்வளவு நாள் மறந்த கனவு இராப்பகலாக என்னை வாட்ட ஆரம்பித்தது. கணவரிடம் புலம்பித் தீர்த்தேன். அவரும் ' நீ ஒரு முறை வேலைக்குத்தான் போய்ப் பாரேன். குழந்தைகளுக்கோ உனக்கோ எந்த விதத்திலாவது இடஞ்சலாயிருந்தால் பிறகு விட்டுவிடலாம். try பண்ணாம இருந்துட்டு, பின்னால வருத்தப்படறதுல பிரயோஜனமில்லை' என்று advice செய்தார்.
ரொம்ப தயங்கி மெதுவாகப் போனமாதம்தான் வேலைக்கு apply செய்ய ஆரம்பித்தேன். என் அதிர்ஷ்டம் (அல்லது துரதிர்ஷ்டம்!!!) சென்ற வாரம் biomed கம்பெனியிலிருந்து interview letter வந்தது. இவ்வளவு சீக்கிரம் அதுவும் ஒரு பெரிய கம்பெனியிலிருந்து லெட்டர் வரும் என்று எதிபார்க்கலை. இன்னும் ரெண்டு நாள்ல interview. அதான் ஒருவாரமா biochemistry book-ஆ படிச்சுண்டிருக்கேன். என்னால நல்லா பண்ண முடியுமா என்று கவலை. எவ்வளவு முறை புத்தகங்களைப் புரட்டினாலும் திருப்தி வரமாட்டேங்கிறது.
என் பொண்ணு ந்ருத்யா நாளைக்கு நடக்கவிருக்கும் maths test-க்குப் படிச்சுட்டு POGOவில் 'சுனைனா' பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய friend phone பண்ணி ஏதோ சந்தேகம் கேட்க வருவதாக சொன்னாள். அவள் வந்தபின் ந்ருத்யா அவளுக்கு maths சொல்லிக் கொடுத்தாள். போகும்போது ந்ருத்யாவின் தோழி " நீ எப்படி இவ்வளவு கூலா இருக்க. எனக்கும் உன்ன மாதிரி இருக்கணும்னு ஆசையா இருக்கு" என்றாள். " அதுவா, நீயும் எங்கம்மா சொன்ன tips எல்லாம் follow பண்ணு. சீக்கிரம் நீயும் என்ன மாதிரி ஆயிடுவே. எப்பவும் புக்கும் கையுமா இருந்தா எங்கம்மாவுக்குப் பிடிக்காது. படிக்கிற நேரம் முழுக் கவனத்தோட படிக்கணும். புரிஞ்சிண்டு படிக்கணும்னு சொல்லுவார். அப்படிப் புரிஞ்சிண்டு படிச்சால் ஆயுசுக்கும் மறக்காது. அப்படித் தெளிவா படிச்சதால என்னால் நல்லா எழுத முடியும் என்கிற முழு நம்பிக்கையோட இருந்தால் exam fear வராதுன்னு சொல்லுவார். சின்ன வயதிலேர்ந்து அதை practice செய்யறேன். அதனால் இந்த sixth standard exam எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. நீயும் இத try பண்ணிப் பாரு" என்றாள். அதைக் கேட்டு என் கணவர் என்னைப் பார்த்து சிரித்தார். என்னை சூழ்ந்திருந்த திரை சட்டென்று விலகி நான் தெளிவானேன். Lehningher principles-ஐக் கீழே வைத்துவிட்டு நம்பிக்கையுடன் என் மகன் நரேஷுடன் car race விளையாடச் சென்றேன்.
13 comments:
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
sontha kathaya illai verum kathai mattuma? ethuvaga irunthalum nandraga ullathu
நன்றி ஸ்ரீராம் & L.K.
L.K., கதை எனக்கு சொந்தம். ஆனால் சொந்தக் கதை இல்லை. ஹி ஹி.
ஸ்ரீராம், உங்கள் வாழ்துக்களை ந்ருத்யாவின் அம்மாவிற்கு அனுப்புகிறேன்.
--கீதா
hmm sari sari
confusion இல்லாமல் இருக்க இப்பொழுது பேரைக் குறிப்பிட்டு இருக்கிறேன்.---கீதா
கதைக்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு இருக்குன்னு புரியல.
கல்யாணம், குழந்தைகள் என்று ஆன பிறகு, கணவன் மனைவி இரண்டு பேருமே அவரவர் தொழிலில் முன்னேற வேண்டும் என்று எண்ணினால், அவர்களுக்குள் பரஸ்பர புரிந்து கொள்ளல் மிக மிக அவசியம். இருவர் இடையே அது இல்லாத பட்சத்தில், யாருடைய முன்னேற்றம் முக்கியமோ, குடும்ப நலன் கருதி, மற்றவர் விட்டுக்கொடுப்பதுதான் நல்லது. இந்த கதையில் ஸ்னேகாவை நரேஷ் புரிந்து கொண்டு, ஒத்துழைக்க தயாராய் இருக்கும்போது, வாய்ப்பை நழுவ விடாம, நேர்முக தேர்வில் அவங்க வெற்றி அடைய, என்னோட வாழ்த்தையும் சேர்த்து சொல்லுங்க.
எல்லாரும் வாசர்களுக்குப் போட்டி வைக்கிறாங்க. நானும் ஒன்று வைக்கிறேன்.
இந்த கதைக்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு என்று 2 வரிகளில் சொல்லுங்கள்.--கீதா
கதைக்கும், தலைப்புக்கும் என்ன தொடர்பு இருக்குன்னு புரியட்டாலும், நீ கேட்டதால நானும் முயற்சி பண்றேன்.
அறுபடை வீடுல தந்தைக்கு உபதேசம் செய்தமலை, ஸ்வாமி மலை. இந்த கதைல, பொண்ணு ந்ருத்யா, பேசினத கேட்டு அம்மா சினேகாக்கு ஒரு தெளிவு கிடைக்கற மாதிரி இருக்கறதால 'ஸ்வாமி மலை' அப்படின்னு தலைப்பு இருக்கு, சரியா?
nice title - touch your nose with your toes.
இது என்னங்க...அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பிரமணி போல அம்மாவுக்கு பாடம் சொன்ன...
சுப்பிரமணி பாடம் சொன்ன இடம் சுவாமிமலை..
A neat little story which many women can identify with. am sure it has given you a lot of satisfaction writing it.
முருகர் தந்தைக்கு உபதேசம் செய்த மலை , சுவாமிமலை . Similarly nrithyaa clears her mom's confusion. Hope i've got the connexion right..எப்போதிலிருந்து இப்படி ஞானப்பழமாக மாறினேன்னு எனக்கே தெரியலை ....
நன்றி மீனாக்ஷி, ஸ்ரீராம், சாந்தி & துரை.
சாந்தி, ஸ்ரீராம், மீனாக்ஷி, எல்லாருக்குமே 100% மார்க்ஸ்.
கதை பெரும்பாலான பெண்கள் வாழ்வில் நடப்பதுதான். அதான், தலைப்பாவது வித்தியாசமாக இருக்கட்டுமே என்று வைத்தேன்.--கீதா
என் சிறிய பையன் (ஐந்தாம் வகுப்பு) ஏதோ கணக்கு வழக்கு (வராது என்றால் அதானே !) கொண்டு வந்து என்னிடம் கேட்டான். நான் புரியாமல் விழித்தேன். பெரியவன் சலிசாக அதை சொல்லிக்கொடுத்துவிட்டான். நான் சீ எப்படித்தான் நான் பத்தாம் வகுப்பில் 98 வாங்கினேனோ என்று சொன்னேன்.
உடனே பெரியவன் - "அது போன மாசம்" என்று வடிவேலின் "வின்னர்" காமெடி சொன்னான் !! உண்மை தான்.
ஒரே சந்தோஷம் அது வந்ததோ இல்லையோ. இப்போது விற்பனை துறையில் நேற்று பேசியது இன்று மறந்தாலும் ஏதோ ஓடிக்கொண்டு இருக்கின்றது !!
// Shanthi Said: எப்போதிலிருந்து இப்படி ஞானப்பழமாக மாறினேன்னு//
சாந்தி, மீனாட்சியை தானே கேட்க்கிறாய் ?
Post a Comment