லணடன் நகரத் தெருக்கள் மிகச் சிறியதாக இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. நகர் முழுவதும் தெருக்களின் இருபுறமும் இடைவெளி இல்லாமல் அமைந்த பெரிய கட்டிடங்கள் இந்த தெருக்களை இன்னமும் சிறியதாகத் தோன்றச் செய்தன.
லண்டனில் ஒவ்வொரு intersection-னிலும் ரோட்டில் வலப்புறமாக வாகனங்கள் வருமிடங்களில் 'look right' என்றும், இடப்புறத்திலிருந்து வாகனங்கள் வருமிடங்களில் 'look left' என்றும் பாதசாரிகளுக்கு ரோட்டைக் கடப்பதற்கு உதவும் வகையில் எழுதியிருப்பது அதிசயமாக இருந்தது. இந்தியாவில் கிராமங்களில்கூட இப்படி எழுதிவைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.
லண்டனின் மக்கள் நெரிசல் நம்மைப் பயமுறுத்துகிறது. வேறு எந்த ஐரோப்பிய நகரத்திலும் இத்தனை நெரிசலைப் பார்க்கவில்லை. அதுவும் முக்கிய ஷாப்பிங் வீதிகளான oxford street, Regent street-ல் மக்கள் வெள்ளம்தான்!!. ஆனால் இத்தனைக் கூட்டம் இருந்தும் நகரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதைப் பாராட்டியே ஆகவேண்டும்.
இங்கு தெருக்களில் பலவிதமான வேஷம் போட்டவர்களையுமம் வித்தைக் காட்டுபவர்களையும் பார்க்கமுடிகிறது. இதோ மாதிரிக்கு ஒன்று:
லண்டன் நகரத்தில் இந்திய உணவு விடுதிகளுக்குப் பஞ்சமே இல்லை. மொத்த மக்கள் தொகையில் 6.6% இந்திய வம்சாவளியினராம்.
லண்டன் நகரில் தேம்ஸ் நதிக்கரையில் நின்றபோது எனக்கென்னவோ 'ஜென்மம் சாபல்யம்' அடைந்ததுபோல் ஒரு பெருமிதம் (கனடாவிலும் அமெரிக்காவிலும் பல பெரிய நகரங்களுக்குச் சென்றபோதுகூட அப்படி உணரவில்லை). தேம்ஸ் நதியின் குறுக்கே லண்டன் முழுவதும் 24 பாலங்கள் உள்ளன.
aerial view of the bridges
அவற்றில் வண்ணத்திலும் வடிவத்திலும் கவர்ந்தது ' tower bridge' தான். கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக திறந்து பின்னர் மூடிக் கொள்ளும் வகையில் கட்டப்பட்டது இது.
tower bridge
இதுதவிர லண்டன் ப்ரிட்ஜ், மிலினியம் ப்ரிட்ஜ் என்று 100மீ தொலைவிற்கு ஒரு பாலம் அமைந்திருக்கிறது.
லண்டனில் எங்களை மிகவும் கவர்ந்த விஷயம் லண்டனைச் சுற்றிப் பார்க்க யாருடைய guidance-ம் தேவையில்லை என்பதுதான். Big bus company போன்று ஓரிரண்டு கம்பெனிகளின் hop on- hop off பஸ்ஸில் ஒரு நாள் பயணச்சீட்டோ (அல்லது சலுகை விலையில் 2-3 நாட்களுக்கும் பயணச்சீட்டு கிடைக்கிறது) வாங்கிக் கொண்டு ஒரு பஸ்ஸில் ஏறினால் போதும். அதில் ஒலிபரப்பாகும் (அல்லது அமர்ந்துள்ள கைடு சொல்லும்) வர்ணனையைக் கேட்டுக் கொண்டே சென்றால் தேவையான நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு விருப்பமான சுற்றுலாத்தலத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் வேறு ஒரு பஸ்ஸில் பயணத்தைத் தொடரலாம். இந்த பஸ்களில் வர்ணனை பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகளில் இருப்பதால் எந்த நாட்டவரும் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
நாங்கள் முதலில் Madamme Tussaud's wax museum சென்றோம். அங்கு காந்தி, டெண்டுல்கர், அமிதாப், ஐஸ்வ்ர்யாராய் என்று இந்தியப் பிரபலங்களின் மெழுகுசிலைகளுடனும் , ஓபாமா, மைக்கேல் ஜாக்ஸன் என்று பிற நாட்டு பிரபலங்களின் மெழுகு சிலைகளுடனும் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பெரும்பாலான மெழுகுச் சிலைகள் தத்ரூபமாக இருந்தன. ஒரு ஹாலில் 30-40 சிலைகள் அங்கங்கே நிறுத்தப்பட்டிருக்க மிக அருகாமையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள முடிகிறது. சில நேரங்களில் மெழுகுச் சிலைகளுக்கும் அருகில் நிற்கும் உயிருள்ள மனிதர்களுக்கும் வித்தியாசம் சொல்ல முடியாத அளவு இந்த சிலைகள் தத்ரூபமாக அமைந்திருந்ததைப் பாராட்டியே ஆகவேண்டும்.
பின்னர் லண்டனின் landmark-ஆக விளங்கும் London eye என்கிற பிரும்மாண்டமான (433மீ உயரமானது!) giant wheel-ல் ஏறி லண்டனின் aerial view-ஐ ரசித்தோம். ஒரு மூடப்பட்ட பெட்டியில் (capsule) செல்வதால் அந்த உயரம் அச்சத்தை ஏற்படுத்துவதாக இல்லை.
capsule
Trafalgar square, Bigben, tower museum (இங்குகோஹினூர் வைரம் பதித்த அரசியின் கிரீடம் உள்ளிட்ட அரச குடும்பத்திற்குச் சொந்தமான தங்க ஆபரணங்கள், பாத்திரங்களைக் காணலாம்), Buckingham palace என்று பல இடங்களை hop on-hop off bus-ல் ஏறத்தாழ இருதினங்களுக்குள் சுற்றிப் பார்த்துவிடலாம்.
லண்டனில் நாங்கள் பார்த்த மற்றொரு சுவையான exhibition, 'Ripley's believe it or not'. இங்கு பல வினோதமான, அதிசயமான பொருட்களைச் சேகரித்துப் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். தீக்குச்சியால் செய்யப்பட்ட டவர் ப்ரிட்ஜ், ஜெம்ஸ் சாக்கிலேட்டால் வரையப்பட்ட படம், பூசணி விதையில் வரையப்பட்ட படம், மற்றும் கீழுதட்டால் மூக்கைத் தொடுபவர் என்று வினோதமான மனிதர்கள் பற்றிய குறிப்புகள் என்று பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது.
picture made with gems chocolate
J.T.Saylor who could touch his nose with his lips
ஒரு அரிசியில் last supper படத்தை வரைந்திருந்தது மிகவும் நன்றாக இருந்தது. குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது இந்தக் கண்காட்சி.
7 comments:
புகைப்படங்களும், கட்டுரையும் நன்றாக உள்ளது. லண்டனை கண் முன் நிறுத்தி விட்டது. நன்றி!
இரண்டாம் பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
very nice pics and writeup
thanks meenakshi and durai. geetha
>>இந்தியாவில் கிராமங்களில்கூட இப்படி எழுதிவைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.
இங்கிலிசு படிக்கத் தெரியாம போச்சுனா? அதேன்.
Durai, எந்தப் பக்கம் வாகனஙள் வரும் என்பது எளிதாக அறியக் கூடியதுதானே! அதற்குப் போய் ஒவ்வொரு தெருவிலும் ரோட்டில் எழுதியிருப்பது அதுவும் லண்டன் போன்ற பெரிய நகரில் எழுதியிருப்பது அதிசயமாக இருந்தது.--கீதா
ரொம்ப சுவாரசியமாவும் ஏக்கத்தை தூண்டுவதாகவும் இருக்கு ..
london என் வாழ் நாள் கனவு ..
நன்றி பத்மா. உங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும். ---கீதா
Post a Comment