Thursday 30 September 2010

எந்திரன்- திரை விமர்சனம்


            

 குவைத்தில் எந்திரன் வியழக்கிழமையே ரிலீசாகிவிட்டது. முதல் நாள் முதல் ஷோ பார்த்த அனுபவம் முதல் முதலாகக் கிடைத்தது.

                முதலில் பாராட்ட நினைப்பது ரஜினிகாந்தின் dedication-ஐத்தான்.  ஒவ்வொரு ஷாட்டிலும் அவரின் உழைப்பும் ஈடுபாடும் தெரிகிறது.  பின் பாதியில் ஷங்கர் விஸ்வரூபம் எடுக்கிறார்.  இயந்திரன் ரஜினியுடன் scientist ரஜினி போராடும் காட்சிகளில் ஷங்கர், ரஜினி & ரஹ்மான் துணையுடன் ருத்ரதாண்டவமே ஆடுகிறார்.  அந்த graphics காட்சிகள் தமிழ் சினிமாவை வேறு ஒரு லெவெலுக்குத் தூக்கிச் சென்றுவிட்டது.

             மோஹஞ்சதாரோ பாடலும் எந்திரா பாடலும் மிக நன்றாகப் படமாக்கப் பட்டுள்ளன.  மொஹஞ்சதாரோ பாடலுக்கு ஐஸ்வர்யா பச்சனின் நடனம் கொஞ்சமும் விரசமில்லாமல் நன்றாக இருந்தது.  எந்திரா (அரிமா அரிமா) பாடலிலும் அவர் நன்றாக நடனம் ஆடியிருக்கிறார்.

           

             ரஜினிகாந்திற்கு மேக்கப் போட்டவரைப் பாராட்ட வேண்டும்.  ஐஸ்வர்யா   பச்சன்கூட சில ஃப்ரேம்களில் வயதானவராகத் தெரிகிறார். ஆனால் ரஜினிகாந்த் இளமையாகத் தெரிகிறார்.

             இவ்வளவு செலவு செய்தவர்கள் கதையோட்டத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.  சுஜாதாவின் இறப்பு கதையோட்டத்தில் வரும் தொய்வில் தெரிகிறது.  ஆனால் graphics சிறப்பால் அதை compensate செய்துவிட்டார் ஷங்கர்.

             தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் மிகுந்த பொருட் செலவில், அதைவிட அதிக அளவு உழைப்பையும் கொட்டி எடுத்திருக்கிறார்கள்.  அவர்களைப் பெருமை படுத்தும் வகையில் நாம் இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்ப்போம்.  இந்தப் படத்தைத் திரையரங்கில்  பார்த்தால்தான் ரசிக்கமுடியும்.

9 comments:

சாய்ராம் கோபாலன் said...

அடிப்பாவி ? சூப்பராக கலக்கிட்டே. எல்லோருக்கும் முன் பார்த்து.

எந்தப்படம் என்று நினைவில்லை. நான் என்னுடைய பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடித்து பம்மலில் உங்கள் வீட்டில் ஒரு வாரமோ என்னவோ இருந்தேன். அப்போது தான் லக்ஷிமியுடன் தெரேஸா ஸ்கூல் போனேன். அப்போது நாம் எல்லோரும் ஷண்முக தியேட்டரில் ஏதோ ஒரு படம் பார்த்தோம். 1981 ஆம் வருடம் !

ஒரே ஜாலி மற்றும் கலாட்டா. என்ன படம் என்று நினைவு இல்லை.

ஸ்ரீராம். said...

வேகமான விமர்சனம்தான். ஆனால் ரொம்பச் சுருக்கமான விமர்சனம். ரஜினி மேக் அப் விவரங்கள் டிரெயிலர் பார்த்த போதே தெரிந்தது. எந்திரனுக்கு நான் படித்த முதல் விமர்சனம்! நன்றி.

ப.கந்தசாமி said...

முதல் வமரிசனம் எழுதியதற்கு பாராட்டுக்கள்.

geetha santhanam said...

நன்றி ஸ்ரீராம், சாய்ராம் & Dr.கந்தசுவாமி. இன்னும் விரிவாக எழுதினால் உங்களுக்குப் படம் பார்க்கும்போது சுவையாக இருக்காது, அதனால்தான். ---கீதா

Anonymous said...

That's one quick review geethu.Hats off! When we were watching the movie i was wondering why you were so lost in your thoughts. you were probably putting together your blog post right there.

Well made movie..entertaining first half and a visually spectacular second . Thalaivar rocks big time as always..

shanthi

geetha santhanam said...

thanks shanthi. yes, thalaivar rocks.--geetha

அப்பாதுரை said...

ஆக மொத்தம், படம் டப்பாவா?

geetha santhanam said...

இல்லை துரை, படம் டப்பா இல்லை, டாப்.--கீதா

அப்பாதுரை said...

just saw it on internet.. sad excuse for a movie. rajnikanth looks soooo old.

best joke in the movie: "adhu infrared remote thaan, naan paathukkaren" and blasts speakers... what the ..

ennavo... jananga rasichaa naama enna seyya mudiyum?