Sunday, 28 November 2010

அதிகமில்லை ஜெண்டில்மேன்!

               இரண்டு நாட்களுக்கு முன் தினமலரில்(26.11.2010) மழை வெள்ளத்தில் நீந்தி பள்ளி செல்லும் சிறார்களைப் பற்றிய செய்தி படித்ததும் மிகவும் வருத்தமாக இருந்தது.


அரசியல்வாதிகள் கோடி கோடியாக மத்தியிலும் மாநிலத்திலும் கொள்ளையடித்த பணத்தில் கொஞ்சம் செலவழித்து இந்த மலைவாழ் மக்களுக்கு நல்ல பள்ளியோ, இந்த ஆற்றைக் கடந்து போக ஒரு பாலமோ கட்டிக் கொடுத்திருக்கலாம்.

              இல்லை துணை இல்லாவிட்டாலும் துணிவு இழக்காத இந்தப் பெண்கள் (நன்றி: இந்த வார ஆனந்த விகடன்) போல





 பலருக்கு குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்றியிருக்கலாம்.

              இவர்களின் தேவையை நிறைவேற்ற தேவை, "அதிகமில்லை ஜெண்டில்மேன்! (உங்கள் கொள்ளையில்) ஒரு துளி போதுமே."

6 comments:

அப்பாதுரை said...

வருசத்துல ஆறு மாசம் வெள்ளமா - இதென்ன தமிழ்நாடு தானா? இத்தனை நாளா எப்படிக் கண்டுக்காம இருந்தாங்க?

இதையும் மீறி பள்ளிக்கூடம் போகும் பிள்ளைகளை பாராட்ட வேண்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம் .. என்னத்தைச் சொல்ரது..

பத்மா said...

நல்ல பகிர்வு .நன்றி

geetha santhanam said...

வருகைக்கு நன்றி பத்மா, முத்துலெட்சுமி, துரை. துரை, நான்கூட முதலில் கேரளாவோ என்று நினைத்தேன். மலைப்பகுதி என்பதால் மழை அதிகமோ? பாவம் அந்த பள்ளி செல்லும் குழந்தைகள்.

ஸ்ரீராம். said...

கொள்ளை அடித்ததில் ஒரு துளியா...ம்..ஹூம்...நம்ம ஊர்ப் பிள்ளைகளுக்கு இந்த சாக்கில் தன்னம்பிக்கையும், நீச்சலும் கற்றுக் கொள்கிறார்கள் என்று பாசிடிவ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்..

அப்பாதுரை said...

வீட்டு கூரைச்சுவரில் காயும் துணி; கீழே ஓரத்தில் காய்ந்த தென்ன ஓலை.. நல்ல போட்டோ விகடன்ல.