Monday, 8 March 2010

ஜோரான ஜோர்டன்-2 (பெட்ரா)

  
             ஹோட்டலிருந்து காரில் பெட்ராவை அடைந்தோம்.  எங்கள் டிரைவர் ஒரு லோக்கல் கைடை (guide) ஏற்பாடு செய்து கொடுத்தார்.  வழியில் கடைகளில் raincoat, mittens எல்லாம் விற்கிறார்கள்.  விலையை ஆளுக்கும், தேவைக்கும் ஏற்ப மாற்றுகிறார்கள்.  அதனால் அங்கு எது வாங்கினாலும் பேரம் பேசி வாங்குவது நல்லது.  நாங்கள் மூன்று raincoats வாங்கிக் கொண்டோம்.  என் அண்ணன் மட்டும் ஒரு டவல் வாங்கி லோக்கல் அரபிகளைப் போல் முகம், தலை எல்லாம் மூடிக் கொண்டு வந்தார்.  நல்ல வேளையாக சூரிய பகவான் கொஞ்சம் வெளியில் வந்து பெட்ராவை ரசிக்க எங்களுக்கு உதவினார்.



              முதலில் பெட்ராவைப் பற்றி சிறுகுறிப்பு.  முற்றிலும் பாறைகளே நிறைந்திருக்கும் இந்த இடத்தில் 2000 வருடங்களுக்கு முன்பே ஒரு அழகிய நகரை நிர்மாணித்து ஆட்சி செய்தது Nebataean இனத்தவர்கள்.  மழை காலத்தில் மட்டும் கிடைக்கும் நீரை சேமித்து விவசாயம் செய்யுமளவு புது தொழில் நுட்பங்களை அறிந்திருந்தனராம்.  அதுமட்டுமன்றி மழை காலத்தில் வரும் flash flood -ஐ சமாளிக்க அணைகளையும் கட்டியிருந்தது வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் பல காரணங்களால் முழுவதும் மக்கள் நடமாட்டமற்ற பகுதியாக இருந்த இந்த இடத்தை Johann Ludwig Burckhard  என்ற சுவிஸ் நாட்டுக்காரர்தான் 1812-ல் மீண்டும் கண்டுபிடித்தாராம்.

              பெட்ரா என்றால் பாறை என்று பொருளாம்.  பெயருக்கேற்ப நகரம் முழுதும் பிரும்மாண்டமான பாறைகள் நிறைந்திருக்கின்றன.  நுழைவாயில் இருக்கும் இடம் bab as siq எனப்படுகிறது. இங்கிருந்து பெட்ராவின் முக்கிய இடங்களுக்குச் செல்ல ஒட்டகம், குதிரை மற்றும் குதிரை வண்டிகள் கிடைக்கின்றன.  ஆனாலும் நடந்து சென்றால்தான் அதன் அழகை ரசித்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே செல்ல வசதியாக இருக்கும்.  இங்கு 15-20 மீ உயரத்திற்கு நிறைய வெள்ளை பாறைகளில் tombs இருக்கின்றன.



            நிறைய ஆடுகளையும் ஆடு மேய்பவர்களையும் வழி நெடுக பார்க்க முடிகிறது.  கொஞ்ச தொலைவிலேயே பாறைகளின் நிறம் சிவப்பு, பழுப்பாக மாறுகின்றது.  இந்த இடத்தை Siq என்று அழைக்கிறார்கள். இங்கு 30 -40மீ வரை உயரமாக இருக்கின்றன.  பிரும்மாண்டமான இந்த பாறைகளும் அதில் தோன்றும் விதவிதமான வண்ண வேறுபாடுகளும்(ரோஸ், பழுப்பு, கருப்பு) பிரமிப்பூட்டுவதாக இருகின்றன. பெட்ராவை இதனால் rosered city என்று அழைக்கிறார்கள்.

 


இங்கும் அதிகமாக tombs தான் இருக்கின்றன.  கடுமையான மழை மற்றும் நில அதிர்வுகளால் இந்த பாறைகளில் இயற்கை பல சித்திரம் மற்றும் சிற்ப வேலைப்பாடுகளைச் செய்திருக்கிறது.  அவைகள் மனிதனால் கொஞ்சம் highlight பட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.  இந்த புகைப்படத்தில் ஒரு  ஒரு கோணத்தில் மீன் போன்றும் இன்னொரு கோணத்தில் யானையின்  தலை போலும் தோன்றுவதைக் காணலாம்.

iiiiiii 


----------------------------------------------------தொடரும்

6 comments:

நிகழ்காலத்தில்... said...

தொடர் நன்றாக போகிறது நண்பரே..

தொடருங்கள்..

Anonymous said...

Is Durai your brother? He has not seem changed much. I have come to his place in Pammal and one of his sister wedding during early 1980s. You may not remember.

So nice to see your blog. rompa நல்லா இருக்கு. photo மட்டும் போடாம இடத்தையும் பத்தியும் எழுதியிருக்கிறது நல்லா இருக்கு. photos are very sharp and clear.

geetha santhanam said...

நன்றி 'நிகழ்காலத்தில்' நண்பரே. மேலும் தொடர்ந்து படித்து கருத்துரைத்து ஊக்கப்படுத்துங்கள். மொட்டைத்தலையுடன் குழந்தை ரொம்ப cute ஆக இருப்பதாக அந்தக் குழந்தையிடம் கூறவும்.---கீதா

நன்றி வேதா-ஷங்கர். பயணக் கட்டுரையைத் தொடர்ந்து படித்து கருத்துக்களை கூறுங்கள்.
துரை என் அண்ணன்தான். உங்களைப் பற்றி அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்.
---கீதா

Anonymous said...

Dear Friend,
Really too good ur travelogue.Please narrate more.Innum konjam ethir parkkirom.

Friendly,
Raja

geetha santhanam said...

thank you Mr.Raja. pl.keep visiting.-geetha

சாய்ராம் கோபாலன் said...

ஆங்கில "துரை"
ஷேக் "துரை" ஆகிட்டாரே ?

நிஜமாவே நல்ல இருக்கான், நல்லா சூட் ஆகிருக்கு !

"வென் யூ ஆர் இன் ரோம், பீ எ ரோமன்" என்பது போல் !