Monday, 8 March 2010

ladies special?!!!!

           நேற்று சர்வதேச மகளிர் தினம், அதுவும் 100-வது ச.ம.தி!!!.  எனக்கு இந்த மகளிர் தினம், காதலர் தினம், அன்னையர் மற்றும் தந்தையர் தினம் கொண்டாடுவதில் உடன்பாடு இல்லை.
           ச.ம.தியை ஒட்டி நம் பார்லிமெண்டில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பெரும்பாடுபடுகின்றனர்.   எதுக்குதான் இட ஒதுக்கீடு என்று வரைமுறை கிடையாதா?  M.P., M.L.A.,  எல்லோரும் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  திறமையும் செல்வாக்கும் இருந்தால் தேர்தேலில் நிற்க வாய்ப்பும், வெற்றியும் கிடைக்குமே?  இதற்கு எதற்கு இட ஒதுக்கீடு?!!!
            மேலும் இப்போது அரசியலில் முண்ணனியில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பெண் தலைவர்களின் செயல்பாடுகள் பெரும்பாலும் அறிவுபூர்வமாக இன்றி உணர்வுபூர்வமாகவே இருக்கிறது. இன்னும் சிலரோ கணவர் அல்லது கட்சி தலைவரின் கைப்பாவையாக பணியாற்றுகிறார்கள்.  இப்படியிருக்க எந்த தைரியத்தில் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்? அதுவும் 33% என்பது too, too ,too much ஆக இருக்கிறது.  
          இட ஒடுக்கீடு என்பது (திறமையற்றவர்களைக் கொண்டு) இட்டு நிரப்பதான் பயன்படுமே அன்றி மகளிருகோ, நாட்டிற்கோ இம்மியளவும் பயன் தரப் போவதில்லை!!!.
         இப்படியே போனால், இனி எல்லா விருதுகளுக்கும் கூட மகளிருக்கு இட ஒதுக்கீடு கேட்பார்கள் போலிருக்கு (சும்மா கொளுத்திப் போடுவோம்!!!) 

9 comments:

அமுதா கிருஷ்ணா said...

எனக்கும் இந்த தினம் கொண்டாட்டத்தில் உடன்பாடு இல்லை. எனக்கு 8-ஆம் நம்பர் கொஞசம் நல்ல நம்பர் இல்லை என்ற எண்ணம் உண்டு. எனவே இந்த தேதியை மாற்றி வேறு தேதியில் மகளிர் தினம் கொண்டாடலாம் மற்றவர்கள்...

சாய்ராம் கோபாலன் said...

இப்படி இட ஒதோக்கீடு என்று சொல்லிதான் என் பெண்டாட்டி பாதி கட்டில்லுக்கும் மேல் பிரண்டு படுத்து என்னை கிழே தள்ளிவிடுகின்றாளோ !!!

அட போங்கடா (டி) !

"உழவன்" "Uzhavan" said...

 
வித்தியாசமான பதிவு :-)

Anonymous said...

இட ஒதுக்கீடு, கால அளவு போன்றவை சமுதாய வளர்ச்சி முதிர்ச்சியின் அடையாளம். தொடர்ந்த வளர்ச்சிக்குத் தேவையான முறைகள். இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்த முறைகளைக் கடை பிடிக்கவில்லையென்றால் ஒரு சமூக, குடும்ப ஆக்கிரமிப்பு ஏற்படுமென்பது வரலாற்றில் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டினால் தான் இன்றைக்கு சமூகத்தின் பல தட்டுகளுக்கு படிப்பு வேலைவாய்ப்பு போன்றவை கிடைத்திருக்கின்றன. இவை இல்லாவிட்டால் முன்னேற்றம் தடைபடும். தேங்கும். These are part of a sound public policy. இதில் கௌரவக் குறைவு ஒன்றுமில்லை.
-அப்பாதுரை

meenakshi said...

பெரும்பாலும் பெண்கள் எல்லாம், அறிவு நிறைய இருந்தாலும், உணர்வுபூர்வமாதான் சிந்திச்சு முடிவெடுக்கறாங்க. நிறைய விஷயங்களுக்கு இப்படி எடுக்கற முடிவு சரி வரதில்லை. அதுக்காக ஆண்கள் எடுக்கற முடிவு எப்பொழுதுமே சரியாதான் இருக்கும்னு கிடையாது. ஆணோ, பெண்ணோ யாருக்கு திறமை இருக்கோ அவங்களுக்குதான் இடம் கிடைக்கணும்.

// இட ஒடுக்கீடு என்பது (திறமையற்றவர்களைக் கொண்டு) இட்டு நிரப்பதான் பயன்படுமே அன்றி மகளிருகோ, நாட்டிற்கோ இம்மியளவும் பயன் தரப் போவதில்லை!!!.//
ரொம்ப சரியா சொல்லி இருக்க கீது!

geetha santhanam said...

சாய்ராம், மீனாக்ஷி, உழவன், அமுதா, துரை --- வருகைக்கு நன்றி.
துரை, இடஒதுக்கீடு சமுதாய வளர்ச்சியின் அடையாளமா? ஒத்துக் கொள்ள முடியவில்லை. நாட்டை ஆளும், மக்களுக்கான முக்கிய முடிவுகளை எடுப்பவர்களை இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தேர்தலில் நிற்க வைப்பது நாட்டிற்குதான் கேடு. இதனால் உண்மையிலேயே திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிட்டாமல் போகலாம்.---கீதா

சாய்ராம் கோபாலன் said...

//meenakshi said...

பெரும்பாலும் பெண்கள் எல்லாம், அறிவு நிறைய இருந்தாலும், உணர்வுபூர்வமாதான் சிந்திச்சு முடிவெடுக்கறாங்க. நிறைய விஷயங்களுக்கு இப்படி எடுக்கற முடிவு சரி வரதில்லை. அதுக்காக ஆண்கள் எடுக்கற முடிவு எப்பொழுதுமே சரியாதான் இருக்கும்னு கிடையாது. ஆணோ, பெண்ணோ யாருக்கு திறமை இருக்கோ அவங்களுக்குதான் இடம் கிடைக்கணும்.//

WOW. Very good point.

சாய்ராம் கோபாலன் said...

//geetha santhanam said...

நாட்டை ஆளும், மக்களுக்கான முக்கிய முடிவுகளை எடுப்பவர்களை இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தேர்தலில் நிற்க வைப்பது நாட்டிற்குதான் கேடு. இதனால் உண்மையிலேயே திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிட்டாமல் போகலாம்.---கீதா//

என்ன சொன்னாலும் படித்தவர்கள் அரசியலில் இறங்க போவதில்லை. நாம் வெளியில் இருந்து பேசுவோம். நமக்கு நமக்குள்ளேயே பேச தான் தெரியும் ! சாரி to be candid.

உதிரி: சந்தடி சாக்கில் நானும் படித்தவன் போல் (நாம் என்று போட்டுவிட்டேன் ! actually நீங்கள் !)

geetha santhanam said...

'என்ன சொன்னாலும் படித்தவர்கள் அரசியலில் இறங்க போவதில்லை. நாம் வெளியில் இருந்து பேசுவோம். நமக்கு நமக்குள்ளேயே பேச தான் தெரியும் !'

சாய்ராம், சரியாகச் சொன்னாய். ஆனாலும்,
இந்த விஷயத்தில் (மகளிர் இட ஒதுக்கீடு மசோதா) பேசுவதைத் தவிர நாம் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை.
நீயும் நன்கு படித்தவர்தானே. படிப்பு என்பது ஓட்டப் பந்தயத்திற்கு எடுக்கும் பயிற்சி போன்றது. பந்தயத்தில் வெற்றி பெற பயிற்சி மட்டுமே போதாது. ----------கீது