அங்கிருந்து dead sea, இஸ்ரேல் எல்லை வரை பார்க்க முடிந்தது. மோஸஸ் வைத்திருந்த brass serpent மற்றும் ஜீஸஸ் சிலுவையில் அறையப்பட்டதையும் குறிக்கும் வகையில் serpentine cross வைக்கப்பட்டுள்ளது.
நீபோ மலையைப் பார்த்த பின்னர் அம்மான் ஜெனீவா ஹோட்டலில் இரவைக் கழித்தோம்.
மறுநாள் காலையில் பழங்கால நகரமான ஜெராஷ் நகரைப் பார்க்கக் கிளம்பினோம். ஜெராஷ் நகரம் அம்மானிலிருந்து 48 கிமீ தொலைவில் இருக்கிறது. இங்கு ரோமானியர்களால் நிர்மாணிக்கப்பட்ட அழகிய நகரம் அவர்களின் கட்டடக் கலையழகைப் பறைசாற்றுவதாக இருக்கிறது. கிட்டத்தட்ட கி.பி 90-கி.பி130 கட்டப்பட்ட பல கட்டிடங்கள் இன்றும் நிலைத்திருப்பது ஆச்சரியம்!!!. இடையில் மண்ணில் புதைந்த இந்த நகரம் Ulrich Jasper Seetzen என்ற ஜெர்மானியரால் அடையாளம் காட்டப்பட்டதென்றாலும், முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டது 1925-க்குப் பிறகுதான்.
ஒரு லோக்கல் கைடுடன் நாங்கள் ஜெராஷ் புராதான நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். மழை இன்றும் எங்களை விரட்டிக் கொண்டு வந்தது. குளிருக்கு அடக்கமாக கம்பளி உடைகளும், மழையிலிருந்து காக்க rain coat-ம் அணிந்து கொண்டு மலையேறத் தொடங்கினோம்.
நம் பயணம் தெற்கு வாசலிலிருந்து தொடங்குகிறது. வாயிலில் உள்ள Arch, Hadrian Arch எனப்படுகிறது. கி.பி.129-ஆண்டு ஹட்ரியன் என்ற அரசர் ஜெராஷுக்கு வந்த்தையொட்டிக் கட்டப்பட்டதாம் இது!!!.
அங்கிருந்து கொஞ்சம் தொலைவில் Hippodrome உள்ளது. கி.பி 2 அல்லது 3-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த Hippodrome , 245 மீ நீளமும், 52மீ அகலமும் கொண்டது. இந்த இடம் விளையாட்டுப் போட்டிகளும், குதிரை மற்றும் தேரோட்டப் பந்தயங்களும் (Benhur படத்தில் பார்த்திருப்பீர்களே அதைப்போல்) நடத்தப் பயன்படுத்தப்பட்டதாம்.
(hippodrome is seen on our left side)
அங்கிருந்து மேலும் மேலே ஏறிச் சென்றால் oval plaza என்று சொல்லப்படும் இடத்தை (90 மீ x 80 மீ) அடைகிறோம். இங்கு வட்ட வடிவில் நிறுத்தப்பட்டுள்ள உயர்ந்த தூண்களும் கற்களால் அமைந்த தரையும் அவர்களின் கட்டடக் கலை நிபுணத்துவதிற்கு ஒரு அறிமுகமாக இருக்கின்றன. அதற்கு எதிரில் கோவில்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இன்னும் கொஞ்சம் மேலே ஏறினால் (ஏறுவது உண்மையிலேயே கடினமாக இருந்தது) பிரமிக்க வைக்கும் பிரும்மாண்டமான ரோமன் தியேட்டரைப் பார்க்க முடிகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வண்ணம் அமைந்த இந்த தியேட்டர் முழுவதும் வெண்ணிறக் கற்களால் ஆனது. எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும் அண்ணனுடன் கடைசி row வரை ஏறிப் பார்த்துவிட்டேன்.
ஜெராஷில் மிகவும் பிரமிக்கவைக்கும் கட்டிடம் இதுதான் என்று சொல்வேன்.
பின்னர் பல சிதிலமடைந்த சர்ச் மற்றும் ரோமானியர்களின் கோவில்களைப் பார்த்தோம். இதற்குள் மழை வலுக்கத் தொடங்கியது. ஆனாலும் கவலைப் படாமல் எல்லா புராதானச் சின்னங்களையும் பார்த்துவிட்டுத்தான் திரும்பினோம்.
(a temple)
( தரையில் டிசைன் தெரிகிறதா?)
--
(புராதான நகருக்கு இடையே இன்றைய ஜெராஷ் நகரம்)
இந்த நகரை நிர்மாணிக்க இத்தனைப் பெரிய கற்களை எப்படி ஏற்றிச் சென்றார்கள். நடந்து சென்று பார்க்கவே நமக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது!! அதுவும் அந்த ரோமன் தியேட்டர் கட்டியது உண்மையிலேயே வியக்கத்தக்கதுதான்!!!.
அந்த புராதான நகரின் அழகு, மழை மற்றும் குளிரை மறக்கச் செய்வதாக இருந்தது. கீழே இறங்கியவுடன் குளிருக்கு இதமாக ஒரு ஹெர்பல் டீ (உண்மையிலேயே சூப்பர்) குடித்தோம். சில souvenirs வாங்கிக் கொண்டு dead sea-யை நோக்கிப் புறப்பட்டோம்.
4 comments:
அருமை. படங்களும் விவரங்களும் அருமை. எங்களையும் அழைத்துப் போனதற்கு நன்றி.
சில போட்டோக்களைப் பாக்குறப்ப மழை துரத்தினதை நம்ப முடியலே! i think the alternating rain and shine made the whole experience memorable.
புராதான நகருக்கு இடையே ஜெராஷ் நகரம் தெரியும் படமும், oval plaza முழுவதும் தெரியற மாதிரி எடுத்திருக்கற படமும் ரொம்ப அழகா வந்திருக்கு. ரோமன் திரை அரங்கை மேல் படியிலிருந்து, கீழ் படி வரைக்கும் தெரியற மாதிரி படம் எடுத்திருக்கறது நல்ல யோசனை, படம் ரொம்ப பிரமாதமா வந்திருக்கு. இந்த அழகான திரை அரங்கை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்காம, ஜாலியா இருந்த இடத்துலேந்தே, இந்த அழகான படங்கள் மூலம் பாத்தாச்சு. படங்கள் எல்லாத்துக்கும், வரலாற்று குறிப்புகள் கூடிய விவரங்களை இயல்பா, அழகா எழுதி இருக்கே. படங்களோட, படிச்சபோது நானும் இந்த இடங்களுக்கெல்லாம் பயணம் செஞ்ச மாதிரி இருந்துது. நன்றி! ஆனா ஹெர்பல் டீ மட்டும் குடிச்ச மாதிரியே இல்லை. :)
நன்றி மீனாக்ஷி, ஸ்ரீராம்.
மீனாக்ஷி, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நடந்தால்தான் ஹெர்பல் டீ குடிச்சா மாதிரி இருக்கும்.
துரை, நீ சொன்னது போல் நாம் எல்லா இடங்களையும் பார்க்கும் வரை வெயிலும், முடிக்கும் தருவாயில் கனமழையும் நம் பயணத்தை சுவையானதாகவே ஆக்கியது.
---கீது
Post a Comment